மதுரையின் மற்றுமோர் அரசியல் முகம் ஏ.ஆர்.மஹாலக்ஷ்மி... பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி தலைவர். அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தொழில்முனைவோராகச் செயல்படுகிறார். சிறந்த தொழில்முனைவோருக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார். பட்டிமன்றப் பேச்சாளரும்கூட. கடந்த ஆண்டு சுமார் 35,000 பெண்களைத் திரட்டி மதுரையில் மாநாடு நடத்தினார். 2016 சட்டமன்றத் தேர்தலில், மதுரை தெற்கு தொகுதியில் பி.ஜே.பி வேட்பாளராகப் போட்டியிட்டு 16,069 வாக்குகள் பெற்றார். அவருடனான சந்திப்பில்...
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅரசியலில் உங்களுக்கு ரோல்மாடல் யார்?
ஜெயலலிதா மேடம்... அவருடைய தைரியம் எனக்குப் பிடிக்கும். தேவையான விஷயங்களில் கடினமாக நடந்துகொள்ளக்கூடியவராகவும், மக்களுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்யக்கூடியவராகவும் அவர் இருந்தார்.

எதற்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்கள்?
நான் சிறு வயதிலிருந்தே ஆன்மிக சேவை, சமூக சேவை செய்துவந்துள்ளேன். சேவை செய்வதற்கான பரந்துபட்ட தளம்தான் அரசியல். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்றால், அரசியலைவிட நல்ல தளம் வேறு கிடையாது. அரசியலில்தான், அதற்கான அதிகாரம் இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அரசியலில் எந்த மாதிரியான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
சினிமாவும் அரசியலும் கவர்ச்சிகரமான துறைகள். அதில் எது நல்லது, எது கெட்டது என்கிற தெளிவோடு, மனதைச் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அந்தப் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். பிறரின் அனுபவங்களிலிருந்தும், அறிவுரைகளைக் கேட்டும் அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அரசியலில் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது?
சமூகத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் அரசியலுக்கு வர வேண்டும். `அரசியலை வைத்துச் சம்பாதிக்க வேண்டும்; குடும்பத்துக்குச் சொத்து சேர்க்க வேண்டும்' என்கிற எதிர்பார்ப்புடன் யாராவது அரசியலுக்கு வந்தால், அது நியாயமா?
இந்துத்துவா அரசியல் என்றால் என்ன?
இந்துத்துவா அரசியல் எனத் தனியாக எதுவும் இல்லை. இந்து என்பது ஒரு வாழ்க்கை முறை. இந்துத்துவா என்று தனியாக முத்திரை குத்தத் தேவையில்லை.
திராவிட அரசியல் குறித்து உங்கள் பார்வை என்ன?
கடவுள் எதிர்ப்பு பற்றி பேசினால் பலருக்குப் பிடிக்கும் என்று திராவிட அரசியலில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். கடவுள் எதிர்ப்பு பேசுவது ஒரு கவர்ச்சி என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். `ஒன்றும் ஒன்றும் இரண்டு' என்று எல்லோரும் சொல்லும்போது, `ஒன்றும் ஒன்றும் நான்கு' என்று ஒருவர் சொன்னால் எல்லோரும் கவனிப்பார்கள் அல்லவா, அதுபோலத்தான் இதுவும்!