Published:Updated:

அடிக்குது குளிரு! - #HowtoEscape

அடிக்குது குளிரு
பிரீமியம் ஸ்டோரி
News
அடிக்குது குளிரு

#Lifestyle

ஜெ.எஃப்

“தூத்துக்குடில மூணே க்ளைமேட்தாம்ல... நல்லா வெயிலடிக்கும்... நிறைய வெயிலடிக்கும்... கொடூரமா வெயிலடிக்கும்” - நடிகர் விவேக்கின் பிரபல திரைப்பட வசனம் இவை. தூத்துக்குடி மட்டுமல்ல; சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இதுதான் நிலை. அதனால் தான் கொடூரமா வெயிலடிச்சாலும் சர்வ சாதாரணமா சமாளிக்கிற நம்மளால, சில நாள்கள் மழை, குளிரை சமாளிக்க முடியாமப் போயிடுது.

‘குளிரை சமாளிக்கிறேன் பேர்வழி’ என்று நாம் செய்யும் அலப்பறைகள் எல்லாம் வேற லெவல் காமெடி. குளிர்காலத்தில் நாம செய்யுற தவறுகள் என்னென்ன, அவற்றின் மருத்துவ அறிவியல் பின்னணி, சரியா செய்யுறது எப்படிங்கிறதுக்கான ஆலோசனைகள் இந்த இதழ்ல அங்கங்க கொடுக்கப்பட்டிருக்கு. படிச்சுத் தெரிஞ்சுகோங்க மக்கா!

அடிக்குது குளிரு! - #HowtoEscape

மழையோ, குளிரோ ஜன்ன லோரம் ஒரு காபி மக்கோட நின்னு...நானும் இளையராஜாவும்னு ஸ்டேட்டஸ் வைக்குறவங்க ஒரு பக்கம்னா, எங்க வீட்ல மொளகா பஜ்ஜி, முருங்கக்காய் சப்ஜின்னு ஸ்டேட்டஸ்ல வெறுப் பேத்துறவங்க இன்னொரு பக்கம். பொதுவாகவே மழை, குளிர் காலங்கள்ல வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிடுவோம். குளிர் உடலைத் தாக்கும்போது அதைச் சமாளிக்கிறதுக்காக நம்ம உடல் அதிகமான ஆற்றலைப் பயன்படுத்தும். அதன் காரணமா கலோரிகளும் அதிகம் செலவாகும். இதனாலதான் குளிர்காலத்துல நமக்கெல்லாம் அதிகம் பசிக்குது. கையில கிடைக்கிறதையும் நொறுக்குத் தீனிகளையும் சாப்பிடறதால உடல் எடை அதிகரிக்கும்.

இதைச் சமாளிக்கிறதுக்கு கொழுப்பு அதிகமா இருக்கும் உணவுகளைத் தவிர்த்துட்டு, நார்ச்சத்து அதிக முள்ள பழங்கள், காய்கறிகள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம்.

குளிர்காலத்துல சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படாமலும் பாத்துக்கணும். உணவுல மஞ்சள், இஞ்சி, மிளகு, சீரகம் போன்ற விஷயங்களைச் சேர்த்துக்கிட்டா ஆல் இஸ் வெல்!