Published:Updated:

“பாசம், நேசம், சன்மானம்... என் சமையல்ல எல்லாமே கிடைக்குது!”

 கவிதா
பிரீமியம் ஸ்டோரி
கவிதா

அமெரிக்கா கவிதாவின் விருந்தோம்பல்

“பாசம், நேசம், சன்மானம்... என் சமையல்ல எல்லாமே கிடைக்குது!”

அமெரிக்கா கவிதாவின் விருந்தோம்பல்

Published:Updated:
 கவிதா
பிரீமியம் ஸ்டோரி
கவிதா

படம்: இ.பிரவின் குமார்

கடல் கடந்து சென்று பொருளீட்டுவோருக்கு மத்தியில் ஏராளமானோரின் அன்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் கவிதா. அமெரிக்காவின் ஆரிகன் (Oregon) மாகாணத் தில் வசித்துவருகிறார் இவர். அங்குள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் இந்திய மாணவர் களுக்கு மிகக் குறைவான விலையில் உணவு சமைத்துக் கொடுப்பதுடன், மொழி எல்லை களைக் கடந்து ஒற்றுமை உணர்வையும் விதைக்கிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த கவிதாவைச் சந்தித்தோம்.

“என் ரெண்டு பொண்ணுங்களும் மேல் படிப்புக்காக சென்னையிலேருந்து அமெரிக்கா போனாங்க. அதைத் தொடர்ந்து 2017-ல் என் கணவரும் நானும் அமெரிக்காவுல குடியேறி னோம்” - அயல்நாட்டு வாழ்க்கைக்கான கார ணத்துடன் உரையாடலைத் தொடங்கிய கவிதா, திருமணத்துக்குப் பிறகு, மாமியார் மற்றும் ஓரகத்திகள் மூலமாகச் சமையற் கலையைக் கற்றுள்ளார். நல்வாய்ப்பு எந்த ரூபத்திலும் வரலாம் என்பதற்கு உதாரணமாக, மாணவர்களுக்கு உணவு சமைக்கும் வாய்ப்பு கவிதாவுக்குக் கிடைத்திருக்கிறது.

“பாசம், நேசம், சன்மானம்... என் சமையல்ல எல்லாமே கிடைக்குது!”
“பாசம், நேசம், சன்மானம்... என் சமையல்ல எல்லாமே கிடைக்குது!”

“ஆரிகன் மாகாணத்திலிருக்கிற கார்வல்லிஸ் (Corvallis) நகரத்துல வசிக்கிறோம். இங்கிருக்கிற ‘ஆரிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டி’ங்கிற பிரபல மான கல்வி நிறுவனத்துல இந்திய மாணவர்கள் நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக் கிறாங்க. சுத்து வட்டாரத்திலேருக்கிற உணவ கங்கள்ல இந்திய உணவகங்கள்னு ரெண்டு தான் இருக்கு. அங்கே விலை, சுவைனு பல விஷயங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒத்து வரலை. அமெரிக்காவுல எங்களுக்குப் பழக்க மான இந்திய மாணவி ஒருவர், ‘என்னை மாதிரியே இங்கே தங்கிப் படிக்கிற இந்தியர் களுக்கு நீங்க சமைச்சுக்கொடுக்கலாமே’னு கேட்டாங்க. சமையற்கலையையும் ஓய்வு நேரத்தையும் பயன்படுத்திக்க நல்ல வாய்ப்பா அமையுமேன்னு புது முயற்சியை ஆரம்பிச் சேன்” என்று கூறுபவர், தினமும் அதிகாலை 3.30 மணிக்குச் சமையல் வேலைகளைத் தொடங்கி, கணவரின் உதவியுடன் 20-க்கும் அதிகமான மாணவர்களின் இல்லத்துக்கே உணவுகளைக் கொண்டு சேர்க்கிறார்.

“சப்பாத்தி, குருமா, சாதம், சாம்பார், கூட்டு, பொரியல்னு சமைப்பேன். அதை மதியம் மற்றும் இரவு வேளைக்கு நிறைவா சாப் பிடுற அளவுல ஒவ்வொரு டிபன் பாக்ஸ்ல யும் தனித்தனியே பார்சல் பண்ணிடுவேன். பல் மருத்துவரான என் கணவர் ஷங்கர் சுவாமிநாதன், இப்போ மெடிக்கல் கோடிங் வேலை செய்றார். தன் வேலைக்கு இடையே ரெண்டு மணி நேரத்தை எனக் காக ஒதுக்கிடுவார். அவர்தான் கார் ஓட்டு வார். தவிர காய்கறிகள் வாங்கிறது, உணவு களை பார்சல் செய்றதுலயும் அவர் உதவியா இருப்பார். என்கிட்ட உணவு வாங்கிற ஸ்டூடன்ட்ஸ் 12 மைல் தொலை வுக்குள்ளாற வெவ்வேறு இடங்கள்ல வசிக்கிறாங்க. ஒவ்வொருத்தர் வீட்டுலயும் அவரவருக்கான உணவைக் கொடுத்துட்டு, முந்தின தினம் கொடுத்த பையை கலெக்ட் பண்ணிப்பேன். வீட்டுக்கு வந்ததும் அடுத்த நாள் சமையலுக்கான வேலைகளை ஆரம்பிப்பேன்.

“பாசம், நேசம், சன்மானம்... என் சமையல்ல எல்லாமே கிடைக்குது!”

என்கிட்ட சாப்பாடு வாங்கிறவங்கள்ல குஜ ராத்தி மற்றும் சைவ உணவு சாப்பிடுற மாணவர்கள் தான் அதிகம். அமெரிக்கா மற்றும் இத்தாலி மாணவர்கள் சிலருக்கும் அவ்வப்போது சமைச்சுக் கொடுப்பேன்’’- பெருமிதத்துடன் கூறும் கவிதா, இந்த வேலையில் தனக்குக் கிடைக்கும் மதிப்புமிக்க சன்மானத்தை விவரித்தார்.

“படிப்புக்காகப் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி வெச்சுட்டு, ‘சரியா சாப்பிட்டாங்களா, நல்ல சாப்பாடு கிடைக்குமா?’னு புலம்புற பெற்றோர்களின் மனநிலையை நானும் எதிர் கொண்டிருக்கேன். அதனால, என்கிட்ட சாப் பிடுற பசங்க, வீட்டுச் சாப்பாட்டை மிஸ் பண்ணாம, உணவு விஷயத்துல உடல்நிலையைக் கெடுத்துக்கக் கூடாதுனுதான் லாப நோக்கத்துக்கு அப்பாற்பட்ட சேவையா இதைச் செய்யுறேன். அங்கிருக்கிற சுத்து வட்டார உணவகங்கள்ல ஒருவேளை உணவுக்கு 25 – 30 டாலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுது. ஆனா, நான் ரெண்டு வேளைக்கும் சேர்த்து 10 டாலர் மட்டும்தான் வாங்குறேன். இந்தத் தொகை சமையல் பொருள்கள் வாங்கிறதுக்குப் போதுமானதா இருக்கும். மத்தபடி என் உழைப்பு, லாபம்னு எதையுமே நான் கணக்கு பண்றதில்லை. ‘எங்கம்மா வின் கைப்பக்குவத்தை மிஸ் பண்றதில்லை’னு பசங்க அன்போடு சொல்லுற வார்த்தைகள்தான் எனக்கான பெரிய சன்மானம்.

என் சமையலைச் சாப்பிடுற மாணவர்கள்ல பலரும் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து அரட்டை யடிக்கிறது, விளையாடுறது, ஒண்ணா சாப் பிடுறதுனு அன்பைப் பகிர்வாங்க. இதனால பல தரப்பட்டவங்களோட கலாசாரம், உணர்வுகளைத் தெரிஞ்சுக்க முடியுது. நாம எங்க வசிச்சாலும், என்ன வேலை செஞ்சாலும், நமக்கான சந்தோஷத்தை நல்லபடியா உருவாக்கிக்க முடியும். அதைத்தான் நானும் செய்றேன்” - அக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கவிதா.