Published:Updated:

செய்திகள் வாசிப்பது... இது நியூஸ் ரீடர்ஸ் பற்றிய நியூஸ்!

நியூஸ் ரீடர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் ரீடர்ஸ்

முகங்கள்

செய்திகள் வாசிப்பது... இது நியூஸ் ரீடர்ஸ் பற்றிய நியூஸ்!

முகங்கள்

Published:Updated:
நியூஸ் ரீடர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் ரீடர்ஸ்

“வணக்கம்... இன்றைய முக்கியச் செய்திகள்!” - செய்திச் சேனல்களின் இந்தக் குரல்களும் முகங்களும் நமக்கெல்லாம் பரிச்சயம். கேமராவின் முன்னால் ஒரே நிலையில் அமர்ந்து முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் செய்திகளை வாசிக்கும் பெண்கள் பலருக்கும் ஆச்சர்யமூட்டும் இன்னொரு முகம் இருக்கிறது. அந்த முகங்கள் இன்னும் அழகானவை, சுவாரஸ்யமானவை...

மகாலட்சுமி

செய்தி வாசிப்பில் 27 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் மகாலட்சுமி. செய்தியுடன் டி.வி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார்.

“திருமணத்துக்கு முன்னால பி.காம் படிச்சிருந்தேன். அப்புறம் எம்.காமும், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல், எம்.எல்லும் முடிச்சேன். அப்பவே எனக்கு படவாய்ப்புகள் நிறைய வந்துச்சு. படிப்புக்காக எல்லாத்துக்கும் நோ சொல்லிட்டேன்” - இன்ட்ரோ கொடுப்பவர், 2004-ம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

“கிரிமினல் மற்றும் குடும்ப நல வழக்குகளை அதிகம் டீல் பண்றேன். கோர்ட் வேலை பாதிக்காத மாதிரிதான் சேனல்லயும் நியூஸ் புல்லட்டின் கொடுக்குறதால ரெண்டையும் சமாளிக்க முடியுது” என்பவர் வழக்கறிஞராகச் சந்தித்த சுவாரஸ்ய நிகழ்ச்சியைப் பகிர்ந்தார்.

மகாலட்சுமி
மகாலட்சுமி

“ஒரு விவாகரத்து வழக்கு. அதுல மனைவி என்னோட கிளையன்ட். கேஸ் கோர்ட்டுக்கு வந்தப்போ எதிர்க்கட்சிக்காரங்க... அதாவது, அந்தப் பெண்ணோட புகுந்த வீட்டுக்காரங்க என்னைப் பார்த்ததும், `உங்களை டிவியில பாத்துருக்கோம். எங்களுக்கு உங்களை ரொம்பப் புடிக்கும்'னு சொல்லி நட்பாயிட்டாங்க. அதனால அந்த கேஸ்ல பிரச்னைகள் வராம, ஒரே நாள்ல அந்தப் பொண்ணுக்கு சாதகமா தீர்ப்பாயிடுச்சு. அந்தக் கணவரின் குடும்பம் இப்பவும் என்னோட நல்ல நட்புல இருக்காங்க”

- மகிழ்பவர், `கற்பழிப்பை கருவறுப்போம்’ என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். “என்னோட முதல் ஷார்ட் ஃபிலிம் அது. ஆதித்யா சேனல் கதிரோட கதை அது. `தைரியமானவராகவும் தெரியணும் அதே நேரம் முகத்துல ஒரு சோகமும் இருக்கணும்... அதனால அந்த கேரக்டருக்கு நீங்கதான் சரியா இருப்பீங்க'ன்னு சொன்னாரு. ஓகே சொல்லிட்டேன். அந்தப் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்... அதைப் பார்த்துட்டு நிறைய வாய்ப்புகள் வருது” என்பவர் முறையாக தஞ்சாவூர் ஓவியங்கள் வரையவும் கற்றுக்கொண்டிருக்கிறார்.

வாங்கம்மா வக்கீலம்மா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுஜாதா பாபு

2000-ம் ஆண்டிலிருந்து 20 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருக்கிறார் சுஜாதா பாபு. செய்தி வாசிப்பைத் தாண்டி நடிப்பு, மாடலிங் என கெத்து காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார்.

“ப்ளஸ் டூ முடிச்சதும் கல்யாணம் ஆயிடுச்சு. கணவர்தான் என்னை எம்.ஏ வரை படிக்கவெச்சார். நியூஸ் ரீடரா வேலை பார்த்துட்டு இருந்தபோதே நடிக்க வாய்ப்புகள் வந்துச்சு. மகனையும் கவனிச்சிட்டு, வீட்டைவிட்டு வெளியே போய் நியூஸ் வாசிக்கிறதே பெரிய விஷயம். இதுல நடிப்பெல்லாம் தேவையான்னு வாய்ப்புகளை மறுத்துட்டேன்’’

- முதல் வாய்ப்பைத் தவறவிட்டவர், மகன் வளர்ந்த பிறகு அந்த வாய்ப்பை மீண்டும் பிடித்திருக்கிறார்.

சுஜாதா பாபு
சுஜாதா பாபு

‘`நானே கதை எழுதி, ‘மனோகரி’ன்னு ஒரு ஷார்ட் ஃபிலிம்ல நடிச்சேன். திருநங்கைகளுக்கு குடும்பத்தினரே ஆதரவு கொடுக்கணும்னு வலியுறுத்துற படம் அது.முகத்துல எந்த உணர்ச்சியையும் காட்டாம நியூஸ் படிக்கிற இவங்களுக்கும் சிரிக்க, அழ, நடிக்கத் தெரியும்னு நிறைய பேருக்குத் தெரிய வந்துது. அதைப் பார்த்துட்டுதான் அஷ்வத் மாரிமுத்து ‘ஓ மை கடவுளே’ல நடிக்கக் கூப்பிட்டாரு. அதுல இருந்து நடிப்புலயும் என் கரியர் தொடங்கிடுச்சு. அப்படியே அமேசான், சென்னை சில்க்ஸ், குமரன் சில்க்ஸ் விளம்பரங்கள்னு மாடலிங்கும் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்...’’ வாய்ப்புகளை அடுக்குபவர், ஜெய் நடிக்கும் ‘எண்ணித் துணிக’ படத்தில் அதுல்யாவின் அம்மாவாகவும், விதார்த் நடிக்கும் ‘நட்சத்திரா’ படத்தில் கேரக்டர் ரோலிலும் நடிக்கிறார்.

“என்னோட முதுகுல சைக்கிளை டாட்டூ போடுற அளவுக்கு சைக்கிளிங் பிடிக்கும். வீக் எண்டுல 40-50 கி.மீ சைக்கிளிங் பண்ணுவேன்” என்பவர் சமீபத்தில்தான் சமையலறை விபத்திலிருந்து மீண்டிருக்கிறார்.

‘`ஆகஸ்ட் மாசம் நியூஸ் ரீடரா 20 வருஷங்கள் கம்ப்ளீட் ஆச்சு. அதைக் கொண்டாட விதவிதமான டிஷ் சமைக்கணும்னு கிச்சனுக்குப் போனேன். வடையை எடுத்து எண்ணெய் சட்டியில போட்டபோது மாவு வெடிச்சுத் தெறிச்சு முகம் பூரா கொதிக்கிற எண்ணெய் பட்டுருச்சு. ட்ரீட்மென்ட்டெல்லாம் முடிஞ்சு இப்போதான் மறுபடி நடிக்கத் தொடங்கியிருக்கேன். அதனால கிச்சனுக்கு சின்ன கமர்ஷியல் பிரேக் விட்டுருக்கேன்”

- கலகலத்து விடைகொடுத்தார் சுஜாதா.

ஸ்ரீவிஹானிகா

ம்.எஸ்ஸி மைக்ரோபயாலஜி படித்துவிட்டு, செய்தி வாசிக்க வந்திருக்கிறார் ஸ்ரீவிஹானிகா. செய்திவாசிப்பில் இவருக்கு இது 13-வது ஆண்டாம்.

“இதுவரை சுமார் 4,500 நியூஸ் புல்லட்டின் படிச்சிருக்கேன். 12 வருஷங்களும் எந்தத் தேதியில எத்தனை மணி புல்லட்டின் படிச்சேன்னு குறிச்சு வைக்கிறது வழக்கம்’’ என்று டைரிக் குறிப்பு சொல்பவருக்கு மாரத்தான் வீராங்கனை, பரதநாட்டியக் கலைஞர் என்று வேறு முகங்களும் உண்டு.

ஸ்ரீவிஹானிகா
ஸ்ரீவிஹானிகா

“குடும்ப நண்பர் சத்யபாலன்தான் மாரத்தான்ல பங்கெடுக்க இன்ஸ்பிரேஷன். 2012-ல இருந்து தொடர்ந்து மாரத்தான்ல கலந்துக்கிறேன். ஆரம்பத்துல மாரத்தான் ஓடுற அளவுக்கெல்லாம் உடம்புல தெம்பு இருக்குமான்னு சந்தேகமா இருந்துச்சு. ஓட ஆரம்பிச்ச பிறகுதான் நம்மாலயும் முடியும்னு நம்பிக்கை வந்துச்சு. லாக்டௌன் நேரத்துலகூட வெர்ச்சுவல் மாரத்தான்ல கலந்துகிட்டேன். அதுக்கோர் ஆப் இருக்கு. கூட்டமா ஓடாம அந்த ஆப்பை பயன்படுத்தி சுமார் 80 கி.மீட்டர் மாரத்தான் ஓட்டத்தை நிறைவுசெஞ்சு சர்ட்டிஃபிகேட்டும் வாங்கிட்டேன்.

எப்பவும் ஃபிட்டா இருக்கணும்னு நினைப்பேன். முக்கியமா மனசுக்கு அமைதி தர்ற யோகா, தியானம் ரெண்டையும் தவறவே விட மாட்டேன்’’ என்பவர் பள்ளிப் பருவத்தில் இருந்தே பரதக் கலைஞர் . நிறைய கோயில்களில் பரதம் ஆடியிருக்கிறார். ஸ்ரீவிஹானிகாவின் காஸ்ட்யூம்ஸ் எப்போதும் கவனம் ஈர்ப்பவை. `எந்தக் கடையிலம்மா தேடிப் பிடிக்கிறீங்க' என்றோம்.

“அம்மாதான் எனக்கு புடவை செலக்‌ஷன் எல்லாம். பெரும்பாலும் குறைந்த பட்ஜெட் புடவைகள்தான் வாங்குவோம். நாலு வார்ட் ரோப் நிறைய புடவைகள் வெச்சிருக்கேன்’’

- வயிற்றெரிச்சலைக் கிளப்பி விடைபெற்றார் ஸ்ரீவிஹானிகா.