Published:Updated:

பெண்கள் 20 - எண்ணமும் இலக்கும்

கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
கொண்டாட்டம்

கொண்டாட்டம்

2000 என்கிற புத்தாயிரம் ஆண்டில் பிறந்த அனைவருமே 2K கிட்ஸ்தாம். பீட்சா, பப்ஜி, கேட்ஜெட்ஸ், வெப்சீரிஸ் என செம டெக்கியாக வலம்வரும் இனிய தலைமுறை. இப்படி, 2019-ம் ஆண்டோடு டீன்ஏஜ்ஜில் இருந்து விடைபெற்று, 2020-ம் ஆண்டில் தங்கள் 20-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் 20 பெண்களிடம் ஒரு ஸ்வீட் சாட்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
நிவேதா
நிவேதா

நிவேதா, சென்னை

இந்த வருஷம் CAT பரீட்சை எழுதப் போறேன். அதுல பாஸாகிடணும். இதுதான் என்னோட புது வருடத் தீர்மானம். பர்த்டேல்லாம் எப்பவுமே பெருசா கொண்டாடுறதில்லை. இப்போதைக்கு பரதநாட்டியம், படிப்பு, CAT... இது மட்டும்தான் என் எண்ணமா இருக்கு. CAT-ல பாஸாயிட்டா வாழ்க்கை ஊலலலாதான்! சரி... 20 வயசானாலே அப்பா அம்மா, சொந்தக்காரங்க எல்லாம் உடனே ஏன்தான் கல்யாணம் பத்தி பேசுறாங்கன்னே தெரியலை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சௌமியா
சௌமியா

சௌமியா, சென்னை

பெரிய பொண்ணுங்கிற சந்தோஷமான ஃபீல் வந்திருக்கு. காலேஜ் முடிச்சதும் வேலைக்குப் போகணும். நான் சம்பாதிச்சு, பெத்தவங்களுக்குக் கொடுத்து அவங்க சந்தோஷத்தைப் பார்க்கணும். என்ன நடந்தாலும் வாழ்க்கையை சந்தோஷமா கடக்கணும். அவ்வளவுதான்... மத்தபடி எதிர்காலத்தைப் பத்தின யோசனையெல்லாம் பெருசா இல்லை.

2020-ம் வருஷம் 20 வயது ஆகப் போகுதுன்னு நினைக்கிறப்போ குட்டியா ஒரு சந்தோஷம். 20-ல் 20... இது செமையா இருக்குதுல!

அனுசுயா
அனுசுயா

அனுசுயா, சென்னை

ஸ்கூல்ல, என் ஃப்ரெண்டுகிட்ட வாங்கின பென்சில் இப்பதான் தொலைஞ்ச மாதிரி இருக்குது. அதுக்குள்ள எனக்கு 20 வயசு ஆகப்போகுது. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணி வெச்சுருவாங்கன்னுதான் தோணுது! 2020 வருஷத்துல பெத்தவங்க என் தலையில் பெரிய பாரத்தை இறக்கிவைக்கப் போறாங்க... வேணாம்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. அடுத்த 10 வருஷத்தில எனக்கு இரண்டு குழந்தைங்க இருப்பாங்க. அவங்களுக்காக வாழணும். ஸோ, கல்யாணத்துக்குள்ள எனக்காக வாழ்ந்திடணும். நிறைய புத்தகம் படிக்கணும். எப்பவும் சந்தோஷமா இருக்கணும்!

கோபிகா
கோபிகா

கோபிகா, சென்னை

எனக்கு பர்த்டே கொண்டாடுறதே பிடிக்காது. அப்படியே வளர்ந்துட்டேன். 2020-ம் வருஷத்திலேயும் அந்தக் கொள்கையை மாத்திக்கிறதா இல்லை. வீட்டுல எப்பவுமே கல்யாணப் பேச்சுதான். ஏன் தான் பெரிய பொண்ணா ஆனோம்னு இருக்கு. அம்மாகிட்ட இப்போ எதுக்கு கல்யாணம்னு கேட்டேன். படிச்ச உடனே கல்யாணம் பண்ணிடணும்; இல்லைன்னா வயசு போயிடும்னு கறாரா சொல்லிட்டாங்க.

வயசுதான் 20. ஆனா, இப்பவும் அந்த மயில்தோகை என் நோட்லதான் இருக்கு. இதை என் அப்பா அம்மாவுக்குச் சொல்லுங்க. பசங்க மட்டும் 20 வயசுல ஜாலியா இருக்காங்க... எங்களுக்கு மட்டும் கல்யாணமா? போங்கு... போங்கு!

கே. ரம்யா
கே. ரம்யா

கே. ரம்யா, திருச்சி

டீன்ஏஜ்லதான் ஜாலியா இருக்கமுடியும்கிற சித்தாந்தப்படி காலேஜ் வாழ்க்கையை கொண்டாடித் தீர்த்துட்டோம். இனி, ரொம்ப பொறுப்ஸா இருக்கவேண்டிய காலகட்டம். அதனால வாழ்க்கையைப் பத்தி கொஞ்சம் தீவிரமா யோசிச்சேன். இனி உருப்படியா போட்டித் தேர்வுக்குப் படிக்கலாம்னு தயாராகிட்டிருக்கேன்.

2020-ம் வருஷம், என் வயசும் 20 என்பதைப் பத்தி என் ஃபிரெண்ட்ஸ்கிட்ட பல வருஷமா சொல்லிட்டே இருப்பேன். என் 20-வது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அப்புறம் கிடைக்கிற நேரத்துல எல்லாம் மரக்கன்றுகளை நடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். நாம நல்லா இருக்கணும்னா அதுக்கு பூமியும் நல்லா இருக்கணும்ல... என்ன சொல்றீங்க?!

ச. அனிட்டா பிரி ராணி
ச. அனிட்டா பிரி ராணி

ச. அனிட்டா பிரி ராணி, திருச்சி

எனக்கு 2019-ம் வருஷம் மறக்க முடியாத சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. கல்லூரி காலம்... அடடா.. செமையா போச்சு!

எந்தக் கவலையும் இல்லாம கலகலன்னு ஓடிருச்சு ஒரு வருஷம். கடைசி செமஸ்டர்லேயாவது தூக்கத்தைக் குறைச்சுக் கிட்டு, நல்லா படிச்சு அரியர் இல்லாம பாஸாகிடணும்!

பின்னே, வீட்ல வாங்கிக்கட்டிக்கிறது யாராம்... எப்படியும் அடுத்த வருஷத்துல கல்யாணப் பேச்சை எடுத்திருவாங்க. பார்ப்போம். ஆல் இஸ் வெல்!

எஸ். மகேஸ்வரி
எஸ். மகேஸ்வரி

எஸ். மகேஸ்வரி, திருச்சி

2019... என் வாழ்க்கையில திருப்புமுனையை ஏற்படுத்தி, அடுத்த கட்டத்தை நோக்கி ஓடவெச்ச வருஷம். நான் ஆசையா எதிர்பார்த்துக்கிட்டிருந்த 2020-ம் வருஷம் வரப்போகுது. பரதம், கராத்தே கத்துக்கிட்டு இருக்கேன். அதுல அடுத்த லெவல் போறதுக்காக தீவிரமாகப் பயிற்சி எடுக்கறேன்.

என்னோட வயசும் வருஷமும் ஒரே நம்பர்ல இருக்கிறதுதான் 2020-ம் வருஷம் எனக்குத் தர்ற ஆச்சர்யம். இனியாவது பணத்தைத் தண்ணீரா செலவு பண்ணாம, சிக்கனமா இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். ஸோ, உண்டியல் வாங்கி அதுல சேமிச்சு வைக்கணும்கிறதுதான் புத்தாண்டுத் திட்டம். இதோ... கடைக்குப் போய் உண்டியல் வாங்கிட்டுதான் மறுவேலை!

