Published:Updated:

சலனத்துக்கு மருந்து போடும் சமனம் கனெக்ட்!

 கமலா ஈஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
கமலா ஈஸ்வரன்

ஹெல்ப் லைன்

சலனத்துக்கு மருந்து போடும் சமனம் கனெக்ட்!

ஹெல்ப் லைன்

Published:Updated:
 கமலா ஈஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
கமலா ஈஸ்வரன்
மளமளவென முன்னேறும் வனத்தீ போல கோவிட் 19 பெருந்தொற்று, பரபரவென வீடுதோறும் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றிப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த இயற்கைப் பேரிடரில் சத்தமே இல்லாமல் சமுதாயத்துக்குத் தன்னாலான பணியைச் செய்து கொண்டிருக்கும் பலரில் சென்னையைச் சேர்ந்த கமலா ஈஸ்வரனும் ஒருவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘சமனம் கனெக்ட்’ என்ற பெயரில் இவர் தொடங்கியிருக்கும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு கட்டணமில்லா தொலைபேசி உதவி சேவை மூலம், கொரோனா வைரஸ் குறித்த பீதி மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், மனம் தொடர்பான மற்ற பிரச்னைகளுக்கும் இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இந்த அமைப்பின் நிறுவனர் கமலா, அடிப்படையில் உளவியல் பட்டதாரி. சமூக மேம்பாட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இங்கிலாந்து வார்விக் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு மேற்கொண்டிருக்கிறார். மனநலம் குன்றியவர்களின் மேம்பாட்டுக்காக சென்னையில் செயல்படும் பிரபல தொண்டு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

 சமனம் வாலன்டியர்கள்
சமனம் வாலன்டியர்கள்

‘‘அது என்ன ‘சமனம்’? அதை ஆரம்பிக்கத் தூண்டுதலாக இருந்தது எது?’’ என்றதும் மெல்லிய புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

‘‘சமனம் என்றால் முழுமை, சமமான, சமநிலை என்று பொருள். ஒருவரின் மனநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை, குழப்பங்களை எங்கள் ஆலோசனைகள், பரிவர்த்தனைகள் மூலமா சரிசெய்து, அவருடைய மனசை, எண்ணங்களை சமநிலைக்குக் கொண்டு வரும் முயற்சிதான் எங்களுடையது... அதனால்தான் ‘சமனம் கனெக்ட்’னு பெயர் வெச்சிருக்கோம். மனநலம் பாதிக்கப்பட்டவங்களோடு வேலை செய்ததால், அவங்களை எப்படி அக்கறையுடன் பராமரிக்கணும், என்ன மாதிரி ஆலோசனைகள் தரணும் என்பதில் எனக்கு நல்ல அனுபவம் இருக்கு.

என் கணவர் யோக் ஜப்பி ஒரு நாடகக் கலைஞர். அவரும் நானும் சேர்ந்து போட்ட விதைதான் ‘சமனம்’. என்னால உளவியல்பூர்வமாக வேலை செய்ய முடியும். அவர் கலை மூலமாக சமூக மேம்பாட்டுக்கு உதவ முடியும்னு நம்பினோம். நாங்க இருவரும் சேர்ந்து இந்த அமைப்பை நிறுவினோம். கட்டணமில்லா தொலைபேசி சேவை மட்டுமே எங்க நோக்கம் இல்லை. மனவள பயிற்சிப் பட்டறைகளும் நடத்துறோம்.

இந்த கோவிட் பரவல் காலத்தில், முதலில் சென்னை மாநகராட்சியுடன் சேர்ந்துதான் எங்கள் பணி தொடங்குச்சு. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அட்மிட் ஆனவர்களுடன் அண்மைக்காலத்தில் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியைத்தான் நாங்களும் எங்க வாலன்டியர்களும் முதலில் செய்தோம். அப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுக்காகப் பேசுறப்ப, பல பேர் நிறைய சந்தேகங்கள் கேட்டாங்க... வீட்டில் தனிமையில் இருந்த சிலர் பயத்திலும் பீதியிலும் இருந்தாங்க. இயல்பு வாழ்க்கையையே முடக்கிப்போட்டுவிட்ட இந்தப் புதுவிதமான தொற்றும் தொடர்ந்து வந்த ஊரடங்கும் எல்லோரையுமே ரொம்ப பாதிச்சிருச்சு. எங்ககிட்டே தெரபி எடுத்துக்கிட்ட நிறைய பேர், ‘எங்க நண்பர் ரொம்ப பயந்து போயிருக்கார். அவருக்கு நீங்க கவுன்சலிங் செய்ய முடியுமா?’ என்பது போல தெரிஞ்சவங்க பலருக்கும் எங்களைப் பரிந்துரைச்சாங்க. அவங்களுக்கு எல்லாம் மன ரீதியான ஒரு ‘சப்போர்ட்’ கொடுக்கலாமேன்னுதான் டோல் ஃப்ரீ ஹெல்ப்லைன் ஆரம்பிச்சோம்’’ என்கிறார்...

மனஅழுத்தத்துக்கு ஆலோசனை தரும் ஹெல்ப்லைன் இதற்கு முன் எதுவும் இல்லையா?

‘‘இந்த லாக்டௌன் மற்றும் பேண்டெமிக் நேரத்தில் குடும்பங்களுக்குள் புதுசு புதுசா பிரச்னைகள். பலருக்கு ‘கொரோனா’ன்னு சொன்னா நம்மை ஒதுக்கி வெச்சிடுவாங்க என்ற தயக்கமும் பயமும் இருந்தது. ‘க்வாரன்டீன்’ல இருந்தவங்க நிலைமை அதைவிட பரிதாபம். அவங்க நினைக்கிறதை எல்லாம் வீட்டில் அம்மா, அப்பாகிட்ட பேச முடியாம தவிச்சாங்க. அவற்றுக்்கெல்லாம் தொலைபேசியில் கவுன்சலிங் கொடுக்கறதுக்கான ஹெல்ப்லைன் தமிழ்நாட்டில் வேற இருக்குதான்னு தெரியல. எங்களுடைய சேவை, வருடம் 365 நாள்களும் இயங்கும். இப்போதைக்கு காலை 11 மணி முதல் இரவு 11 மணிவரை வெச்சிருக்கோம். இன்னும் சில மாதங்களில் 24 மணி நேர சேவையாக மாறிடும்.’’

என்னென்ன பிரச்னைகளுக்கு தொடர்புகொள்ளலாம்?

‘‘கோவிட்-19 தொற்று தொடர்பான பயங்கள், சந்தேகங்கள், வீட்டில் யாருக்காவது தொற்று ஏற்பட்டு அதனால் வரும் மனநிலை மாற்றங்கள் மற்றும் மனச்சோர்வு, நெகட்டிவ் எண்ணங்கள், அக்கம்பக்கம் பார்ப்பதாலும் சேனல்களில் செய்திகளைப் பார்ப்பதாலும் வாட்ஸ்அப் தகவல்களாலும் உண்டாகும் மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றம், உணர்ச்சிகளைக் கையாளத் தெரியாமை, வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை குறித்து, இந்த நேரத்தில் வேலையை இழந்தவர்களுக்கும் சம்பளம் குறைக்கப்பட்டவர்களுக்கும் ஏற்படும் பாதுகாப்பின்மை, உறவுகள் பற்றிய கவலைகள், கணவன், மனைவி, பிள்ளைகள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் ஏற்படும் மனஸ்தாபங்கள், பிரச்னைகள், சச்சரவுகள், கொரோனாவால் உறவுகளை இழந்த துக்கம், நிதி நெருக்கடி, வீட்டில் பிள்ளைகள் இல்லாமல் தனியாக இருக்கும் வயதானவர்களுக்கு உதவி... இப்படி எந்தப் பிரச்னையாக இருந்தாலும் எங்கள் உதவி சேவையை அணுகலாம்.

என்ன பிரச்னைக்காக அழைக்கிறாங்களோ, அவங்களுடைய பிரச்னையைப் பொறுத்து, அதற்கேற்ற துறை சார் வல்லுநர்கள் ஆலோசனைகள் தருவாங்க. முறையான ஆலோசனைகள் கொடுக்கிறதுக்காகவே, எங்ககிட்ட தகுதியான நிபுணர்கள் குழு சிறப்பாக, வேலை செய்யுது. அந்தக் குழுவில் உளவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், மனநலத் துறை பயிற்றுநர்கள், பாலியேட்டிவ் கேர் சிறப்பு நிபுணர்கள், வழக்கறிஞர்கள்னு பலர் தன்னார்வலர்களாக இருக்காங்க.’’

ஹெல்ப்லைன் அனுபவங்கள்..?

‘‘கர்ப்பமாக இருந்த பல பெண்களின் பயத்தையும் டென்ஷனையும் போக்கி அவங்களுக்கு சில ரிலாக்ஸேஷன் டெக்னிக்ஸ் சொல்லிக்கொடுத்தோம். நிறைய வீடுகளில் செல்லப் பிராணிகள் இருக்கும். அவங்க சிகிச்சைக்காக மருத்துவமனைக்குப் போறப்ப அந்தப் பிராணிகளை என்ன பண்றதுன்னு தெரியாது. அவங்களுக்கு உதவினோம்.

கோவிட் பாதித்த நபர் ஒருவரின் மனைவியுடன் பேசியபோது, அவர் கணவரை அட்மிட் செய்த விஷயம் தெரிஞ்சதும் பக்கத்து வீட்டுக்காரங்க அவரை வீட்டுக்குள்ளேயே போட்டு பூட்டி வெச்சிருக்கிற விஷயம் தெரிஞ்சது. தங்களுக்கும் நோய் தொற்றும் என்ற பயத்தில் அவரை வெளியே விட மறுத்துட்டாங்களாம். தன் வளர்ப்பு நாயுடன் மூணு நாள்கள் பூட்டிய வீட்டுக் குள்ளேயே சாப்பாடு இல்லாம அடைபட்டுக் கிடந்திருக்காங்க அந்தம்மா. நாங்க பேசிய போதுதான் அவங்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதே தெரியவந்தது. பேசுவதைக் கேட்கக்கூட ஆளில்லாம மூணு நாளா தவிச்ச தவிப்பை அந்த வார்த்தைகளில் உணர்ந்தோம்.

உடனடியாக மனநல முதலுதவி கொடுத்ததுடன், அவங்களை வெளியே கொண்டுவர்றதுக்கு உதவி செய்றதா உறுதி கொடுத்தோம். தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி குழுவினர், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அங்கே போய், பூட்டை உடைச்சு, அவங்க பத்திரமாக இருப்பதை உறுதி செய்த பிறகு, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசியதுடன், அந்த அம்மாவுக்கு உணவு கொடுக்கிறதுக்கு ஏற்பாடு செய்தாங்க. இதெல்லாம் முடியும் வரை நாங்க அவங்ககிட்ட பேசிக்கிட்டே இருந்து அவங்களை ரிலாக்ஸ்டா ஃபீல் பண்ண வெச்சோம்’’

- நெகிழ்கிறார் கமலா.

 கமலா ஈஸ்வரன்
கமலா ஈஸ்வரன்

இவர்கள் குழுவில் பணியாளர்கள் தவிர, 22 வாலன்டியர்கள் பணியாற்றுகிறார்கள். சென்னை தவிர, வெளியூர்களிலிருந்து அழைப்பு வந்தால் அந்த ஊரில் சம்பந்தப்பட்ட மனநல மருத்துவர்களின் தொடர்பு எண்களைக் கொடுக்கும் சேவையும் வழங்கப்படுகிறது.

``இப்போதைக்கு கோவிட்தான் முக்கிய மான பிரச்னை. இந்த நிலைமை சீரான பிறகும் உறவுகள், வேலை, படிப்பு, தாழ்வுமனப் பான்மை, காதல், கல்யாணம்னு எத்தனையோ விஷயங்களில் வரும் பிரச்னைகள் மூலமாக மனச்சோர்வு ஏற்படுகிறவங்களுக்கு எங்க சேவை தொடரும். டோல் ஃப்ரீ 1800 123 786868 எண்ணில் அழைக்கலாம்’’ என்கிறார் முழு உற்சாகத்துடன்.

மனசுக்கு சலனம் என்றால் மருந்து போடும் கமலாவின் ‘சமனம் கனெக்ட்’!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism