லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

iஅக்கா

iஅக்கா
பிரீமியம் ஸ்டோரி
News
iஅக்கா

எந்த ப்ளக் பாயின்ட்டின் ஸ்விட்ச் என்றாலும் பயன்படுத்தாதபோது அணைத்து விடவும்.

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. அதிக பயன்பாடு காரணமாக மின்சாரக் கட்டணமும் இனி உயரும். கொஞ்சம் கவனமாகத் திட்டமிட்டாலே மின்சாரப் பயன்பாட்டை நம்மால் குறைக்க முடியும். அதன் மூலம் பணத்தையும் சேமிக்க முடியும். இந்த இதழில் #Power Saving டிப்ஸ் பார்க்கப் போகிறோம்.

டிவி, மொபைல் சார்ஜர், ஹோம் தியேட்டர் எனப் பல மின்சாரப் பொருள்களை நாம் அணைப்பதே இல்லை. பெரும்பாலும் ரிமோட்டில் ஆஃப் செய்துவிடுவோம். இதனால் பெரிய அளவில் மின்சாரம் வீணாகவில்லை யென்றாலும், தொடர்ந்து இதையே செய்தால் நிச்சயம் கணிசமான மின்சாரம் வீணாகும். எனவே, எந்த ப்ளக் பாயின்ட்டின் ஸ்விட்ச் என்றாலும் பயன்படுத்தாதபோது அணைத்து விடவும்.

ராசரியாக, நாம் பயன்படுத்தும் மின்சாரத்தில் 12 சதவிகிதம் விளக்குகளுக் கானது என்கிறது மின்சார வாரியம். கோடைக்காலம் என்பதால் இயற்கையாகவே அதிக வெளிச்சம் கிடைக்கும். எனவே, விளக்குகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம். பல்புகளையும் எல்.இ.டி. ஆக மாற்றிக் கொண்டால் இன்னும் மின்சாரம் மிச்சமாகும்.

சி அறையென்றால், படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக ஏசியை ஓடவிட்டு அறையின் வெப்பநிலையை ஒரு கட்டுக்குள் கொண்டு வரலாம். படுக்கச் செல்லும்போது, ஏசியை அணைத்துவிட்டு ஃபேன் போட்டுக் கொள்ளலாம். இதன்மூலமாக இரவு முழுக்க ஏசியைப் பயன்படுத்தாமல் இருக்கலாம். கணிசமான அளவுக்கு மின்சாரமும் மிச்சமாகும்.

கோடைக்காலம் என்பதால் எத்தனை ஃபேன் போட்டாலும் வியர்க்கும். உங்கள் அறையைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். ஜன்னலைத் திறக்க முடியுமா, ஃபேனின் இடத்தை மாற்றி வைக்க முடியுமா, டேபிள் ஃபேன் வாங்கினால் உதவுமா, ஏ.சி இருந்தால் அதன் ஃபில்டர் சுத்தமாக இருக்கிறதா என காற்று அதிகம் வரத் தேவையான அனைத்து விஷயங்களையும் கவனியுங்கள். அதன் மூலமே மின்பொருள் களின் நுகர்வு குறையும்.

ரவு நேரத்தில் புத்தகம் படிப்பவர்கள் அறை முழுவதும் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை அணைத்துவிட்டு டேபிள் லேம்ப் போல பயன்படுத்தலாம். இதற்கு `டாஸ்க் லைட்டிங்' என்று பெயர். எதற்காக வெளிச்சம் வேண்டுமோ அதற்கு மட்டுமே வெளிச்சம் தரும் விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தான் `டாஸ்க் லைட்டிங்' என்கிறோம்.

கால நிலையைப் பொறுத்து செட்டிங்ஸ் மாற்ற ஃபிரிட்ஜ் போன்ற கருவிகளில் வழியிருக்கும். அதைச் சரியாக மாற்றுவதன் மூலமும் மின்சாரத்தைச் சேமிக்கலாம். ஃபிரிட்ஜுக்குள் என்னென்ன பொருள்களை வைக்கிறீர்கள் என்பதையும் கவனியுங்கள். சூடான பொருள்களை உள்ளே வைக்கும் முன் ஆறவைக்க வேண்டும்.

வாஷிங் மெஷினை பலர் வாடகை ஆட்டோ போல பயன்படுத்துவ துண்டு. கொஞ்சம் துணிகளே இருந்தாலும் ஒரு மணி நேரம் ஓடவிட்டு. துவைத்து விடுவார்கள். அப்படிச் செய்யாமல், துணிகள் சேர்ந்த பின், ஷேர் ஆட்டோ போல பயன்படுத்தினால் மின்சாரமும் தண்ணீரும் மிச்சமாகும். வேலையும் குறையும்.