க. சத்யதேவி
க. சத்யதேவி

க. சத்யதேவி, திருச்சி

2019-ம் ஆண்டு, மனசுக்கு நிறைவா இருந்தது. நான் நல்லா ஓவியம் வரைவேன். ஸோ.. என் எதிர்காலமும் ஓவியத்தையே சார்ந்திருக்கணும்னு தீர்மானிச்சிருக்கேன்.அதற்கான அடுத்தகட்ட பயிற்சிகளை இப்பவே எடுத்துட்டிருக்கேன். இதுவரைக்கும் டீன்ஏஜ் கெத்து இருந்தது. இனி பொறுப்பான பெண்ணா மாறிட வேண்டியதுதான். இப்படித்தான் ஒவ்வொரு வருஷமும் தீவிரமா உறுதிமொழி எடுக்கிறேன். ஆனா, செயல்படுத்த முடியாமல் போகுது. ஆனா, இந்த வருஷம் எடுத்த சபதத்தை நிச்சயம் செயல்படுத்தியே ஆகணும்!

நான்சி
நான்சி

நான்சி, மதுரை

சமூகத்துல எனக்கான ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்க நினைக்கிறேன். ஆகவே, அதிக பொறுப்புணர்வோடு நடந்துக்கிறதை இந்த ஆண்டுக்கான சபதமா எடுத்திருக்கேன்.

2019-ம் வருஷம் எடுத்த தீர்மானம், கோபத்தைக் கட்டுப்படுத்திக்கணும்கிறது தான். ஆனா, அதை கடைப்பிடிக்க முடியலை. ஸோ, அதையும் லீவ் எடுக்காம காலேஜ் போகணும்கிறதையும் இந்த வருஷம் கடைப்பிடிக்கலாம்னு இருக்கேன். 2020 ஜனவரி 1 அன்று சர்ச்சில் பிரார்த்தனையை முடிச்சுட்டு, முதியோர் இல்லத்துல பெரியவர்களுடன் புத்தாண்டு கொண்டாட ஆசைப்படறேன்.

பிரியதர்ஷினி
பிரியதர்ஷினி

பிரியதர்ஷினி, மதுரை

நான் காலேஜ் படிச்சுகிட்டே, வீட்டில் டியூஷன் எடுக்கிறேன். போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் டியூஷன் மாணவர்களோடு சேர்ந்து என் பிறந்த நாளைக் கொண்டாடணும். `எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சிரிச்சுக்கிட்டே எதிர்கொள்ளணும்'னு என் அம்மா அடிக்கடி சொல்வாங்க. அதை 2019-ம் ஆண்டில் கடைப்பிடிச்சேன். நல்ல மாற்றங்கள் கிடைச்சுது. இவ்வளவு வருஷமா பெத்தவங்க சந்தோஷத்துல மட்டும் பங்கெடுத்துக்கிட்டேன். இனி, அவங்க கஷ்டத்துலயும் பங்கெடுக்க நினைக்கிறேன். இதுதான் 2020-ம் ஆண்டுக்கான என் திட்டம்.

முகிலா
முகிலா

முகிலா, மதுரை

சின்ன வயசுல இருந்தே ஹாஸ்டல்லதான் தங்கிப் படிச்சேன். அதனால, இந்த வருஷமாவது என் பிறந்தநாளை அப்பா அம்மாகூட கொண்டாட ஆசைப்படறேன்.

போன வருஷம் நான் எடுத்த தீர்மானம், கோபத்தைக் குறைக்கணும்கிறதுதான். அதை செயல்படுத்தினப்ப நல்ல ரிசல்ட் கிடைச்சது.

நான் காபி பிரியை. இந்த வருஷம் காபி குடிக்கிறது உட்பட உணவு விஷயத்துல கட்டுப்பாட்டுடன் இருக்கணும்னு உறுதி எடுத்திருக்கேன். 2020-ம் ஆண்டில் நண்பர்கள், உறவினர்களையும் சந்தோஷமா வெச்சுக்க ஆசைப்படறேன்.

நாகஜோதி
நாகஜோதி

நாகஜோதி, மதுரை

டீன்ஏஜ் முடிஞ்சு 20 வயசுல அடியெடுத்து வைக்கிறதை நினைச்சா லைட்டா... இல்ல ரொம்பவே பயமா இருக்கு. 2019-ம் ஆண்டு, என் பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடினேன். இந்த வருஷமும் அங்கே போய் இன்னும் அதிக அளவில் உணவளிக்கணும்னு முடிவெடுத்திருக்கேன். இப்பலாம் வீட்ல ஒரே கல்யாணப் பேச்சுதான். விளையாட்டுதனமா இருந்துட்டு திடீர்னு பெரிய பொண்ணா நடந்துக்க முடியுமான்னு தெரியலை. ஆனா, பொறுப்புகள் அதிகமாகும் என்கிறது மட்டும் தெரியுது.

ரஞ்சனி
ரஞ்சனி

ரஞ்சனி, கோவை

இதுநாள்வரை ‘வளர்ந்த குழந்தை’ன்னு சொல்லி ஊரை ஏமாத்திட்டு இருந்தேன். இனி அப்படில்லாம் சொல்ல முடியாது. டீன்ஏஜ்ஜின் உச்சக்கட்டமா கொண்டாடித் தீர்த்த 19 வயது முடிஞ்சிருச்சு. இனி கடமைகளைக் கொண்டாட வேண்டிய கட்டத்துக்கு வந்துட்டேன்னு நினைக்கிறேன். அடுத்து படிப்பா, வேலையான்னு தெரியலை. ஆனா, யாரையும் சார்ந்து இருக்கக்கூடாதுங்கிற சபதத்தை எடுத்திருக்கேன். இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளத் தேவையான தன்னம்பிக்கையை வளர்த்துக்க போறேன். 2020-ல் என் 20 வயசு வரப் போகுதுங்கிறதுதான் செம ஸ்பெஷல்!

கீதா
கீதா

கீதா, கோவை

என் பர்த்டே மார்ச் மாசம் வரும். அப்போ பரீட்சைக்காக சின்சியரா படிச்சுட்டு இருப்பேன். எப்படி பிளான் பண்ணி பிறந்தநாள் கொண்டாட முடியும்? பில்கேட்ஸ் லெவலுக்கு உழைச்சு பிரபலமாகுறதுக்கான வழியை தேடுறதுதான் இந்த ஆண்டின் திட்டம். பிறருக்கு உதவி செய்கிற அளவுக்கு என்னை உயர்த்திக்கணும். இதுநாள் வரை விளையாட்டுப்பிள்ளையா இருந்துட்டேன். ஸோ, எதிர்காலம் பத்தின பயம் லேசா எட்டிப்பார்க்குது. ஆனா, எனக்குப் பிடிச்ச மாதிரி என் வாழ்க்கையை மாத்தணும்; சொந்த கால்ல நிக்கணும்!

ரம்யா
ரம்யா

ரம்யா கோவை

2020 எனக்கு ஸ்பெஷலா இருக்கப்போகுது. வீட்டில் மூத்த மகளா இருந்தாலும் தம்பியை விட எனக்குத்தான் செல்லம் அதிகம். இனிமேலும் அப்படி சாக்கு சொல்ல முடியாது. சாதனைப் பெண்களை முன்னுதாரணமா எடுத்துக்கிட்டு முன்னேறணும். பெண்களுக்கு பிரச்னைன்னு வந்தா குரல் கொடுக்கணும். இதுதான் என் 20-வது பிறந்தநாள் சபதம். இனியும் தாழ்வுமனப்பான்மை கொண்ட ரம்யாவாக இல்லாமல், தைரியமான `2020 ரம்யா'வா மாறணும்!

கோகிலவாணி
கோகிலவாணி

கோகிலவாணி, கோவை

எனக்கு வாழ்க்கை பற்றிய அறிதல்களைக் கொடுத்த 2019-ம் வருஷத்தைக் கடந்து 2020-க்குப் போறது, விளையாட்டோட நெக்ஸ்ட் லெவல் போற மாதிரி இருக்கு. என் வாழ்க்கையின் முதல் கால்பகுதியை கடந்துட்டேன். 19 வயசு வரை என் பிறந்தநாளை ஸ்பெஷலாக்க என் அப்பா அம்மா, நண்பர்கள் முயற்சி செய்வாங்க. இனி பொறுப்பாக இருக்க நானே நிறைய பிளான் போட வேண்டியதிருக்கும். யோசிச்சு நடைபோட வேண்டிய காலம் இதுன்னு மனசுக்குத் தெரியுது.

சங்கீதா
சங்கீதா

சங்கீதா, தேனி

2020-ல் வரப்போற பிறந்த நாளை நினைச்சா பயமா இருக்கு. வயசாகிருச்சோன்னு தோணுது. 2019-ம் ஆண்டு, எனக்கு சூப்பரா போச்சு. இந்த ஆண்டு கொண்டாடப்போற பிறந்தநாள் அன்று சாப்பாட்டை ஒரு கட்டு கட்டணும். நல்லா தூங்கணும். ஜாலியா இருக்கணும்.

நான் வருஷா வருஷம் நிறைய காலணிகள் பர்சேஸ் பண்ணுவேன். அதுதான் என்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கம். அதை இந்த வருஷத்துல இருந்து மாத்திக்கணும். ரொம்ப முக்கியமா என் குழந்தைத்தனத்தை மூட்டை கட்டணும்!

கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி

கிருஷ்ணவேணி, பெரியகுளம், தேனி.

நாங்கெல்லாம் அதிர்ஷ்டசாலிகள். ஒவ்வொரு வருஷமும் எங்க பிறந்தநாளும் வயசும் ஒண்ணாவே வரும். 2019-ல் 19 வயசு. 2020-ல் 20 வயசு. வாவ்!

பிறந்தநாளை ரொம்ப சிறப்பா கொண்டாடுறது எல்லாம் எனக்குப் பிடிக்காது. டீன்ஏஜ்ஜைக் கடக்கப் போறோம்கிறதே நீங்க சொல்லிதான் என் மனசுக்குப் புரியுது. என்னத்த சொல்ல... அந்தளவுக்கு மனசளவில் நாங்க இன்னும் குழந்தையாவே இருக்கோம்... நம்புங்க உலகமே! இனியாவது பார்த்துப் பக்குவமா நடந்துக்கிடணும்!

திவ்யதர்ஷினி
திவ்யதர்ஷினி

திவ்யதர்ஷினி, தேனி

2019-ம் வருஷம் சொல்லிக்கிற அளவுக்கு எந்தவித மகிழ்ச்சியையோ, அனுபவத்தையோ தரலை. பிறந்தநாளும் சிம்பிளாதான் போச்சு. அடுத்த வருஷம் ஆடம்பரம் இல்லாத ஒருநாளா என் பிறந்தநாளை கழிக்கணும். இதுதான் என் தீர்மானம்.

டிரஸ்ஸுக்கு நிறைய செலவழிக்கிற ஆள் நான். இனி, அதைக் குறைக்கணும். டீன்ஏஜ் தாண்டப்போறதை நினைச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. படிப்புல போட்டித் தேர்வுக்குத் தயாராகிட்டிருக்கேன். ஐ.ஏ.எஸ் ஆவதுதான் என் எதிர்கால லட்சியம். இந்த வருஷம் அதை நோக்கி அடியெடுத்து வைக்கணும்!

ஜனகவல்லி.தி
ஜனகவல்லி.தி

ஜனகவல்லி.தி, கைலாசப்பட்டி, தேனி.

காலேஜ் ஃபைனல் இயர், ஃபைனல் செமஸ்டர்ல என் வாழ்க்கை நின்னுட்டு இருக்கு. இனிமே ஃபிரெண்ட்ஸோட அதிக நேரம் செலவழிக்க முடியாது. எப்பவும் செல்போனும் கையுமா இருக்க முடியாது. வேலைக்குப் போறதா, மேற்கொண்டு படிக்கிறதாங்கிறதை முடிவெடுக்கணும்.

நான் செம முன்கோபி. அடுத்த வருஷத்திலேயாவது என் கோபத்தைக் குறைச்சு சாந்தமாகணும்னு நினைக்கிறேன். டீன்ஏஜ்னு ஹேப்பியா சுத்திட்டு இருந்ததெல்லாம் இனி நடக்காதுங்கிறதை நினைச்சா மனசு வலிக்குது. இட்ஸ் ஓகே... இட்ஸ் ஆல் இன் தி கேம்!

வெ.கெளசல்யா, படங்கள்: தே.தீக்‌ஷித், சு.ரூத்ஜான்