Published:Updated:

அடிக்குது குளிரு! - #HowtoEscape

அடிக்குது குளிரு
பிரீமியம் ஸ்டோரி
அடிக்குது குளிரு

#Lifestyle

அடிக்குது குளிரு! - #HowtoEscape

#Lifestyle

Published:Updated:
அடிக்குது குளிரு
பிரீமியம் ஸ்டோரி
அடிக்குது குளிரு

ஜெ.எஃப்

ரெண்டு துளி மழை விழுந்த பிறகுதான் பரண்ல கிடக்குற ரெயின்கோட், பீரோல ரொம்ப நாளா தூங்கிட்டு இருக்கிற கம்பளி, ஸ்வெட்டர்னு எல்லா பழம்பொருளையும் தேடிக் கண்டுபிடிப்போம். அப்புறம் `தெய்வத் திருமகள் - கிருஷ்ணா' மாதிரி சட்டைக்கு மேல ஒரு சட்டை, அதுக்கு மேல ஒரு ஸ்வெட்டரு, மண்டைக்கு மேல குல்லா, அதுக்குள்ள ஸ்காஃர்ப்னு எஸ்கிமோ ஸ்டைல்ல சுத்திட்டு இருப்போம்.

ஒரே நேரத்துல நிறைய ஆடைகளை அணியும்போது உடல் அளவுக்கு அதிகமா வெப்பமடையும். உடல் குளிர் நிலைக்குப் போகும்போது அதைச் சமாளிக்க நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வெள்ளையணுக்களை அதிகமா உற்பத்தி செய்யும். வெள்ளையணுக்கள்தான் உடலை தொற்றுநோய்கள், பிறநோய்கள்கிட்ட இருந்து பாதுகாக்கும். இது குளிர் காலத்துல நமது உடம்புல இயல்பா நடக்க வேண்டிய விஷயம். அதுக்கு எதிரா நாம அதிக ஆடைகளைக்கொண்டு தாக்குதல் நடத்தினா இந்தச் செயல் தடைப்படும்.

அடிக்குது குளிரு! - #HowtoEscape
குளிர் காலத்துல நமது உடம்புல இயல்பா நடக்க வேண்டிய விஷயத் துக்கு எதிரா நாம அதிக ஆடைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினா அது தடைப்படும்.

காட்டன் ஆடைகள் கோடைக் காலத்துக்குத்தான் பொருந்தும். மழை, குளிர்காலங்கள்ல காட்டன் ஆடைகளைப் போடும்போது உடலின் வெப்பத்தை அந்த ஆடை உறிஞ்சிக்கிட்டு உங்க உடலை குளிர்ல நடுங்க வைக்கும். சிந்தெடிக் மெட்டீரியல் ஆடைகள் குளிரை அதிகமா தாங்குறதோட உடலின் இயக்கத்தைச் சமன் செய்யும்.

போன வருஷம் மடிச்சு வெச்ச ஸ்வெட்டரை அப்படியே போட்டா, அதுல படிஞ்சிருக்கும் தூசிகள் மூலம் அலர்ஜி ஏற்பட்டு அது தும்மல், சளி பிரச்னைகளுக்கு அஸ்திவாரமா அமைஞ் சிடும். குளிர்கால ஆடை களைத் துவைத்து வெயிலில் காயவைத்து, உலர்ந்த நிலையில்தான் பயன்படுத்தணும்.