Published:Updated:

புதுமைகள் படைக்க வேண்டும்!

அமிர்தவர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
அமிர்தவர்ஷினி

இசையிலே தொடங்குதம்மா!

புதுமைகள் படைக்க வேண்டும்!

இசையிலே தொடங்குதம்மா!

Published:Updated:
அமிர்தவர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
அமிர்தவர்ஷினி

``தவில் இசையிலும் படிப்பிலும் டாக்டர் பட்டம் வாங்குவதுதான் என் லட்சியம்'' என்கிறார் தவில் தேவதை அமிர்தவர்ஷினி.

“இசைக்கருவிகளில் ‘ராஜ வாத்தியம்’ என்று அழைக்கப்படுகிற தவிலை ஆண் கலைஞர்களே மிகவும் சிரமப்பட்டு வாசிப்பார்கள். ஆனால், கற்றுக்கொடுப்பதை மிக எளிதாக உள்வாங்கி அமிர்தவர்ஷினி அற்புதமாக வாசிக்கிறாள். 13 வயதிலேயே அமெரிக்கா வரை சென்று அவள் இசை நிகழ்ச்சி நடத்தியிருப்பதில் குருமார்கள் என்ற வகையில் எங்களுக்கெல்லாம் பெருமை’’ என்று புகழ்கிறார்கள் அமிர்தவர்ஷினியின் குரு நாதர்களான ஆதிச்சபுரம் இராமதாஸ் மற்றும் ‘கலைமாமணி’ கோவிலூர் கல்யாணசுந்தரம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமிர்தவர்ஷினி... தஞ்சை மாவட்டம், மன்னார் குடியில் வசிக்கும் நாதஸ்வர இசைக் குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த மணிசங்கரின் மகள். இந்தச் சிறுமியின் அம்மா ஜெயந்தி, திருவாரூர் அரசு இசைக் கல்லூரியில் வயலின் ஆசிரியராகப் பணிபுரிகிறார். நான்கு வயதில் தவில் இசை கற்க ஆரம்பித்த அமிர்தவர்ஷினி, ஆறாவது வயதில் அரித்துவாரமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் தவிலிசை அரங்கேற்றம் செய்துள்ளார். அன்று முதல் இன்று வரை ‘மங்கள லய நாதம்’ என்ற பெயரில் 200-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் ‘டிரம்ஸ்’ சிவமணி, பஞ்சாபி பாப் பாடகர் டாலர் மெஹ்ந்தி போன்றவர்களின் இசை நிகழ்ச்சிகளிலும் வாசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“பாரம்பர்ய இசைக் கருவிகளான நாதஸ்வரம், தவில் ஆகிய இரண்டும் மக்களின் சடங்கு சம்பிரதாயங்களைச் சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே முன்னிறுத்தப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் தங்கள் வாழ்வாரத்தை எதிர்நோக்கும்போது, அவர்களின் கல்வி கேள்விக்குறியாகிவிடுகிறது. இந்த நிலையை மாற்றி, எங்கள் மகளுக்குக் கல்வியுடன் இக்கலையைக் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இப்போது அமிர்தவர்ஷினி ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறாள்’’ என்கிறார் மணிசங்கர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“எந்தவொரு கலைப்படைப்பாக இருந்தாலும் அது பெண்களின் வழியே முதன்மைப்படுத்தும்போது புத்துயிர் பெறும். தவில் இசையில் அமிர்தவர்ஷினி புதுமைகள் படைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்கிறார் அம்மா ஜெயந்தி.

புதுமைகள் படைக்க வேண்டும்!

‘`ஸ்கூல்ல எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்க. அதனாலதான் தவில் இசையில் நிறைய கத்துக்கிறதோடு, படிப்பிலும் முதல் ரேங்க் மாணவியா இருக்க முடியுது. சமீபத்தில் அமெரிக்காவில் சிகாகோ நகர்ல உலகத் தமிழ் மாநாட்டில் இடம்பெற்ற என் சிறப்புத் தவில் இசை நிகழ்ச்சி மறக்க முடியாதது’’ என்று அழகாகப் பேசுகிறார் அமிர்தவர்ஷினி.

தவிலோடு அமிர்தவர்ஷினியின் விரல்கள் பேச ஆரம்பிக்க, அந்த மங்கல முழக்கத்தால் வீடே அதிர, பிரமிப்பிலிருந்து விடுபட முடியவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism