Published:Updated:

ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சிறுமி... ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தது கேரள அரசு!

Shawarma ( Photo by Yoad Shejtman on Unsplash )

தரமற்ற நச்சு உணவு சாப்பிட்டவர்களில் ஒருவரான, கண்ணூர் மாவட்டம் கரிவாலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி தேவாநந்தா என்பவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்கு ஐந்து மாதத்துக்கு முன்னர்தான் அவரின் தந்தை உயிரிழந்தார்.

கடந்த மே 1-ம் தேதி, கேரள மாநிலம் கார்சகோடு நீலேஸ்வரம் பகுதியில் உள்ள கடையில், அருகே உள்ள டியூஷன் சென்டரில் படிக்கும் மாணவர்கள் பலர் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். அதை உண்ட பிறகு, 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கேரள மாணவியின் உயிரைப் பறித்த ஷவர்மா
கேரள மாணவியின் உயிரைப் பறித்த ஷவர்மா

தரமற்ற நச்சு உணவு சாப்பிட்டவர்களில் ஒருவரான, கண்ணூர் மாவட்டம் கரிவாலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி தேவாநந்தா என்பவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான், அவரின் தந்தை உயிரிழந்த நிலையில் அடுத்தடுத்த மரணங்களால் தேவாநந்தாவின் குடும்பம் தத்தளித்தது. இச்சம்பவம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனிடையே, தரமற்ற ஷவர்மா விற்பனை செய்த கடையைத் தாக்கி, பொதுமக்கள் சூறையாடினார். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், கடை உரிமையாளர், ஊழியர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 304, 308 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கேரள போலீஸார் விசாரித்து வந்தனர்.

Kerala CM
Kerala CM

இந்த நிலையில், புதன் கிழமையன்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த மாணவி தேவாநந்தாவின் குடும்பத்துக்கு, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் வழங்கும் முடிவை அறிவித்தது.