22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பெண்கள்... எண்கள்!

பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள்

ஒரு பெண் சராசரியாக தினமும் 20,000 வார்த்தைகள் பேசுகிறாள். இது சராசரியாக ஆண் பேசுவதைவிட 13,000 வார்த்தைகள் அதிகம்.

பெண்கள்... எண்கள்!

முதன்முதலாக ஹைஹீல்ஸ் அணிந்தது பெண்கள் அல்ல... ஆண்களே! இந்தச் சம்பவம் 1600-களில் நடந்தது.

பெண்கள்... எண்கள்!

சராசரியாக பெண்கள் ஓராண்டில் 30 - 67 முறை அழுகின்றனர். ஆண்களுக்கு இது 6 - 17 முறை.

பெண்கள்... எண்கள்!

அமெரிக்காவில் 20 சதவிகிதப் பெண்கள் தங்கள் கணவரைவிட ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 3,50,000 ரூபாய் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

பெண்கள்... எண்கள்!

ரஷ்யாவில் ஆண்களைவிடவும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். அதுவும் 9 லட்சத்துக்கு மேல்!

பெண்கள்... எண்கள்!

என்ன அணிவது என யோசிப்பதிலேயே பெண்களின் வாழ்நாளில் ஓராண்டுக் காலம் கழிந்து விடுவதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

பெண்கள்... எண்கள்!

பெண்களுக்குக் கட்டாய ராணுவ சேவை முறையைப் பின்பற்றும் ஒரே நாடு இஸ்ரேல். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள்.

பெண்கள்... எண்கள்!

ஒரு பெண் சராசரியாக தினமும் 20,000 வார்த்தைகள் பேசுகிறாள். இது சராசரியாக ஆண் பேசுவதைவிட 13,000 வார்த்தைகள் அதிகம்.

பெண்கள்... எண்கள்!

உலகின் டாப் 20 பணக்காரப் பெண்கள் பட்டியலில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வாரிசு அல்லது மனைவி என்கிற அடிப்படையிலேயே இடம்பிடித்திருக்கிறார்கள். அந்த ஒருவர், சீனாவில் ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபடும் 55 வயது ஊ யாஜுன்.

பெண்கள்... எண்கள்!

ஒரு பெண் தன் தோற்றம் பற்றி சராசரியாக ஒரு நாளில் ஒன்பது முறை நினைக்கிறார்.

மரபணு மாற்றம் காரணமாக மிகச்சில பெண்களுக்கு மற்றவர்களை விடவும் பல லட்சம் வண்ணங்களைப் பகுத்து அறியும் திறன் உள்ளது.

ஐரோப்பியப் பெண் தன் வாழ்நாளில் குறைந்தபட்சம் 111 ஹேண்டு பேக்குகளைப் பயன்படுத்துகிறார்.