Published:Updated:

ஐ.டி துறை... பெண்களுக்கான வாய்ப்புகள், சவால்கள், வழிகாட்டல்!

ஐ.டி துறை
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி துறை

ஐ.டி துறை மிகவும் சவால் நிறைந்த துறைகளுள் ஒன்று. காரணம், அசுர வேக டெக்னாலஜி பாய்ச்சலுக்கு நிகராக அது தன்னை அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும்

ஐ.டி துறை... பெண்களுக்கான வாய்ப்புகள், சவால்கள், வழிகாட்டல்!

ஐ.டி துறை மிகவும் சவால் நிறைந்த துறைகளுள் ஒன்று. காரணம், அசுர வேக டெக்னாலஜி பாய்ச்சலுக்கு நிகராக அது தன்னை அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும்

Published:Updated:
ஐ.டி துறை
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி துறை

கலைச்செல்வி முருகேசன்ஐ.டி துறை இன்று பலருக்கு வேலைவாய்ப்பைத் தந்துகொண்டிருக்கும் ஒரு முக்கியத் துறை. குறிப்பாக, அடித்தட்டு, நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் பிள்ளைகள் இதில் பணிவாய்ப்பைப் பெறும்போது, அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலைக்கு ஒரு `ஹை ஜம்ப்'பை கொடுக்கும் துறையாக இது இருக்கிறது. இதில், பெண்கள் தங்களுக்கான வாய்ப்பை பெறவும், பெற்ற வாய்ப்பில் முன்னேறிச் செல்லவும் ஆலோசனைகள் சொல்கிறார், சென்னையில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அசோஸியேட் டைரக்டர் கலைச்செல்வி முருகேசன்.

 கலைச்செல்வி முருகேசன்
கலைச்செல்வி முருகேசன்

பன்மொழி பழகுங்கள்!

ஐ.டி துறையில் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட, குறிப்பாக வேலை சார்பான நாடுகள், மாநிலங் களுக்கான மொழிகளைக் கற்றுக்கொள்வது, அதன் பல்வேறு கிளைகளிலும் புதிய வாய்ப்பு களை, மேம்பட்ட வாய்ப்புகளை பெற்றுத் தரும்.

வெளிநாட்டு வாய்ப்பு... நழுவவிடாதீர்கள்!

ஐ.டி வேலையின் ஒரு பகுதியாக வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தால், திருமணம், குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களால் சில பெண்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவதைப் பார்க்க முடியும். ஆனால், நழுவவிடக் கூடாத வாய்ப்பு அது. ஏனெனில், ஒரு வருடம் அங்கு வேலைபார்த்தால் கிடைக்கும் அனுபவங்களும், அறிவும் இன்னும் பல வருடங்கள் திறம்பட பணிபுரிய உதவும்.

சவால்களை ஏற்றால் முன்னேற்றம்!

ஐ.டி துறை மிகவும் சவால் நிறைந்த துறைகளுள் ஒன்று. காரணம், அசுர வேக டெக்னாலஜி பாய்ச்சலுக்கு நிகராக அது தன்னை அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த உலகம் பட்டன் ஃபோன் பயன்பாட்டில் இருந்து ஸ்மார்ட் போனுக்கு வருவதற்கு அதிக காலம் ஆகவில்லை. அதற்கு முன்னதாக ஐ.டி துறை அங்கு வந்து, அதற்குத் தேவையான சேவைகளை உருவாக்கித் தயாராக வைத்திருக்க வேண்டும். இப்படி நொடிக்கு நொடி அப்டேட் அவசியமாக இருக்கும் இந்தத் துறையில், தினம் தினம் புதுப்புது சவால்கள் ஏற்படுவதும் அதன் தன்மையே. அந்தச் சவால்களை ஏற்று, சுவாரஸ்யமாக அதற்குத் தீர்வு காணும் ஆர்வம் இருந்தால்... வேலை உங்களை வேறு லெவலுக்கு அள்ளிக்கொள்ளும்.

ஐ.டி துறை... பெண்களுக்கான வாய்ப்புகள், சவால்கள், வழிகாட்டல்!

கற்றல் தொடர வேண்டும்!

இந்தத் துறையில் நாளுக்கு நாள் ஏற்படும் புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சிகள் பற்றி கற்றுக்கொண்டே இருப்பது மிக அவசியம்.

1980-ல் இருந்த அடிப்படை கணினிக்கும் தற்போது இருக்கும் Cloud computing, Metaverse, Block chain போன்ற தொழில்நுட்பங்களுக்கும் இடையே, இந்த 42 ஆண்டுகளில் ஐ.டி துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றம் என்பது அசாத்தியமானது. ஒவ்வொரு முறை இதில் தொழில்நுட்பப் பாய்ச்சல் நடைபெறும்போதும் மிரட்சி அடையாமல், எந்தெந்தத் தேவை களுக்காக என்னென்ன சேவைகள் கண்டுபிடிக்கப் படுகின்றன என்ற அடிப் படை முதல் அதன் அட் வான்ஸ்டு நிலைவரை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, துறை சார்பான கற்றல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். கற்றதை செயல்முறையாக்கும் தெளிவும் இருந்தால்... ஏறு ஏறு முன்னேறுதான்.

தலைமைப் பொறுப்புக்குச் செல்லும்போது...

பெண்கள் தலைமைப் பொறுப்புகளை தயங் காமல் ஏற்று நடத்த வேண்டும். ஒரு குழுவை எப்படி அமைப்பது என்பதில் இருந்து, ஒவ்வொருவரிடமும் உள்ள குறை, நிறைகளை அறிந்து அதற்கு ஏற்றதுபோல் அவர்களிடம் வேலைவாங்கும் அணுகுமுறை வரை தங்களை மெருகேற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒரு குழுவைக் கட்டமைக்கும்போது வெவ்வேறு மொழி பேசுபவர்கள், வெவ்வேறு மதத்தினர் இருப்பது போல உருவாக்கினால் பண்டிகை நாள்களிலும் வேலை தடையின்றி நடைபெறும். இதுபோன்ற நுணுக்கங்களை அறிய வேண்டும்.

பெர்சனல் வாழ்க்கையும் முக்கியம்!

எடுத்துக்கொண்ட வேலையில் முக்கிய வளர்ச்சிப் புள்ளியான 'புராஜெக்ட் மைல் ஸ்டோன்' எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவு பெர்சனல் வாழ்க்கையின் முக்கியத் தருணங்களையும் கொண்டாட வேண்டியது அவசியம். வேலைக்காகக் குடும்பத்தை பார்க்காமல்விட்டால் அதுவே குற்ற உணர்வை ஏற்படுத்தி வேலையை விடக் காரணமாக அமையலாம். அந்த தவற்றை செய்யாதீர்கள். நீங்கள் அலுவலக வேலைகளில் முழு ஈடு பாட்டுடன் செயல்பட்டால், அலுவலகமும் உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து வேண்டிய நேரத்தில் உங்களுக்கு விடுமுறை தர மறுக்காது.

பெண்களுக்கு சாதகமான சூழல்!

இன்றைய சூழலில் 26 வார மகப்பேறு விடுப்பு, டே கேர் வசதிகள், பெண்களுக் கான பிரத்யேக வாகன நிறுத்தம் (பிங்க் பார்க்கிங்), வொர்க் ஃப்ரம் ஹோம் போன்ற பல வசதிகள் பெண்களுக்கு ஐ.டி துறையில் வழங்கப் படுகின்றன. இவையெல் லாம் பெண்களின் எண்ணிக்கையை இதில் அதிகரிக்க, ஊக்குவிக்க நிறுவனங்கள் எடுக்கும் முயற்சிகள். அந்தளவுக் குப் பெண் உழைப்பு அங்கு தேவையாக இருக்கிறது என்பதால்... கெட் செட் கோ!

தொடர்ந்து பணியில் இருங்கள்!

ஐ.டி துறையில் வேலைக்குச் சேரும் பெண்கள், ஆண்கள் விகிதம் 60:40 என இருந்தாலும், தலைமைப் பொறுப்பு என வரும்போது வெறும் 11% பெண்கள் மட்டுமே உள்ளார்கள். இதற்கு முக்கியக் காரணம், பெண்கள் பாதியிலேயே பணியை விட்டு விடுவது. இதற்கு குடும்பச் சூழல், குழந்தை வளர்ப்பு எனப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து பெண்கள் தொடர்ந்து பணிபுரிய வேண்டும். உயர் பொறுப்புகளுக்குத் தடையில்லாத பயணம் முக்கியம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism