Published:Updated:

‘ஜெ’ கேட்ட வனவாசம்... முருங்கைக்காயை ஸ்கேலால் அளந்த பத்மினி

ஜெயந்தி கண்ணப்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயந்தி கண்ணப்பன்

நாயகிகளின் தோழி ஜெயந்தி கண்ணப்பன்!

வெள்ளித்திரையில் தாங்கள் ரசித்த நடிகர், நடிகை களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிந்துகொள்வதில் பலருக்கும் விருப்பமிருக்கும். பிரபல படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் மரு மகளும் அவருடைய மகன் ஏ.எல்.எஸ்.கண்ணப்பனின் மனைவியுமான ஜெயந்தி கண்ணப்பன், தன்னுடன் பல வருடங்களாக நட்பில் இருக்கும் கதாநாயகிகளைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

‘ஜெ’ கேட்ட வனவாசம்... முருங்கைக்காயை ஸ்கேலால் அளந்த பத்மினி

முருங்கைக்காயை ஸ்கேலால அளந்து, பேனாவால புள்ளி வெச்சு சமைச்ச பத்மினி

``கல்யாணமாகுற வரைக்கும் ரொம்ப பிஸியா நடிச்சிட்டு இருந்ததால, பப்பிம்மாவுக்கு சமைக்கத் தெரியாது. கல்யாணமாகி அமெரிக்கா போன புதுசுல, பப்பிம்மா கணவர் டாக்டர் ராமச்சந்திரன் முருங்கைக்காய் சாம்பார் வைக்கச் சொல்லிட்டு ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டாராம். முருங்கைக்காயை ஒரே நீளத்துல நறுக்கத் தெரியாததால, காயை ஸ்கேலால அளந்து பேனாவால புள்ளிவெச்சு நறுக்கி சாம்பார்ல போட்டிருக்காங்க. சாம்பார் வைக்கிறது சுலபம். ஆனா, முருங்கைக்காய் நறுக்கிறதுதான் கஷ்டம்னு அவங்க அப்பாவியா சொன்னதை இப்போ நினைச் சாலும் சிரிப்பு வந்துடும் எனக்கு.

‘அது என்பேரு; நான்தான் நடிப்பேன்’னு சொன்ன கே.ஆர்.விஜயா

‘கந்தன் கருணை’ படத்துல கே.ஆர்.விஜயா தெய்வானையா நடிச்சது எல்லாருக்குமே தெரியும். அதுக்குப் பின்னாடி சுவாரஸ்யமான ஒரு சம்பவம் இருக்கு. அவங்ககிட்ட, `நீங்க தெய்வானை ரோல்ல நடிக்கிறீங்களா, வள்ளி ரோல்ல நடிக்கிறீங்களா’ன்னு

என் மாமா கேட்க, ‘என் நிஜப்பேரு தெய்வானைதான். அதனால நான்தான் அந்த ரோல்ல நடிப்பேன்’னு கேட்டு வாங்கி நடிச்சாங்களாம் விஜயாம்மா.

நிர்மலாவுக்காகவே ஒரு பாட்டு!

வெண்ணிற ஆடை நிர்மலா தீவிரமான ராமர் பக்தை. இப்போ வரைக்கும் அவங்க வீட்ல ‘ராம நவமி’ ரொம்ப விசேஷமா நடக்கும். எங்க மாமாவோட ‘லட்சுமி கல்யாண’த்துல நிர்மலா நடிச்சப்போ, அவங்களுக்காகவே ஒரு ராமர் பாட்டை ஷூட் பண்ணாங்க. அதுதான் ‘ராமன் எத்தனை ராமனடி’ பாடல். நாங்க சந்திக்கிறப்போ எல்லாம் அதைச் சொல்லிச் சொல்லி சந்தோஷப்படுவாங்க.

 கெட் டுகெதர்
கெட் டுகெதர்

‘நான் மகளாக்கும்’ என்றவர் விஜயகுமாரி

விஜயகுமாரி அக்கா ரொம்ப பாசக்காரங்க. மாமாவோட ‘சாரதா’ படத்துல அவங்கதான் கதாநாயகி. அந்தப் படத்துல அவங்க பேர் சாரதா. ‘நான் உன் மாமாவோட மூத்த பொண்ணு. அதனாலதான் உங்க ஸ்டூடியோ, வீடு, ஆபீஸ் எல்லாத்துக்கும் சாரதா பெயரை வெச்சிருக்காரு’ன்னு செல்லமா கலாட்டா பண்ணுவாங்க. பதிலுக்கு நானும் ‘உங்களுக்குப் பிறகுதாங்கா நான்’னு சொல்வேன்.

ஜெ. கேட்ட வனவாசம்!

ஜெயலலிதா மேடத்துக்கு வாசிப்புப் பழக்கம் அதிகம். ஒருதடவை ‘கண்ணதாசன் எழுதின ‘வனவாசம்’ புத்தகத் தோட ஒரிஜினல் வெர்ஷன் எனக்கு வேணும்’னு கேட் டாங்க. எங்க வீட்ல அந்தப் புத்தகம் இல்லாததால எங்கெல்லாமோ தேடி புதுக்கோட்டையில ஒருத்தர் வெச்சிருந்ததைக் கண்டுபிடிச்சு, அந்தப் புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தேன்.

யூனிஃபார்மோடு தூங்கிய சச்சு

‘சினிமா பைத்தியம்’கிற படத்துல சச்சும்மா பள்ளி மாணவியா நடிச் சிருந்தாங்க. அவங்க சின்ன வயசு லேயே நடிக்க வந்துட்டதால ஸ்கூல் போகணும்கிற ஏக்கம் அவங்க அடி மனசுக்குள்ள இருந்திருக்கும் போல. ‘ஷூட்டிங் முடிஞ்சாலும் எனக்கு யூனிஃபார்மை கழற்றவே மனசு வராது. வீட்டுக்கு யூனிஃபார்ம் போட்டுக்கிட்டே போனேன். தூங்கிறப்போகூட யூனிஃபார்மை கழற்ற மாட்டேன்னு அடம் பிடிச் சேன்னா பார்த்துக்கோ’ன்னு சொல் லிட்டு சிரிப்பாங்க.

‘ஜெ’ கேட்ட வனவாசம்... முருங்கைக்காயை ஸ்கேலால் அளந்த பத்மினி

கார் முழுக்க எம்.ஜி.ஆர் கதாநாயகிகள்!

நாங்க எல்லாரும் சேர்ந்து அம்மன் கோயிலுக்குப் போயிட்டிருந் தோம். எங்க காரை ஓட்டிட்டு வந்த டிரைவர் ஒரு ஆட்டோவை லேசா உரச, டிராஃபிக் போலீஸ்காரர் வந்துட்டார். அவர்கிட்ட பேசுறதுக் காக நாங்க கார் ஜன்னலை திறக்க, உள்ள எட்டிப்பார்த்த அவர் அப்படியே ஷாக்காகி நின்னுட்டார். காருக்குள்ள ராஜ, சத்யப்ரியா, காஞ்சனா, வெண்ணிற ஆடை நிர்மலான்னு எல்லாரும் எம்.ஜி.ஆர். கதாநாயகிகள். அதுக்கப்புறம் சூழ் நிலையே கூலாயிடுச்சு.

கெட் டுகெதர் முதல் துக்கம் வரை...

அமெரிக்காவுல இருந்து ‘அரங்கேற்றம்’ பிரமிளா, ஹைதரா பாத்ல இருந்து ஜமுனா, அஞ்சலி தேவின்னு யார் சென்னைக்கு வந்தாலும் ஒரு கெட் டுகெதர் ஏற்பாடு பண்ணிருவோம். இதே போல யார் வீட்ல துக்கம்னாலும் எல்லோரும் ஒண்ணா போயிடுவோம். கொரோனாவால கணவர், குழந் தைன்னு ரெண்டு இழப்புகளை சந்திச்ச கவிதா ‘சென்னைக்கு வந்து உங்க எல்லார் மடியிலேயும் படுத் துட்டு அழணும்’னு சொல்லியிருக்கா. கவிதாவை தேத்துறதுக்காக நாங்க அத்தனை பேரும் காத்துக்கிட்டிருக் கோம். எங்க குடும்பத்தோட திரைக்கலைஞர்களுக்கு இருக்கிற உறவு, தலைமுறைகள் தாண்டியும் தொடர்ந்துகிட்டிருக்கு. டி.ஆர்.மகா லிங்கம் மகள் சாவித்திரி, தங்கவேலு பொண்ணு சுமதி, ராஜ சுலோச்சனா வோட பொண்ணு தேவி, ஜெமினி பொண்ணு கமலா செல்வராஜ், சாவித்திரி பொண்ணு விஜய சாமுண்டீஸ்வரி, மனோரமா பேத்தி அபிராமி, மேனகா பொண்ணு கீர்த்தி சுரேஷ்னு எங்க பந்தம் ரொம்ப ஸ்ட்ராங்’’ என்று கலகலக் கிறார் ஜெயந்தி கண்ணப்பன்.