Published:Updated:

iஅக்கா...

இந்த இதழ் முழுக்க முக்கியமான சில நிறங்களின் குணங்களைப் பற்றி, அவற்றின் உளவியல் பற்றிய குறிப்புகளைப் பகிரப் போகிறேன்.

பிரீமியம் ஸ்டோரி

இந்த இரண்டில் எது பெரிய பெட்டி?

iஅக்கா...

சரியான விடைக்கு அடுத்த பக்கம் வாருங்கள்.

நிறைய பேர் கணிப்பது கறுப்பு நிறப் பெட்டியைதான். ஆனால், இவை இரண்டுமே ஒரே அளவுதான். நிறங்கள் நம்மை ஏமாற்றும்; குதூகலிக்கும்; மகிழ்ச்சியூட்டும்; பதற வைக்கும். நிறங்களுக்கும் நம் மனநிலைக்குமான தொடர்புகளைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. இந்த இதழ் முழுக்க முக்கியமான சில நிறங்களின் குணங்களைப் பற்றி, அவற்றின் உளவியல் பற்றிய குறிப்புகளைப் பகிரப் போகிறேன். ரெடியா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவப்பு

சிவப்பு நிறத்தை நம் உடலோடு தொடர்புபடுத்துகிறார்கள் ஆராச்சியாளர்கள். தூரத்திலிருந்து பார்த்தாலே அருகிலிருப்பது போல் தெரியும். அதனால்தான் சிக்னலில் சிவப்பு பயன்படுத்தப் படுகிறது. இதே காரணத்தால்தான் இந்த நிற உடை அணிந்தால் அது மற்றவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கிறது. தொடர்ந்து சிவப்பு நிறத்தைப் பார்த்தால் நம் பல்ஸ் ரேட் கூட ஏறும் என்கிறார்கள். ஆக, ரெட் பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ்… நீங்கள் கொஞ்சம் இல்லை, நிறையவே தைரியமானவர்கள்.

பச்சை

ண்களை எந்த விதத்திலும் உறுத்தாத நிறம் பச்சை. ரொம்பவே பேலன்ஸ் ஆன நிறமும்கூட. அதனால், இதனோடு வேறு நிறங்களைச் சேர்த்தால் அவற்றின் விளைவுகளைச் சேர்த்துக் கொடுக்கலாம். உலகம் எவ்வளவு பச்சையாக இருக்கிறதோ, அவ்வளவும் நன்மை என்பதுதான் உண்மை. நீங்கள் நம்பாவிட்டாலும் அதுதான் நிஜம்.

கறுப்பு

ளியற்ற தன்மைதான் கறுப்பு நிறம். இதற்கென பிரத்யேக குணங்கள் கிடையாது. நம்மை நோக்கி வரும் சக்தி அனைத்தையும் தடுத்து, உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கறுப்புக்கு உண்டு. உளவியல் ரீதியாக இதற்கென நெகட்டிவ் தன்மைகள் இல்லையென்றாலும் இருளோடு இதை ஒப்பிட்டு தவறாகப் பார்க்கிறார்கள் பலர். உங்களுக்குக் கறுப்பு பிடிக்குமென்றால் கெத்தாகச் சொல்லுங்கள். தவறேயில்லை.

நீலம்

நீல நிறத்தை நம் மனதின் நிறம் என்கிறார்கள். நம் எண்ணங்களை மாற்றும் சக்தி நீல நிறத்துக்கு உண்டு. நிறங்கள் பற்றிய எல்லா உளவியல் ஆராய்ச்சிகளும் பொதுவாகச் சொல்லும் ஒன்று, நீலம்தான் உலகின் சாய்ஸ். தகவல்தொடர்புக்கு உகந்த நிறமென்றும் நீலத்தைச் சொல்லலாம்.நீலம் உங்கள் ஃபேவரைட் என்றால் நீங்கள் மனோபலம் வாய்ந்தவர்.

மஞ்சள்

ஞ்சள் உணர்ச்சிகளின் நிறம். நம் உணர்வுகளை பாதிக்கக்கூடிய நிறம். உளவியல் ரீதியாக மஞ்சள்தான் வலிமையான நிறம் என்கிறார்கள். நம் தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் உயர்த்தக்கூடிய நிறம் மஞ்சள். உங்களுக்கு மஞ்சள் பிடிக்குமென்றால் நீங்கள் எதையும் போராடி பெறக்கூடியவர். வாழ்த்துகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு