என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

iஅக்கா...

iஅக்கா
பிரீமியம் ஸ்டோரி
News
iஅக்கா

அன்பென்றால் அளவில்லாமல் கொடுத்துப் பாருங்கள். நாய்க்குட்டியைப் போல மகிழ்ச்சி உங்கள் காலைச் சுற்றும்.

பகிருங்கள்: உதவி என்பது பணமாக மட்டுமே இருப்பதில்லை. உங்களிடம் எது அதிகமாக இருக்கிறதோ அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.உங்களிடம் அதிகம் இருப்பது அறிவென்றால், சொல்லிக் கொடுங்கள்; நேரமென்றால் அதை பிறருக்கும் ஒதுக்குங்கள்; பணம் என்றால் கொடுத்து உதவுங்கள்; அன்பென்றால் அளவில்லாமல் கொடுத்துப் பாருங்கள். நாய்க்குட்டியைப் போல மகிழ்ச்சி உங்கள் காலைச் சுற்றும்.

எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்: ஒவ்வொருவருக்கும் அவரவர் இயல்பு, சூழல் பொறுத்து சில எல்லைகள் நிச்சயம் உண்டு. உதவி செய்வது, உடல் நலம் சார்ந்தது என அது எதுவாக இருந்தாலும் அந்த எல்லை எதுவென தெரிந்து, வகுத்துக் கொள்ளுங்கள். அதை மீறிய விஷயங்களில் கூடுதல் கவனத்தையும், குடும்பத்தின் கருத்துகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் மகிழ்ச்சிக்கு அச்சுறுத்தலான விஷயங்களைத் தவிர்க்க முடியும்.

கனவு காணுங்கள்: நீங்கள் எந்த வேலை செய்தாலும், இல்லத்தரசியாக இருந்தாலும் ஒவ்வொரு வருக்கும் கனவு இருக்க வேண்டும். அது உங்களைப் பற்றி இருக்கலாம். குழந்தைகள் சார்ந்து இருக்கலாம். எதுவாக வேண்டு மானாலும் இருக்கலாம். ஆனால், கனவு உங்களைத் துரத்தும். உங்களை பல மேஜிக்குகள் செய்ய வைக்கும். அதுவே உங்கள் மகிழ்ச்சியைக் கூட்டும்.

உங்கள் நலன் பேணுங்கள்: ஆங்கிலத்தில், Selfish, Self care & Self love என்பார்கள். சுயநலம் கூடாது தான். ஆனால், `செல்ஃப் கேர்' மற்றும் `செல்ஃப் லவ்' மிக மிக முக்கியம். உங்கள் நலனில் தான் உங்கள் மகிழ்ச்சி இருக்கிறது. அதை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்.பத்திரமாக உங்களையும் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

நன்றியுடன் தொடங்குவோம்: உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களைக் கவனியுங்கள். நல்ல உடை, நல்ல வீடு, நல்ல மனிதர்கள், நல்ல உணவு. இன்னும் என்னவெல்லாம் வேண்டுமென்பது இருக்கட்டும். முதலில் இருப்பவைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டாமா? இந்த வாழ்க்கைக்கு நன்றி சொல்லிப் பாருங்கள். உங்களின் மற்ற விருப்பங்கள் உங்களை வந்து சேரும். மகிழ்ச்சி கூடும்.

லகம் எதிர்பார்த்த அந்த மகிழ்ச்சியான புத்தாண்டு பிறந்திருக்கிறது. இந்த ஆண்டும் சரி, எந்த ஆண்டானாலும் சரி... நாம் நம் வாழ்க்கையில் சேர்க்க வேண்டிய முக்கியமான விஷயம் பொருளோ பணமோ அல்ல… மகிழ்ச்சிதான். அதை எப்படிச் சேர்ப்பது? எங்கு கிடைக்கும்? உங்களுக்கான மகிழ்ச்சி உங்களிடம்தான் இருக்கிறது. எப்படி என்பதை மட்டும் நான் சொல்கிறேன். முதலில், எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில், அது எனக்கான மகிழ்ச்சி.