Published:Updated:

அரசு வழங்கும் மகளிருக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இலவச பயிற்சி வகுப்பு; விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்!

தமிழ்நாடு அரசு

மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் `மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் நடத்தி வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 20-ம் தேதியில் இருந்து 24-ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.

மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் `மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2022-23-ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவது குறித்து, தமிழ்நாடு அரசின் மாநில கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசு வழங்கும் மகளிருக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இலவச பயிற்சி வகுப்பு; விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்!

தற்போது ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 20-ம் தேதியில் இருந்து 24-ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடம்: 

1.  ராணி மேரி கல்லூரி, சென்னை.

2.  ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, மதுரை.

ஆகிய கல்லூரிகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் ஏதேனும் ஒன்றில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவிகள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

பயிற்சிக் காலம்: குறைந்தது 6 மாதம்

வயது வரம்பு: 14.11.2022 அன்று விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு மேலும், 32  வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை சலுகை உண்டு.

நுழைவுத் தேர்வு!
நுழைவுத் தேர்வு!
மாதிரிப் படம்

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நுழைவுத் தேர்வு, நேர்காணல் அனைத்தும் மாணவிகள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும்.    

ஆன்லைன் மூலமாக விண்ணபிக்க  கடைசி நாள்: 24.11.2022

நுழைவுத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம்:

ராணி மேரி கல்லூரி, சென்னை - 01.12.2022/ வியாழன் - காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை

மீனாட்சி மகளிர் கல்லூரி, மதுரை - 01.12.2022/ வியாழன் - காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை

முகவரி:

QUEEN MARYS COLLEGE,

Dr. Radha Krishna Salai,

Mylapore, Chennai, Tamil Nadu 600004

தொடர்புக்கு: 044 2844 4995

Sri Meenakshi government college for women (Autonomous),

W4HG+F9G,

Kalpalam Rd,

Goripalayam,

Madurai, Tamil Nadu 625002

தொடர்புக்கு- 0452 253 4988

எழுத்துத் தேர்வு முடிவுகள் : 5.12.2022   அன்று வெளியாகும்.

விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு : smgacw.org க்ளிக் செய்யுங்கள்.