Published:Updated:

iஅக்கா

பெரும்பாலான சமயம் தேவையானதைத் தேடுவதிலேயே நேரம் போய்விடும். இப்படிச் செய்தால், நேரம் வீணாகாது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால், எப்படிச் செய்யலாம் என்றால் ஆளுக்கொரு ஐடியா சொல்வோம். வீட்டையும் ஆளையும் பொறுத்து அது மாறுவது சரிதா னென்றாலும் பொதுவான சில டிப்ஸ் உண்டு. அவற்றில் முக்கியமான சிலவற்றை இந்த இதழில் பார்க்கலாம்.

சீக்கிரம் வேலை முடிக்க ஒழுங்குடன் செய்வது அவசியம். மேலே இருந்து கீழ் நோக்கி சுத்தம் செய்வது, வலமிருந்து இடமாகச் சுத்தம் செய்வது என ஒரு சிஸ்டம் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி ஓர் ஒழுங்குடன் செய்தால் வேலையும் எளிதாகும்; நேரமும் மிச்சமாகும்; குழப்பமும் வராது.

வீட்டைச் சுத்தப்படுத்துவது என்பது வருடத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டிய விஷயமல்ல. அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகச் செய்தால் வீடும் சுத்தமாக இருக்கும். வேலையும் கடினமாகத் தெரியாது. எப்போது, எவற்றை, எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை முன்பே திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் ஈஸி.

அனைத்தையும் ஒரே நாளில் வைத்துக் கொள்ளாமல் பிரித்துப் பிரித்து செய்வதுதான் அயர்ச்சியை உண்டாக்காமல், எடுத்துக்கொண்ட வேலையை முழுமையாக செய்து முடிக்க உதவியாக இருக்கும். அதாவது, ஒட்டடை அடிப்பது, அனைத்து ரூம்களையும் க்ளீன் செய்வது, எலெக்ட்ரானிக் பொருள்களை தூய்மைப் படுத்துவது இப்படி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொன்று எனப் பிரித்துக் கொள்ளலாம்.

வீட்டைச் சுத்தப்படுத்துவது வீட்டிலிருக்கும் அனைவரது வேலைதான். மட்டுமல்ல... ஒரு டீமாக சேர்ந்து வேலை செய்தால் வேலையும் சீக்கிரம் முடியும்; களைப்பும் தெரியாது. எனவே, இதற்கென ஒரு ஷெட்யூல் போட்டு குடும்ப உறுப்பினர்களிடம் முன்கூட்டியே சொல்லி விடுங்கள். தப்பிக்காமல் இருப்பார்கள்.

கண்ணாடி களையும் கண்ணாடி யாலான பொருள்களையும் சுத்தப்படுத்த இரண்டு துணிகளை வைத்துக் கொள்ளுங்கள். முதல் துணி ஈரமான மைக்ரோ ஃபைபர் ஆகவும், இரண்டாவது துணி உலர்ந்த பருத்தி துணியாகவும் இருக்கட்டும். அவைதான் கண்ணாடி களைப் பளபளப்பாக்கும்.

சுத்தப்படுத்த என்ன என்ன கருவிகள் பயன்படுத்துகிறீர்களோ, அவற்றை மொத்தமாக எடுத்து அருகிலோ, ஒரு பக்கெட்டிலோ போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான சமயம் தேவையானதைத் தேடுவதிலேயே நேரம் போய்விடும். இப்படிச் செய்தால், நேரம் வீணாகாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு