Published:Updated:

அண்டார்ட்டிகாவில் வளரவேண்டிய நாயை அமிஞ்சிக்கரையில் வளர்க்கலாமா? - கீர்த்தி ப்ரியதர்ஷினி

கீர்த்தி  ப்ரியதர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி ப்ரியதர்ஷினி

செல்லமே செல்லம்

அண்டார்ட்டிகாவில் வளரவேண்டிய நாயை அமிஞ்சிக்கரையில் வளர்க்கலாமா? - கீர்த்தி ப்ரியதர்ஷினி

செல்லமே செல்லம்

Published:Updated:
கீர்த்தி  ப்ரியதர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி ப்ரியதர்ஷினி

பயோகமில்லை என்று தெரிந்தால் பெற்றோரையே வீட்டைவிட்டு விரட்டும் காலமிது. காணாமல் போகிற அந்த மனிதத்தை, வளர்ப்புப் பிராணிகளை வீட்டை விட்டுத் துரத்துவோரிடம் எதிர்பார்க்க முடியுமா? ஆதரவற்றுத் தெருவில் திரியும் நாய்கள், பூனைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்க, அவற்றை அள்ளிக்கொண்டு வந்து அரவணைத்து, ஆதரிக்கிறார் கீர்த்தி ப்ரியதர்ஷினி. ‘டாக் ஹவுஸ் சென்னை’ என்ற பெயரில் வளர்ப்புப் பிராணிகளுக்கான காப்பகம் நடத்தும் இவர், அதன் ஒரு பகுதியாக, வாயில்லாத, ஆதரவற்ற ஜீவன்களுக்கு அடைக்கலமும் தருகிறார்.

‘`நான் பிறந்ததுலேருந்து என் வாழ்க்கையில் நாய்கள் கூடவே வந்திருக்கு. ராஜஸ்தான், பிட்ஸ் பிலானியில் இன்ஜினீயரிங் படிச்சேன். ஹியூமன் ரிசோர்சஸில் எம்.பி.ஏ முடிச்சேன். இப்போ ஐடி கம்பெனியில் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வேலை பார்த்திட்டிருக்கேன். நாய்களுக்கான ஓர் அமைப்பு தொடங்கணும் என்கிறது என்னுடைய நீண்ட நாள் கனவு. முழுநேரமும் ‘டாக் ஹவுஸ்’ ஆரம் பிக்கவும் அதுதான் அடிப்படை. எங்க வீட்டுல கிட்டத்தட்ட 30 நாய்கள் வளர்க்கிறோம். ஆதரவில்லாமல் விடப்பட்டவையாகவோ, அடிபட்ட நிலையிலோ இருக்கிற நாய்களை தத்தெடுத்து வளர்க்கிறோம். இத்தனை நாய்களை வளர்க்கிறதால நாங்க எல்லாரும் குடும்பமா சேர்ந்து எந்த ஊருக்கும் போக முடியாது. அப்படிப் போய் பல வருஷங்கள் ஆச்சு. எல்லா நாய்களும் எங்ககூடவே படுத்துத் தூங்கி செல்லமா வளர்ந்தவை. அதே அன்போடும் அக்கறையோடும் மத்தவங்க பார்த்துப்பாங்களான்னு தெரியாது. நாய்களைப் பாசமா வளர்க்கும் பலரும் இதே மனநிலையோடுதான் இருப்பாங்க. நாம நம்ம வீட்டுல நாய்களை எப்படிப் பார்த்துக்கி றோமோ, அதே மாதிரி யாராவது வீட்டுல வெச்சுப் பார்த்துக்கிட்டாங்கன்னா, நாய் வளர்க்கிறவங்க தைரியமா வெளியூர்களுக்குப் போக முடியும். அதுக்காக ஆரம்பிச்சதுதான் ‘டாக் ஹவுஸ்’.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அண்டார்ட்டிகாவில் வளரவேண்டிய நாயை அமிஞ்சிக்கரையில் வளர்க்கலாமா? -   கீர்த்தி  ப்ரியதர்ஷினி

வெளியூர் போகும்போது நாய்களைப் பார்த்துக்கிற இடங்கள் சென்னையில நிறைய இருக்கு. பல இடங்களிலும் 40, 50 நாய்களை ஒரே இடத்துல வெச்சிருப்பாங்க. தனித்தனியா கூண்டுபோல வெச்சு அதுக்குள்ளே விட்டிருப் பாங்க. சாப்பாடு கொடுத்துட்டு, பாத்ரூம் போக வெளியில அழைச்சிட்டு வந்துட்டு மறுபடி கூண்டுக்குள்ளே விட்ருவாங்க. நாய்களை ரொம்பச் செல்லமா, பாசமா வளர்த்த யாருக்கும் இப்படியொரு சூழல்ல விட்டுட்டுப் போக மனசு வராது. நாய்களுக்கும் அந்தச் சூழலில் மன அழுத்தம் அதிகரிக்கும். கோபம் அதிகமாகும். வீட்டுச் சூழலை உருவாக்கி, நாய்களை சந்தோஷப்படுத்தற மாதிரியான விஷயங்களைச் செய்யணும்னு நினைச்சுதான் டாக் ஹவுஸ் ஆரம்பிச்சேன்’’ - நாய்கள் காப்பகப் பின்னணி சொல்பவர், ரெட்ஹில்ஸ் ஏரியாவில் ஆறு கிரவுண்டு இடத்தில் இதை நடத்துகிறார். ஏ.சி வசதி செய்யப்பட்ட அறைகள், நீச்சல் குளம், ஓடியாடி விளையாட விஸ்தாரமான இடம், வீட்டுச் சாப்பாடு என நாய்களுக்கான கவனிப்பு வேற லெவல்!

அண்டார்ட்டிகாவில் வளரவேண்டிய நாயை அமிஞ்சிக்கரையில் வளர்க்கலாமா? -   கீர்த்தி  ப்ரியதர்ஷினி

‘`வெளியூர் போகும்போது சில நாள்கள் முதல் சில வாரங்கள்வரை உங்க வீட்டுச் செல்லப் பிராணிகளை எங்களுடைய பராமரிப்பில் விட்டுட்டுப் போகலாம். எங்களிடம் விடப்படற நாய்கள் இங்கே நீச்சல் அடிக்கலாம். நீச்சலுக்காக மட்டுமே இங்கே நாய்களைக் கூட்டிட்டு வர்றவங்களும் இருக்காங்க. ஆர்த்ரைட்டிஸ் பாதிப்போ, பின்னங்கால் சரியில்லாத பிரச்னையோ உள்ள நாய்களுக்கு வாரத்துல ரெண்டு முறை நீச்சல் பழகவைக்க டாக்டர்ஸ் அறிவுறுத்துவாங்க. ஆண் நாயோ, பெண் நாயோ... அதுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை அவசியம். பெண் நாய்களுக்கு ஆறு மாசங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வரும். அந்த டைமில் பெண் நாய்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகும். ஹார்மோன் தொந்தரவுகள் இருக்கும். `ஃபால்ஸ் பிரெக்னன்சி' அறிகுறிகளைச் சந்திக்கும். அதாவது மடியில் பால்கட்டும், உடல் முழுக்க அரிப்பெடுக்கும். ரோமங்கள் உதிரும். கர்ப்பமா இருக்கிறதா மனசளவுல அது நினைச்சுக்கிறதால ஏற்படும் அறிகுறிகள் இவை. குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யலைன்னா, வயசான பிறகு நாய்களுக்குக் கர்ப்பப்பையில் கட்டிகள் வரும். எடை அதிகரிக்கும் ஆண் நாய்களுக்கு விதைப்பைகளில் கட்டிகள் உருவாகலாம். பெண் நாயைத் தேடி வீட்டைவிட்டு வெளியேறப் பார்க்கும். வீட்டுக்குள் சுவர் முழுவதும் சிறுநீர் கழிக்கும். ராத்திரி முழுவதும் ஊளையிடும். சென்னையிலுள்ள வெட்டினரி டாக்டர்ஸுடன் தொடர்பிலிருப்பதால், அவங்க மூலமா நாய்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு செய்து அனுப்பறோம். ஆபரேஷன் முடிஞ்சு ஒருவாரம் உங்க நாய்க்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து பத்திரமா பார்த்துக்கிட்டு உடம்பு தேறினதும் உங்க வீட்டுக்கு அனுப்புவோம்’’ - அக்கறையாகச் சொல்பவர், நாய்களுக்கு ஆறு மாதங்களிலிருந்து ஒரு வயதுக்குள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்வது நல்லது என்பதையும் வலியுறுத்துகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைக் கடத்தல் தப்புன்னா நாய்களைக் கடத்தறதும் விற்கறதும்கூடத் தப்புதான். மனிதர்களுக்கிடையில் சாதி, மத வேறுபாடு பார்க்கிறதுக்குச் சமமானதுதான் நாயின் இனத்தையும் சாதியையும் பார்க்கிறதும்.

‘`நான் தத்தெடுத்து வளர்க்கும் நாய்களின் எண்ணிக்கை 19. ரெண்டைத் தவிர மற்ற எல்லாம் நாட்டு நாய்கள். லேப்ரடாருக்குக் கண் தெரியாது. பார்வையில்லாமப் பிறந்துட் டான்னு அவனை யாரோ தெருவில் விட்டுட்டுப் போயிட்டாங்க. அவனுக்கு இப்போ ஏழு வயது. இன்னும் ரெண்டு நாய்களுக்குப் பின்கால்கள் விளங்காது. கால் விளங்காத நாய்களை மென்மையான தரையுள்ள இடத்தில்தான் விடணும். அப்போதான் கால்கள் தேயாது. அதுக்காகவே ஸ்பெஷலா இடம் அமைச்சிருக்கேன். இன்னொரு நாய்க்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கு. நடக்கவே சிரமப்படும். இவங்க தவிர பன்றிக்குட்டி ஒன்று வளர்க்கறேன். எனக்கு பன்றிக்குட்டி வளர்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை. இந்தியாவில் பன்றிகளைக் கறிக்காக மட்டும் வளர்க்கறாங்க. புத்திசாலியான விலங்குகளில் உலகளவில் பன்றிகளுக்கு நாலாவது இடம். அவை நாய்களைவிட புத்திசாலிகள், அன்பானவை’’ - பன்றிகளைப் பற்றிய பார்வையை மாற்றுகின்றன கீர்த்தியின் வார்த்தைகள்.

அண்டார்ட்டிகாவில் வளரவேண்டிய நாயை அமிஞ்சிக்கரையில் வளர்க்கலாமா? -   கீர்த்தி  ப்ரியதர்ஷினி

‘`இந்தியாவில் வளர்க்க நாட்டு நாய்கள்தான் பெஸ்ட். அதுங்களுக்கு அடிக்கடி நோய் வராது. ஆரோக்கியமா இருக்கும். கலப்பின வெளிநாட்டு நாய்களைவிட நாட்டு நாய்களுக்கு அறிவும் நன்றி உணர்வும் அதிகம். நம்மூர் வெயிலையும் குளிரையும் தாங்கிக்கும். முடி அதிகம் கொட்டாது.

நாய்களைக் குட்டிபோடவெச்சு காசு பார்க்கிற விஷயத்தையும் நான் எதிர்க்கிறேன். வெளிநாடுகளில் நல்ல குளிரில் வளரவேண்டிய, ஓடியாடி விளையாட வேண்டிய நாய்களை நம்மூருக்குக் கூட்டிட்டு வந்து இனப்பெருக்கம் செய்யவெச்சு விற்கறாங்க. பார்க்க அழகா இருக்கேன்னு சில ஆயிரங்கள் கொடுத்து நீங்க ஒரு வெளிநாட்டு நாயை வாங்கிட்டு வருவீங்க. அந்த நாய்க்கு நிறைய உடல்நலக் கோளாறுகள் வரும். அவை நம்மூர் சூழல்ல வளரவேண்டியவையே இல்லை. ரத்த சம்பந்தம் உள்ள நாய்களை இனப்பெருக்கம் செய்யவெச்சு, குட்டிகள் போடவைக்கிறதுக்குப் பெயர் ‘இன்ப்ரீடிங்’. நாலஞ்சு நாய்களைவெச்சே இந்த பிசினஸைத் தொடர்ந்திட்டிருப்பாங்க. குட்டி வளர்ந்ததும் அதை அதன் அப்பாவோடு அல்லது அம்மாவோடு இனப்பெருக்கம் செய்யவைக்கிற அநியாயமும் நடக்குது. நெருங்கின உறவுகளுக்குள்ளே திருமணம் செய்யறவங்களுக்கு குழந்தைகள் குறைபாடுகளோடு பிறக்கலாம்னு சொல்றதில்லையா... அது நாய்களுக்கும் பொருந்தும். நாய்களைவெச்சு பிசினஸ் பண்றவங்களுடைய இந்தப் பேராசையால நிறைய குட்டிகள் உடல்நலக் குறைபாடுகளோடு பிறக்குது. அது குட்டியா இருக்கும்போது தெரியாது. வளர வளர அதுங்களுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகும். மூட்டுவலியிலேருந்து இதயநோய்வரை சகலமும் வரும். அண்டார்ட்டிகாவில் வளரவேண்டிய நாயை அமிஞ்சிக்கரையில வளர்க்கிறது தப்பில்லையா?

அண்டார்ட்டிகாவில் வளரவேண்டிய நாயை அமிஞ்சிக்கரையில் வளர்க்கலாமா? -   கீர்த்தி  ப்ரியதர்ஷினி

பிசினஸுக்காக வளர்க்கும் இந்த நாய்களுக்குச் சரியான சாப்பாடு கொடுக்கிறதில்லை. ஆறு மாசத்துக்கொருமுறை குட்டிபோட வைப்பதால் பெண் நாய்களின் உடல்நிலை சீக்கிரமே மோசமாயிடும். ஒருகட்டத்துக்குமேல அந்த நாயால் பலனில்லைனு தெரிஞ்சதும் அதைத் தெருவில் விட்டுடறாங்க.

விற்கறதுக்கும் வாங்கறதுக்கும் நாய்கள் ஒன்றும் பொருள்களில்லை. குழந்தைக் கடத்தல் தப்புன்னா நாய்களைக் கடத்தறதும் விற்கறதும்கூடத் தப்புதான். மனிதர்களுக்கிடையில் சாதி, மத வேறுபாடு பார்க்கிறதுக்குச் சமமானதுதான் நாயின் இனத்தையும் சாதியையும் பார்க்கிறதும்.

நாட்டு நாய்களை வளர்க்கிறதை கௌரவக் குறைச்சலா பார்க்க வேண்டியதில்லை. தினம் தினம் தெருவில் விடப்படும் லேப்ரடார் நாய்களின் எண்ணிக்கை தெரியுமா? அதுங்களைப் பராமரிக்கிறது ரொம்பக் கஷ்டம். இந்த இனம் நிறைய சாப்பிடும். அதுங்களுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகும். செலவு பண்ண முடியாம தெருவில் விட்டுவாங்க. இன்னிக்கு எல்லோராலும் விரும்பப்படற இனம் `பக்'. செயற்கையான விஷயங்களைச் செய்துதான் அந்த நாய்க்கு அப்படியொரு முக அமைப்பைக் கொண்டு வராங்கன்னு தெரியுமா? பக் இன நாய்களுக்கு சுவாசப் பிரச்னைகள் அதிகம். சீக்கிரம் வெயிட் போடும். ஹார்மோன் கோளாறுகளால் அவதிப்படும். ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்களுக்குப் பிறவியிலேயே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும். அது உடனே தெரியாது. பிரச்னையின் காரணமா இடுப்பெலும்பில் வலி வந்து நடக்கவே கஷ்டப்படும். ஆயுசு முழுக்க அதுக்கு செலவு பண்ணணும். இதையெல்லாம் ஜனங்க உணரணும். நாய்களை நேசிக்கிற யாரும் அதுங்களைவெச்சு பிசினஸ் பண்றவங்களை ஆதரிக்க மாட்டாங்க’’ - வாயில்லா ஜீவன்களைவைத்து நடக்கும் அரசியல் பகிர்பவர், கடைசியாகச் சொல்லும் மெசேஜ் நாய்களை நேசிப்பவர்களுக்கானது.

‘`சாதி நாய்களைப் பணம் கொடுத்து வாங்காதீங்க. வாயில்லா ஜீவன்களைவெச்சு வியாபாரம் பண்றவங்களை ஊக்கப்படுத்தாதீங்க.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism