Published:Updated:

``வீடுதான் எங்க ஆபீஸ்!” - ஹோம் பிசினஸ் ஐடியாக்களில் கலக்கும் பெண்கள்

நிஷா
பிரீமியம் ஸ்டோரி
நிஷா

செ.சல்மான், ஜெ.முருகன், இரா.குருபிரசாத், கு.ராமகிருஷ்ணன், மு.கார்த்திக், லோகேஸ்வரன்.கோ - படங்கள்: கே.அருண், என்.ஜி.மணிகண்டன், ஈ.ஜெ.நந்தகுமார், அ.குரூஸ்தனம், ம.அரவிந்த்

``வீடுதான் எங்க ஆபீஸ்!” - ஹோம் பிசினஸ் ஐடியாக்களில் கலக்கும் பெண்கள்

செ.சல்மான், ஜெ.முருகன், இரா.குருபிரசாத், கு.ராமகிருஷ்ணன், மு.கார்த்திக், லோகேஸ்வரன்.கோ - படங்கள்: கே.அருண், என்.ஜி.மணிகண்டன், ஈ.ஜெ.நந்தகுமார், அ.குரூஸ்தனம், ம.அரவிந்த்

Published:Updated:
நிஷா
பிரீமியம் ஸ்டோரி
நிஷா

‘வீட்டிலிருந்தபடியே ஏதாச்சும் வருமானத்துக்கு வழிபார்க்கணும்’ என்பது பல பெண்களின் விருப்பம். அந்த விருப்பத்தை செயலாக்கிக் கலக்கிக்கொண்டிருக்கும் பெண்கள் சிலர் இங்கு பேசுகிறார்கள், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக.

``வீடுதான் எங்க ஆபீஸ்!” - ஹோம் பிசினஸ் ஐடியாக்களில் கலக்கும் பெண்கள்

டிஜிட்டல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கு!

டிஜிட்டல் கன்டென்ட் ரைட்டிங், வீடியோ எடிட்டிங் என 360 டிகிரியில் கலக்கி வருகிறார் கோவையைச் சேர்ந்த இளம் பெண் நிஷா. “பி.சி.ஏ முடிச்சப்போ யதேச்சையா மீடியால வாய்ப்புக் கிடைச்சது. நிறைய கத்துக்கிட்டே மாஸ் கம்யூனிகேஷன் படிச்சேன். அது என்னோட கிரியேட்டிவ் ஆர்வத்தை அதிகமாக்குச்சு. நிறைய கம்பெனிகள்ல வீடியோ எடிட்டிங் வேலை பண்ணிட்டு இருந்தேன். நாமளே ஃப்ரீலான்ஸரா பண்ணிப் பார்க்கலாம்னு, காசு சேர்த்து வெச்சு ஒரு நல்ல லேப்டாப் வாங்கினேன். கொரோனா டைம்ல வேலையை விட்டேன். ஆனாலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. வேலைக்குப் போயிட்டு இருந்தாக்கூட இந்தளவுக்கு வருமானம் வர்றது சந்தேகம்தான் எனும் அளவுக்கு இப்போ பிக் அப் ஆகியிருக்கு. வீடியோ எடிட்டிங்தான் பிரதானமா பண்றேன். காலேஜ், ஹாஸ்பிட்டல், திருமணம் மாதிரியான கமர்ஷியல், கிராஃபிக் டிசைனிங், புரொமோஷன் போஸ்டர், டப்பிங்னு வேலை போகுது. இன்னிக்கு டிஜிட்டல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கு. எழுத்து நல்லாயிருந்து, அவுட்புட்டை அருமையா கொடுத்தா தானா தேடி வருவாங்க. ஒரு நல்ல போன், லேப்டாப், டெஸ்க்டாப் வெச்சுட்டு வீட்டுலயிருந்தபடியே ஒரு மணி நேரத்துல 1,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.’’

``வீடுதான் எங்க ஆபீஸ்!” - ஹோம் பிசினஸ் ஐடியாக்களில் கலக்கும் பெண்கள்

மாசம் 30,000 ரூபாய் சம்பாதிக்கிறேன்!

தஞ்சாவூர் எழில் நகரில் வசிக்கும் கிருத்திகா, யோகா வகுப்புகள் மூலம் மாதம் 30 ஆயிரம் வருமானம் ஈட்டுகிறார். ‘`எனக்கு சின்ன வயசுல இருந்தே யோகாவுல ஈடுபாடு அதிகம். நான்காம் வகுப்புப் படிக்கும்போதே யோகா கிளாஸ் போக ஆரம்பிச்சு, வளர வளர அதுல கோர்ஸ்கள் முடிச்சேன். ப்ளஸ் டூ முடிச்சிட்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துல டிப்ளோமா அக்குபஞ்சர் படிச்சேன். வாரத்துல ரெண்டு நாள்கள்தான் செமினார் கிளாஸ் என்பதால, தஞ்சாவூர் பாரத் கல்லூரியில பி.எஸ்சி நியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ் சேர்ந்தேன். முடிச்சதும் ஒரு க்ளினிக்ல சேர நினைச்சப்போ, கொரோனா ஊரடங்கு ஆரம்பமாகிடுச்சு. சட்டுனு யோசிச்சு, ஆன்லைன்ல யோகா க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். கூடவே, உணவு ஆலோசனைகளையும் இலவசமா வழங்கினேன். சர்க்கரை, தைராய்டு உள்ளிட்ட நோயாளர் களுக்கு கண்கூடா பலன் தெரிஞ்சதால என் யோகா கிளாஸுக்கு வரவேற்பு அதிகமாச்சு. இப்போ ஆன்லைன்ல 20 - 30 பேருக்கும், வீட்ல நேரடியா 10 - 20 பேருக்கும் யோகா சொல்லிக் கொடுக்குறேன். மாசத்துக்கு 30,000 ரூபாய் வருமானம் கிடைக்குது!”

``வீடுதான் எங்க ஆபீஸ்!” - ஹோம் பிசினஸ் ஐடியாக்களில் கலக்கும் பெண்கள்

பெண் பிள்ளைகளை விட்டுப்போக முடியல, வீடே ஆபீஸ் ஆகிடுச்சு!

புதுச்சேரியைச் சேர்ந்த அனுஷ்யா, கைதேர்ந்த போட்டோ ஆல்பம் டிசைனர். திருமணம், பிறந்தநாள், மஞ்சள்நீர் உள்ளிட்ட விழாக்களுக்குப் புகைப்படக் கலைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களை தனது வீட்டி லிருந்தபடியே நேர்த்தியாக வடிவமைத்துக் கொடுத்து வருகிறார். ‘`காதல் திருமணம். கணவர் உடல்நலக் குறைவால் இறந்துட்டார். ரெண்டு பெண் குழந்தைகளோடு நிராதரவா நின்னேன். முதல் குழந்தையைப் பள்ளியிலும், ரெண்டாவது குழந்தையை டே கேரிலும் விட்டுட்டு, ஆல்பம் டிசைனர் ஒருத்தர்கிட்ட வேலைக்குப் போனேன். ஆனா, பெண் குழந்தைகளை யாரையும் நம்பி விட்டுட்டுப் போக மனசில்ல. அதனால் சுய உதவிக்குழு கடன் மூலம் கம்ப்யூட்டர் வாங்கி இந்தத் தொழிலை ஆரம்பிச்சேன். உடனே ஆர்டர் எல்லாம் கிடைச் சுடலை. போட்டோ லேப், போட்டோ ஸ்டூடியோக்கள்னு ஏறி இறங்கி னேன். என்னோட வொர்க் ஃபினிஷிங்கைப் பார்த்துட்டு தொடர்ச்சியா வேலைகொடுக்க ஆரம்பிச்சாங்க. நிறைய போட்டோகிராபர்களும் தேடிவர ஆரம்பிச்சாங்க. இருட்டைப் பாத்தாலே பயப்படற நான், இப்போ என் சொந்தக்கால்ல நிற்கறேன். ஒத்தை மனுஷியா குடும்பத்தை தாங்குறேன்!”

``வீடுதான் எங்க ஆபீஸ்!” - ஹோம் பிசினஸ் ஐடியாக்களில் கலக்கும் பெண்கள்

சைடிஷ், மெயின் வருமானம்!

மதுரை, முனிச்சாலை அருகில் வெங்கடாசலபதி தெருவில் தன் வீட்டு வாசல் முன் சைடிஷ் கடை போட்டிருக்கிறார் ஜெயந்தி. “வேலைக்குப் போகும் தம்பதியர், தனியா வசிக்குற பெரியவங்க, மேன்ஷன்வாசிகள், தினக்கூலிகள்னு இவங்களுக்கு எல்லாம் தேவைப்படுற, வீட்டுப் பக்குவத்துல வெஞ்சனக் கடைகள்னு சொல்லப்படுற விலை குறைந்த சைஷ் கடைகள் மதுரையில நிறைய இருக்கு. காரக்குழம்பு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அவியல், வறுவல்னு எல்லாமே ரூ. 10 முதல் ரூ. 20-க்குள்தான். என்னால வேலைக்குப் போக முடியல, தெரிஞ்சது சமையல்தான். என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போதான் இந்த ஐடியா தோணுச்சு. சில வருஷங்களா பண்ணிட்டு இருக்கேன். ரொம்ப ரிஸ்க் எல்லாம் இல்லை. வீட்டுக்கு சமைக்கிறதையே அதிகமா சமைக்கிறோம். வீட்டு வாசல்லேயே சேல்ஸ் பண்றோம். ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் கிடைக்கும். செலவு போக 1,500 நிக்கும். ரெண்டு பேரை சம்பளத்துக்கு வெச்சிருக்கோம். ஞாயித்துக்கிழமை லீவு. கஸ்டமர்கள் தேடி வர்றாங்க. ஜோரா போகுது!”

``வீடுதான் எங்க ஆபீஸ்!” - ஹோம் பிசினஸ் ஐடியாக்களில் கலக்கும் பெண்கள்

காலேஜ்ல படிச்சுட்டே, வீட்டுல இருந்துட்டே..!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள வளையாம்பட்டு பகுதி யிலிருக்கும் தன் வீட்டிலேயே ‘ஜீவி பிரைடல் ஸ்டூடியோ’வை நடத்தி கணிசமான வருமானத்தை ஈட்டி வருகிறார் 23 வயதாகும் கல்லூரி மாணவி ஜீவிதா. வேலூர் ஊரீஸ் கல்லூரியில் எம்.எஸ்.டபிள்யு மாணவி. ‘`பிரைடல் ஆர்டிஸ்ட் கோர்ஸ் முடிச்சிட்டு, சர்டிஃபைடு ஆர்டிஸ்ட்டா மூணு வருஷமா பிரைடல் மேக்கப் பண்ணிட்டு இருக்கேன். என் தொழிலுக்குத் தேவையான பொருள்களை நானே வாங்கிக்கிறதோடு, என் காலேஜ் ஃபீஸை நானே கட்டிக்கிறேன், என் செலவுகளைப் பார்த்துக்குறேன். மணப்பெண் அலங்காரம் மட்டுமில்லாம ஹேர்ஸ்டைல், மெஹந்தி, சாரி டிரேப்பிங், ஆரி வொர்க்னு இந்தத் துறையில் உள்ள எல்லா வேலைகளையும் செய்யுறேன். நார்மல் மேக்கப் ரூ.5,000, ஹெச்.டி மேக் ரூ.9,000னு வாங்குறேன். கொரியர் மூலமா சாரி ப்ரீ ப்ளீட்டிங்கும் செஞ்சு அனுப்புறேன். என் பிசினஸுக்கு சோஷியல் மீடியாதான் பெருசா கைக்கொடுக்குது. ஒரு இன்ஸ்டா அக்கவுன்ட் இருக்கா, வீட்டுல இருந்துட்டே கலக்கலாம் வாங்க!”

``வீடுதான் எங்க ஆபீஸ்!” - ஹோம் பிசினஸ் ஐடியாக்களில் கலக்கும் பெண்கள்

200 ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க!

வீட்டிலிருந்தபடியே சுயதொழில் முனைவோர் ஆவது எப்படி? தேனியைச் சேர்ந்த சுபத்ரா சொல்கிறார். ‘`பி.எஸ்சி முடிச்சதும் கல்யாணம். மதுரையில இருக்குற என் பெரியம்மா விஜயலட்சுமி, வீட்டில் இருந்தபடியே சோப் ஆயில், ஃபினாயில் தயாரிச்சு விற்பதை பார்த்துட்டு, கனரா வங்கி சார்பில் அதுக்காக நடத்தப்பட்ட பயிற்சியை எடுத்துக்கிட்டேன். வீட்டிலேயே சோப் ஆயில், ஃபினாயில் தயாரிக்க ஆரம்பிச்சதோடு நிறுத்திக்காம, யூடியூப் பார்த்து வாஷிங் லிக்விட், பாத்திரம் துலக்கும் லிக்விட்னு 15 பொருள்களை தயாரிக்கத் தொடங்கினேன். சாயங்காலம் தயாரிப்பு வேலைகளைப் பார்ப்பேன். காலையில கணவரையும், குழந்தைகளையும் அனுப்பிட்டு, ரெண்டு கட்டை பைகள்ல என் தயாரிப்புப் பொருள்களை எடுத்துட்டு, தேனி மெயின் வீதிகள்ல கஸ்டமர்களைத் தேடுவேன். இப்போ எனக்கு 200 ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருக்காங்க. 500 ரூபாய் முதலீட்டில்தான் தொழிலைத் தொடங்கினேன். இப்போ முதலீடு 8,000 ஆயிரம் ரூபாயா உயர்ந்திருக்கு. அதேபோல வருமானமும் உயர்ந்திருக்கு!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism