Published:Updated:

வருமானத்தில் 20% முதலீடு... எதில், எப்படிச் செய்வது?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

#Utility

வருமானத்தில் 20% முதலீடு... எதில், எப்படிச் செய்வது?

#Utility

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

``வீடு, அலுவலகம், குடும்பம், குழந்தைகள், உறவுகள் என்று பெண்கள் பலவற்றையும் திறம்படக் கையாள்பவர்கள். ஆனால், முதலீட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் தயக்கம் ஏன்?'' என்று கேட்கும் நிதி ஆலோசகர் டாக்டர் ஏவி.செந்தில், பெண்கள் தங்களது வருமானத்தை, தங்களிடம் இருக்கிற பணத்தை எவ்விதம் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யலாம் என்பது குறித்த விரிவான தகவல்களைத் தருகிறார்.

20% சேமிப்பு!

``முதலீடு குறித்து உங்களிடம் நான் சொல்ல விரும்பும் முக்கியமான விஷயம்... உங்கள் வங்கிக் கணக்குக்கு எந்தவொரு வருமானம் வந்தாலும் சரி, அதிலிருந்து குறைந்தபட்சம் 20 சதவிகிதத்தை சேமிப்புக்காக எடுத்து வைத்துவிடுங்கள். அதாவது, செலவு செய்வதற்கு முன்பு சேமியுங்கள்.

20 வயதுகளில் நீங்கள் வேலைக்குப்போக ஆரம்பித்து விட்டால், உங்களது முதல் சம்பளத்திலிருந்தே சேமிப்பைத் தொடங்கிடுங்கள்.

வருமானத்தில் 20% முதலீடு...
எதில், எப்படிச் செய்வது?

சேமிப்பு என்றால், உண்டியலில் பணமாகச் சேர்த்து வைப்பதோ, வங்கி அக்கவுன்டில் தொகையாகச் சேர்த்து வருவதோ அல்ல. சேமிப்புக்காக ஒதுக்கும் தொகையை முதலீடாக்கு வதுதான் புத்திசாலித் தனம். புரிந்துகொள்ள முடியாத அல்லது `முதலீடு செய்தால் பணம் நிறைய திரும்பவரும்' என்பது போன்ற மயக்கும் வார்த்தைகளை நம்பி ஒருபோதும் பணத்தைப் போடாதீர்கள். அதிக வட்டி என்றைக்குமே அதிக ஆபத்தில்தான் முடியும்.

எதிலெல்லாம், எப்படி யெல்லாம் முதலீடு செய்ய லாம்?!

20% சேமிப்பு, முதலீட்டை எப்படி யெல்லாம் மேற் கொள்ளலாம் என்று பார்ப்போம்.

மூன்று மாதம் முதல் ஆறு மாதம்வரை ஆகும் செலவுகளுக்குத் தேவைப்படும் பணத்தை `எமர்ஜென்சி ஃபண்ட் (Emergency Fund)' ஆகச் சேமித்து வரலாம். பெருந்தொற்றுக் காலத்தில் பலருக்கும் ஏற்பட்ட வேலையிழப்பு போல ஏதேனும் அவசர நிலை ஏற்படும்போது இந்தப் பணம் உங்களுக்கு மிகவும் கைகொடுக்கும். இதை வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டாகவோ, லிக்விட் மியூச்சுவல் ஃபண்டாகவோ சேமிக்க லாம்.

உங்கள் குடும்பத்தை யார் கரையேற்றுகிறாரோ அவருக்குக் கட்டாயம் ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் (Term Insurance) எடுங்கள். அந்தக் கரையேற்றும் நபர் நீங்களாக இருப்பின் உங்களுக்கு நீங்களே ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, புகைப்பழக்கம் இல்லாத 30 வயது நபர் 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால், அதற்கு மாதம் 750 ரூபாய், அதாவது ஒரு நாளைக்கு 25 ரூபாய் என்கிற கணக்கில் பணம் சேர்த்தால், இந்த 750 ரூபாய்க்கான பணத்தை நீங்கள் எளிதாகச் சேர்த்துவிடலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருமானத்தில் 20% முதலீடு...
எதில், எப்படிச் செய்வது?

