இயற்கை பெண்களை எந்த விதத்திலும் ஆண்களைவிட குறைவான உயிர்களாகப் படைக்கவில்லை. ஆனால், உலகம் பெண்களை அப்படி நடத்துவதில்லை. காட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றன என்றாலும் பல்லாயிரம் ஆண்டுக்கால அடிமைத்தனத்தால் பெண்கள் மேலேறி வர இன்னும் போராட வேண்டியிருக்கிறது. அந்தப் போராட்டத்தில் பெண்கள் கோரும் உதவிகள் உண்மையில் அவர்களுடைய உரிமைகள். அவற்றை யார் செய்கிறார்களோ இல்லையோ… பெண்களே பெண்களுக்குச் செய்ய வேண்டும். ஆங்கிலத்தில், ‘Empower Women’ என்பார்கள். அதற்கு நம்மால் செய்ய முடிகிற விஷயங்களை இந்த இதழில் சொல்லப் போகிறேன்.

சேமிப்பு: பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கும். உங்களுக்கும் சரி, உங்களைச் சாந்தவர்களுக்கும் சரி.

சேமிப்பு மற்றும் முதலீடு பற்றியும், அவற்றுக்கான வழிகள் பற்றியும் தெரிந்திருப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால் உங்கள் சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட தொகையை உங்களுக்கென எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மென்ட்டார் ஆகுங்கள்: உங்களுக்குத் தெரிந்த குடும்பங் களிலிருந்து ஒரு சிறுமியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவளின் பெற்றோரின் அனுமதியுடன் அவளுக்கு வழிகாட்டியாக இருங்கள். அவள் வாழ்வில் என்ன நடந்தாலும் அதை உங்களுடன் பகிரும் அளவுக்கு நல்ல தோழியாக இருங்கள். அந்தப் பெண்ணை வெற்றியாள ராக்கும் பொறுப்பை பெருமிதத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.

கற்பியுங்கள்: கல்விதான் முக்கியமான ஆயுதம். உங்கள் வீட்டருகிலோ, உங்களுக்குத் தெரிந்தவர்களிலோ யாரேனும் கல்விக்காக உதவிகள் கேட்டால், தயங்காமல் செய்யுங்கள். அது பண உதவியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. நீங்களே ஆசிரியர் ஆகலாம். நல்ல புத்தகங்களைப் பரிந்துரைக்கலாம்; வாங்கித் தரலாம்.

திறமைகளைக் கற்றுக் கொடுங்கள்: பொருளாதார மேம்பாடு எப்படிக் கிடைக்கும்? திறமைகளை வளர்த்து, அவற்றை வைத்து தொழில் செய்வதன் மூலம்தான். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைத் தேவையானவர் களுக்குக் கற்றுக் கொடுங்கள். அவர்கள் தொழில் தொடங்க உங்களாலான வழிகாட்டலைத் தவறாமல் செய்யுங்கள்.

ஆரோக்கியம்: தன்னலம் பார்க்காமல் இயங்குவதில் பெண்கள் எப்போதும் தயங்குவதே இல்லை. ஆனால், அதற்காக அவர்கள் உடல்நலத்தையும் ஆரோக்கியத் தையும் அலட்சியப் படுத்துவது நியாயமற்றது. தோழிகளோ, உறவினர்களோ யாராக இருந்தாலும் அவர்களை ஆரோக்கியம் பேணச் சொல்லுங்கள். அதைக் கண்டிப்பாகவே சொல்லுங்கள். தவறில்லை.