Published:Updated:

கடன் வாங்குவதில் இன்றைய பெண்கள்..! - ஓர் அலசல் பார்வை

பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள்

பெண்களுக்கென வடிவமைக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகள், கடன் திட்டங்களை முதலில் பரிசீலித்துவிடுவது நல்லது!

கடன் வாங்குவதில் இன்றைய பெண்கள்..! - ஓர் அலசல் பார்வை

பெண்களுக்கென வடிவமைக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகள், கடன் திட்டங்களை முதலில் பரிசீலித்துவிடுவது நல்லது!

Published:Updated:
பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள்
ண்களும் பெண்களும் சமமாகக் கருதப்படும் காலம் இது. அதிலும், பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கடன் வாங்கிக்கொண்டிருந்த நிலையில், பெண்களும் கணிசமாகக் கடன் வாங்கத் தொடங்கியிருக்கும் காலம் இது.

இன்றைக்கு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களும், சுய தொழில் செய்யும் மகளிரும் தங்கள் பெயரிலேயே கடன் வாங்குகிறார்கள். இந்தியப் பெண்கள் கடன் பெறுதல் தொடர்பான நடவடிக்கைகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர்களின் கடன் தேர்வுகள், அவர்களின் வாழ்க்கை இலக்குகளை அடைவதற்கு உறுதுணையாக நிற்கின்றன. 

கடன் வாங்குவதில் இன்றைய பெண்கள்..! - ஓர் அலசல் பார்வை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் (Transunion Cibil) சமீபத்திய ஆய்வுப்படி, கடன் குறித்து சுயமாக ஆராயும், முடிவெடுக்கும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2018 முதல் டிசம்பர் 2019 வரையிலான காலகட்டத்தில் 62% அதிகரித்துள்ளது. தங்கள் கனவுகளை நனவாக்க, கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்து பெண்கள் அதிகம் சிந்தித்துவருவதையே இது காட்டுகிறது.  

என்ன காரணம்?

கடன் வழங்கும் நிறுவனங்கள் நுகர்வோர் கடன் சுயவிவரத்தைச் (Profile) சோதித்துப் பார்க்கின்றன. இதில் சிபில் ஸ்கோர், கடன் தகுதி, கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை மதிப்பிடுவதற்கான அறிக்கைகள் ஆகியவை அடங்கும். அண்மைய ஆண்டுகளில், பெண்கள் கடன் வாங்குவது அதிகரித்துவருகிறது என்பதை அந்த அறிக்கைகள் சொல்கின்றன; கடன் குறித்த விவரங்களைப் பராமரிப்பதில் பெண்கள் அதிக அக்கறையுடன் செயல்படுகிறார்கள் என்பதையும் சொல்கின்றன. எனவே, பல கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களை இலக்காகக்கொண்ட கடன் திட்டங்களையும், கிரெடிட் கார்டுகளையும் உருவாக்குகின்றன. இது இந்தியப் பெண்களிடம் அதிகரித்துவரும் கடன் பயன்பாடு, கடன் தேர்வுகள், கடன் விழிப்புணர்வு போன்றவற்றை நமக்குச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆண்களைவிட பெண்கள் அதிகம்!

டிரான்ஸ்யூனியன் சிபில் ஆய்வில், `பெண்கள் சராசரியாக 734 என்ற சிபில் ஸ்கோரைப் பெற்றிருக்கிறார்கள்’ என்பது சுவாரஸ்யமான தகவல். ஆண்களின் சராசரி சிபில் ஸ்கோர் 726. கடன் தொடர்பான விவரங்களைப் பேணுவதில் பெண்கள், ஆண்களைவிட சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இதன் காரணமாகப் பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தர நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நம் மத்திய அரசும், அதன் நிதி-பிரயாஸ் மற்றும் முத்ரா யோஜனா திட்டத்தின் (Nidhi-Prayaas and Mudra Yojana Scheme) மூலம் பெண்கள் இன்னும் அதிகமாக சுயதொழில் செய்ய ஊக்கப்படுத்திவருகிறது.

பெண்கள்
பெண்கள்

பெண்கள் சுலபமாகக் கடன் பெறுவது எப்படி?  

கடன் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் அதிகரித்துவருகிறது. எனவே, அவர்கள் நிதி இலக்குகளைப் பூர்த்தி செய்துகொள்ள, அவர்களின் கடன் பெறும் தகுதியை எப்படி உயர்த்திக்கொள்வது என்று பார்ப்போம்.

1. கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பித்தல்!

கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்கள் பெற வேண்டும் என்பதற்காகப் பல்வேறு சலுகைகளை (கேஷ்பேக், கிரெடிட் புள்ளிகள்...) அளிக்கலாம். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் தேவைதானா என்று யோசியுங்கள்.

பெண்களுக்கென வடிவமைக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகள், கடன் திட்டங்களை முதலில் பரிசீலித்துவிடுவது நல்லது. ஒரே ஒரு கிரெடிட் கார்டை மட்டும் பயன்படுத்துவது சிறப்பு.

2. நுகர்வோர் கடன் வாங்கி, (Consumer Durable Loan) கடன் வரலாற்றை உருவாக்குதல்! 

நுகர்வோர் கடனை வாங்குவது (சிறிய தொகைக்கு) ஸ்மார்ட்போன் அல்லது வாஷிங் மெஷினை இ.எம்.ஐ அடிப்படையில் வாங்குவது எளிது. இது எளிதில் திருப்பிச் செலுத்தக்கூடிய சிறிய இ.எம்.ஐ தொகை என்றாலும், நமது கடன் குறித்த நல்ல வரலாற்றை உருவாக்கும். மேலும், சரியான நேரத்தில் மாதத் தவணையைச் செலுத்திவரும் பட்சத்தில் சிறந்த கடன் சுயவிவரத்தையும் உருவாக்க உதவும்.  

பெண்கள்
பெண்கள்

3. கிரெடிட் கார்டு பில் மற்றும் இ.எம்.ஐ கடன் தவணையைச் சரியாகச் செலுத்துதல்!

அனைத்துக் கடன் நிலுவைகளையும் சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம், ஒவ்வொரு முறையும் பெண்கள் அவர்களின் பொறுப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி நல்ல கடன் சுயவிவரத்தை உருவாக்கலாம்.

4. கடன் பயன்பாட்டு விகிதத்தை அறிந்திருத்தல்! 

வங்கி அல்லது கடன் வழங்கும் நிறுவனம், கிரெடிட் கார்டில் வரம்புகளைத் தீர்மானித்திருக்கும். அதே சமயம், கடன் பயன்பாட்டை அந்த வரம்பில் 30 சதவிகிதத்துக்கும் குறைவாக வைத்திருப்பது நல்லது. உங்கள் கடன் பயன்பாட்டு விகிதத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம்.

5.பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன்களின் கடன் கலவையைப் பராமரித்தல்! 

பெண்கள்
பெண்கள்

பாதுகாப்பற்ற கடன்கள் (தனிநபர் கடன்கள், நுகர்வோர் பொருள்கள் கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள்..) மற்றும் பாதுகாப்பான கடன்கள் (வீட்டுக் கடன்கள், கார் கடன்கள், இரு சக்கர வாகனக் கடன்கள்...) என இரு வகைகளும் உங்களிடமிருந்தால், அதை வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் சாதகமாகப் பார்க்கும்.

6. மற்றவருக்காக ஜாமீன் கையொப்பமிட்ட / உத்தரவாதமளித்த கடன் கணக்கைச் சரிபார்க்கவும்!

மற்றொருவருக்காகக் கையொப்பமிட்ட அல்லது நீங்கள் உத்தரவாதமளித்த கடன் கணக்கில் தவறவிட்ட எந்தவொரு தவணையும் உங்களின் கிரெடிட் ஸ்கோரையும், கடன் குறித்த விவரங்களையும் பாதிக்கும். அந்தக் கணக்குகளைத் தொடர்ந்து கண்காணிப்பது, உங்கள் கிரெடிட் ஸ்கோர் வேறொருவரின் அலட்சியத்தால் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யும்.

7. சிபில் ஸ்கோர் மற்றும் அறிக்கைகளையும் தவறாமல் கண்காணித்தல்!

சிபில் ஸ்கோரையும், அறிக்கைகளையும் தவறாமல் சரிபார்ப்பது மிக அவசியம். காரணம், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சுணக்கம் இருந்தால், அது சிபில் ஸ்கோரை பாதிக்கும். இதனால் எதிர்காலத்தில் கடன் பெற முடியாத சூழ்நிலைகூட ஏற்படும்.

இந்த விஷயங்கள் அனைத்தையும் கவனித்துச் செயல்பட்டால், பெண்கள் எளிதாகக் கடன் பெற்று வாழ்க்கையில் முன்னேற முடியும்!