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (Public Provident Fund), சுகன்யா சம்ரிதி திட்டம் (Suganya Samriddhi Scheme), தேசிய பென்ஷன் திட்டம் (National Pension Scheme) போன்ற அரசின் சிறப்பான நீண்ட காலத் திட்டங்களில் சேமிக்க லாம்.

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் வாலன்டரி பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்தை (Voluntary Provident Fund) செயல்படுத்துகிறது என்றால் அதிலும் சேமிக்கலாம்.

மேற்சொன்ன சேமிப்புகளைச் செய்த பிறகு, பணம் மீதமிருந்தால் நிஃப்டி - இ.டி.எஃப் (Nifty ETF) அல்லது சென்செக்ஸ் இ.டி.எஃப் (Sensex ETF) போன்ற இன்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்டு களில் (Index Mutual Fund) அதாவது, ஸ்டாக் மார்கெட்டில் துறை சார்ந்த ஆலோசகரின் அறிவுரையின் கீழ் முதலீடு செய்வது சிறந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தங்க முதலீடு... ஆண்டுக்கு 2.5% வட்டி!

உங்களது 20% சேமிப்பில் 5% சேமிப்பைத் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். தங்கத்தை நகை களாகவோ, காசு களாகவோ வாங்காமல் கோல்டு இ.டி.எஃப் (Gold ETF) அல்லது சவரன் கோல்டு பாண்ட் (Sovereign gold bond) போன்ற பத்திர வடிவங்களில் சேமியுங்கள். இதன் மூலம் உங்களது தங்கம் பேப்பர் வடிவில் பாதுகாப்பாக இருப்ப துடன், ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கும்.

40 வயதில் நிதிச் சுதந்திரம்!

மேலே சொன்ன வற்றை யெல்லாம் செய்து முடித்த பிறகும் உங்களிடம் முதலீடு செய்ய நிறைய பணம் இருந்தால், சான்றிதழ் பெற்ற நிதி ஆலோ சகரைச் சந்தித்து முதலீடு குறித்த ஆலோசனைகளைப் பெறுங்கள். சந்தையில் உள்ள வாய்ப்புகள், உங்களது நிதிநிலை ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கேற்ற முதலீட்டுத் திட்டங் களை அவர் பரிந் துரைப்பார்.

வருமானத்தில் 20% முதலீடு...
எதில், எப்படிச் செய்வது?

மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது, சீரிய இடைவெளிகளில் முதலீட்டை பகுப்பாய்வு செய்வது, முதலீடுகளை இலக்குகளாக வரிசைப்படுத்துவது போன்றவற்றைச் செய்துவரும்போது, நீங்கள் 40 வயதுகளின் மத்திக்குச் செல்லும் போது உங்களுக்குத் தேவையான நிதிச் சுதந்திரத்தை அது கொடுத்துவிடும்'' என்கிறார் டாக்டர் ஏவி.செந்தில்.

செல்வம் வளரட்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

80%... எப்படிச் செலவு செய்யலாம்?

வருமானத்தில் 20 சதவிகிதத்தை சேமிக்க/முதலீடு செய்ய ஒதுக்கியாகிவிட்டது. மீதமிருக்கும் 80 சதவிகித வருமானத்தை எப்படிச் செலவு செய்யலாம்?

``ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள். பால், காய்கறி, மளிகை, கேபிள், வாகனங்களுக்கான பெட்ரோல், அலைபேசிக் கட்டணம் போன்ற செலவுகள், குழந்தைகளுக்கான டியூஷன், சிறப்பு வகுப்புகள் போன்றவற்றுக்கான கட்டணம், வயதானவர்களுக்கான மருந்து, மாத்திரைச் செலவுகள், ரிப்பேர் போன்ற திடீர் செலவுகள், வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ, வளர்ப்புப் பிராணிகள், ஸ்பா போன்றவற்றுக்கான செலவுகள், பொழுதுபோக்குகளுக்கான செலவுகள், நன்கொடை மற்றும் அறச்செயல்களுக்குத் தேவைப்படும் பணம் என்று ஒவ்வொரு வகையான செலவுக்கும் தேவையான பணத்தை ஆறேழு பாகங்களாகப் பிரித்து, தனித்தனிக் கவர்களில் போட்டு வைத்து அதற்குள் செலவு செய்யுங்கள். ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் நீங்கள் போட்ட பட்ஜெட்டோடு மேற்சொன்ன செலவுகள் சரியாகப் பொருந்துகிறதா என்பதைப் பாருங்கள். இந்த ஒப்பீடு மூலம் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்திடுங்கள்.

உங்களது வருமானத்தில் 2% - 3% தொகையை உங்களது துறை சார்ந்து உங்களை மெருகேற்றிக்கொள்ளப் பயன்படுத்துங்கள். புதிய சர்டிஃபிகேட் கோர்ஸ் படிப்பது, புது தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வது, நீங்கள் சார்ந்திருக்கும் துறைக்கு உதவும் வண்ணம் உங்களது கேட்ஜெட்களை அப்டேட் செய்வது என்று அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்'' என்கிறார் டாக்டர் ஏவி.செந்தில்.

எட்டுத் தவறுகள்

``சரியான விஷயங்களில் முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல தவறான விஷயங்களில் பணம் போடுவதைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம்'' என்று சொல்லும் டாக்டர் ஏவி.செந்தில் பட்டியலிட்ட செய்யக்கூடாத எட்டுத் தவறுகள் இங்கே.

தேவையில்லாமல் பர்சனல் லோன் வாங்குவது, கிரெடிட் கார்டுக்குக் கட்ட வேண்டிய டியூ (due) பணத்தில் மிகக்குறைந்த பணத்தை மட்டுமே செலுத்துவது போன்றவை வேண்டவே வேண்டாம்.

விளம்பரங்களுக்கு மயங்கி உங்களுக்குத் தேவையே இல்லாத பொருள்களை வாங்கிக் குவிப்பது வேண்டாம்.

அதிக செலவு செய்து குழந்தைகளைப் படிக்க வைத்தால்தான் அவர்களுக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்கிறோம் என்பதில்லை. தரமான கல்வியை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு குழந்தைகளின் பள்ளி, கல்லூரிகளைத் தேர்ந்தெடுங்கள்.

நண்பர்கள், உறவினர்களின் வற்புறுத்தலின் பேரிலோ, வங்கியில் வேலைசெய்பவர், தெரிந்தவர் என்பதாலோ, மற்றவர்கள் கூறுகிறார்கள் என்று உங்களுக்கு ஒத்துவராத திட்டங்களில் ஒருபோதும் பணத்தைப் போடாதீர்கள்.

வருமானத்தை உங்களது வங்கிச் சேமிப்புக் கணக்கில் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்டில் மட்டுமே வைப்பதைத் தவிர்த்திடுங்கள். இவற்றில் குறைந்த வட்டியே கிடைக்கும்.

வாடகை வருமே என்று நினைத்து பிளாட் வாங்குவது அல்லது மனை வாங்குவது புத்திசாலித்தனமான முடிவல்ல.

சரியான நேரத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் இருப்பதும் தவறுதான். குறிப்பாக, திருமணத்துக்குப் பிறகு, குழந்தைகள் பிறந்த பிறகு, வீட்டுக் கடன் வாங்கிய பிறகு டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் இருப்பது நல்லதல்ல.

சிலர் காப்பீட்டையும் முதலீடாகப் பார்ப்பதுண்டு. அது சரியல்ல. இது வேறு, அது வேறு. காப்பீட்டில், என்டோமென்ட் பாலிசிகள் 5% - 5.5% வருமானத்தைத் (Returns) தரலாம். அது குறைவே. யுலிப் (ULIP) பாலிசிகளின் விலைக் கட்டமைப்பு (Cost structure) அதிகம். மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தரும் பென்ஷன் பாலிசிகளைக் காட்டிலும் என்.பி.எஸ் (National Pension Scheme) எனப்படும் தேசிய பென்ஷன் திட்டம் சிறந்தது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism