லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

iஅக்கா...

iஅக்கா
பிரீமியம் ஸ்டோரி
News
iஅக்கா

ஃப்ரிட்ஜின் வெப்பநிலையை ஃபாரன்ஹீட் என்றால் 40 டிகிரிக்கும் செல்ஷியஸ் என்றால் 5 டிகிரிக்கும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ம் வீட்டில், வருடத்தின் எல்லா நாளும் வேலை செய்வது யார்? அம்மா, மனைவி என்ற தெரிந்த விடைகளைச் சொல்லாமல் வேறு யோசியுங்கள். வெகு சில சாய்ஸே உண்டு. அதில் தவிர்க்க முடியாத ஒன்று ஃப்ரிட்ஜ். மின்சாரம் இல்லாத நேரம் மட்டுமே அது இயங்காது. நாமாக அதை நிறுத்தவும் மாட்டோம். குடும்பத்தின் தேவைகளைத் தீர்ப்பதில் குளிர்ப்பதனப் பெட்டிக்கு முக்கியமான பங்கு உண்டு. ஆனால், அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்? முறையாகப் பார்த்துக் கொள்கிறோமா? `ஆம்' என்பவர்களும் `இல்லை' என்பவர்களும் இந்த இதழ் முழுக்க நான் சொல்லப்போகும் விஷயங்களைப் படித்த பின் சொல்லுங்கள், ‘நான் நல்லாதான் பார்த்துக்கிறேன்’ என... அப்போதுதான் `I அக்கா' நம்புவாள்.

iஅக்கா...

ப்ரிட்ஜின் வெப்பநிலையை ஃபாரன்ஹீட் என்றால் 40 டிகிரிக்கும் செல்ஷியஸ் என்றால் 5 டிகிரிக்கும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல், உள்ளிருக்கும் பொருள்களில் கிருமிகள் உருவாவதைத் தடுக்க முடியாது.

ஃப்ரீஸர் என்றால் 0 டிகிரி செல்ஷியஸுக்கும் குறைவாக இருக்க வேண்டும். மாமிசம் கெடாமல் இருக்க மைனஸ் 18 டிகிரி குளிர் வேண்டும்.

iஅக்கா...

ழங்களையும் காய்கறிகளையும் ஒன்றாக வைத்தால் அவை வீணாகும் வாய்ப்பு அதிகம். அவற்றை ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும் முன் கழுவக்கூடாது. கழுவினால், அதன் மேல் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். தண்ணீருடன் ஃப்ரிட்ஜில் வைத்தால் அந்தத் தண்ணீரே காய்கறிகள் வீணாகக் காரணமாகிவிடும்.

iஅக்கா...

முட்டைகளைக் கதவிலிருக்கும் டிரேயில் தான் பெரும்பாலும் வைப்போம். ஆனால், அது தவறான இடம். ஃப்ரிட்ஜுக்குள் சில இடங்களில் அதிக குளிர் இருக்கும். சில இடங்களில் குறைவாக இருக்கும். அடிக்கடி திறந்து மூடுவதால் கதவுப்பகுதியில் குளிர் குறைவாக இருக்கும். எனவே, முட்டைகளை உள் பகுதியில் வைப்பதே அவை அதிக நாள்கள் கெடாமல் இருக்க உதவும்.

iஅக்கா...

மேக்னடிக் கன்டெயினர்கள் கிடைக்கின்றன. குறிப்பிட்ட சில பொருள்களை மட்டும் இதில் போட்டு, ஃப்ரிட்ஜின் பக்கவாட்டில் ஒட்டி வைக்கலாம். எடை அதிகமான பொருள்களுக்கு இந்த ஐடியா உதவாது. அதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

iஅக்கா...

வ்வளவு பெரிய ஃப்ரிட்ஜ் என்றாலும் இடமில்லை என்பது பொதுவான பிரச்னை. அதற்கு நிறைய வழிகள் உண்டு. அதிலொன்று தான் இந்த க்ளிப். துணி காயப்போடுவது போல, இப்படித் தொங்க விடுவதால் இன்னும் நிறைய பொருள்களை ஃப்ரிட்ஜுக்குள் அடுக்கி வைக்க முடியும்.

iஅக்கா...

சில உணவுப் பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்தாலும் திறந்த பின் சில நாள்கள் வரை மட்டுமே அவை உண்ணத் தகுந்ததாக இருக்கும். ஆனால், அவை எப்போது திறக்கப்பட்டன என்பது நினைவில் இருக்குமா? அதற்குத்தான் இந்த லேபிள்.

iஅக்கா...

ப்ரிட்ஜைத் திறந்து எதையாவது எடுத்துச் சாப்பிடுவது என்பது குழந்தைகளின் டைம் பாஸ். அவர்களிடம் முதலில் இதைச் சாப்பிட்டால் ‘குட்' எனச் சொல்லிவிட்டால், அவர்கள் அதை நிச்சயம் ஃபாலோ செய்வார்கள். அதற்குத்தான் இந்த போர்டு. ஃப்ரிட்ஜுக்கு வெளியில், இந்த போர்டில் முதலில் எதைச் சாப்பிட வேண்டுமென்பதை மெனு போல எழுதி வைத்துவிடுங்கள். அப்புறம் பாருங்கள்.