என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

iஅக்கா

iஅக்கா
பிரீமியம் ஸ்டோரி
News
iஅக்கா

மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல், அமைதியாக சாப்பிடுவது நல்லது.

‘நம் உணவு; நம் விருப்பம்’ என்பது சரிதான். ஆனால், அதைச் சாப்பிடும்போது உடனிருப்பவர் களைக் கடுப்பேற்றக் கூடாது. சிலர், வாயைத் திறந்தபடி மெல்லுவது உண்டு. சிலர் சத்தமாகச் சாப்பிடுவதுண்டு. இரண்டுமே நம் மீது மற்றவர்களுக்கு வெறுப்பை உண்டாகும். சாப்பிடும்போது, அக்கம்பக்கம் பார்த்துச் சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல், அமைதியாக சாப்பிடுவது நல்லது. அடுத்தவர்கள் மீதெல்லாம் சிதறும் அளவுக்குச் சாப்பிடக் கூடாது.

‘ஒண்ணு சொல்லணும். ஆனா, வேணாம்’ என ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கி யிருப்போம். ஆனால், நிறுத்தி விடுவோம். இப்படி செய்யக் காரணம், நாம் என்ன சொல்லப் போகிறோம் என்ற தெளிவே இல்லாமல் இருக்கலாம் அல்லது கேட் பவரிடம் இதைச் சொல்லலாமா, வேண்டாமா என்ற குழப்பம் இருக்கும். இரண்டுமே உங்களைப் பற்றிய நல்லெண் ணத்தை உருவாக்காது. எனவே, யோசித்துவிட்டு தொடங்குங்கள்.

ல்லா இதழ்களிலும் வீட்டைப் பற்றியே அதிகம் எழுதுவதாகச் சில வாசகிகள் கடிதம் எழுதி யிருந்தார்கள். ஆரம்பத்தில், தனிப்பட்ட முறையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள டிப்ஸ் போல கேட்டதால், இந்த இதழில் அப்படியே செய்துவிடலாம். நாம் செய்யும் எந்தச் செயல் அடுத்தவர்களைக் கடுப்பேற்றும்? அதைத் தெரிந்து கொண்டால்தான் ஒருவேளை நம்மீது தவறென்றால் மாற்றிக்கொள்ள முடியும். பார்க்கலாம்.