Published:Updated:

13 ஆண்டுகளாக பள்ளிக்கு `நோ லீவ்'... வியப்பூட்டும் சாதனை குறித்து கேரள மாணவி சொல்வதென்ன?

அக்சயா

கேரளாவில் மாணவி ஒருவர், தனது 13 ஆண்டுக்கால பள்ளி படிப்பில் தொடர்ந்து 100% வருகை பதிவுடன் சாதனை படைத்துள்ளார்.

13 ஆண்டுகளாக பள்ளிக்கு `நோ லீவ்'... வியப்பூட்டும் சாதனை குறித்து கேரள மாணவி சொல்வதென்ன?

கேரளாவில் மாணவி ஒருவர், தனது 13 ஆண்டுக்கால பள்ளி படிப்பில் தொடர்ந்து 100% வருகை பதிவுடன் சாதனை படைத்துள்ளார்.

Published:Updated:
அக்சயா

ஒவ்வொரு மாதம் பிறக்கும்போதும் காலண்டரை பார்த்து, அந்த மாதத்தில் எத்தனை அரசு விடுமுறை வருகிறது என்று கணக்கிட்டு, விடுமுறை குறித்து சிலாகித்த 80'ஸ், 90'ஸ் கிட்ஸ்கள் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். மழை விடுமுறையில் தொடங்கி, பள்ளிக் காலத்தில் கிடைக்கும் ஒவ்வொரு விடுமுறைக்கும் ஒரு தனி சுகம் உண்டு.

அக்சயா
அக்சயா

ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஒரு 2K கிட் மாணவி, யு.கே.ஜி-யில் தொடங்கி, 12-ம் வகுப்பு வரை, தொடர்ந்து 13 ஆண்டுகளாக ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காமல், பள்ளிக்கு 100% வருகை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் - நிஷா தம்பதியின் ஒரே மகள் அக்சயா. விழா, விசேஷங்கள், உடல் உபாதைகள், குடும்ப பிரச்னைகள் என்று எதையும் கண்டுகொள்ளாமல் 100% அட்டெண்டன்ஸ் வாங்கி பள்ளி படிப்பை சாதனையுடன் முடித்திருக்கிறார் அக்சயா.

அக்சயா
அக்சயா

இந்த வித்தியாசமான சாதனை மூலம், அக்சயா இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம் பிடித்துள்ளார். கோவை வந்திருந்த அக்சயா மற்றும் அவரின் பெற்றோரை சந்தித்துப் பேசினோம். மலையாளம் கலந்த தமிழில் பேசத் தொடங்கினார் அக்சயா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எனக்கு சின்ன வயசுல இருந்தே ஸ்கூலுக்குப் போக புடிக்கும் சார். வீட்ல சும்மா உக்கார புடிக்கவே புடிக்காது. ஏதாவது பிஸியாவே இருக்கணும்னு நினைப்பேன். எனக்கு டிராவலிங் ரொம்பப் பிடிக்கும். எந்தச் சூழ்நிலையிலும் டிராவல் பண்ணிட்டே இருக்கணும்னு ஆசை. படிப்புல நான் ஆவ்ரேஜ் ஸ்டூடன்ட்தான்.

அக்சயா
அக்சயா

ஆனா, விளையாட்டுல ரொம்ப இன்ட்ரஸ்ட். பாக்ஸிங்ல ஸ்டேட், டிஸ்ட்ரிக்ட் சாம்பியன்ஷிப் அடிச்சுருக்கேன். ரன்னிங்ல 1,500 மீட்டர் பிரிவுல, தொடர்ந்து மூணு வருஷம் கோல்டு மெடல் வாங்கிருக்கேன். கபடி, கோ-கோ, பேட்மிட்டன்ல டிஸ்ட்ரிக்ட் லெவல் போட்டிகள்ல கலந்துருக்கேன்.

நான் 8-வது படிக்கறப்ப கோ-கோ செலக்ஷன் டைம்ல, கீழ விழுந்துட்டேன். வலது கண்ல அடிபட்டுருச்சு. முதலுதவி பண்ணிட்டு, வீட்ல சொல்லிட்டாங்க. வீட்ல திட்டுவாங்களோனு நினைச்சேன். ஆனா என் அப்பா, இதுதான் ஸ்போர்ட்மேன்ஷிப்னு சொல்லி என்னைப் பாராட்டினார். அப்பா கராத்தே வீரர். என்னைய ரெண்டு நாளுக்கு ரெஸ்ட் எடுங்கனு சொன்னாங்க. நான் ரெஸ்ட் எடுக்கலை. பிடிவாதம் பண்ணி ஸ்கூலுக்குப் போயிட்டேன்.

அக்சயா
அக்சயா

என் தாத்தா இறந்தப்போகூட நான் உடனே போகலை. என்னோட லட்சியத்த நோக்கி முன்னேறணும். அதுக்கு நடுவுல எந்தத் தடை வந்தாலும், அதை உடைச்சுட்டு போயிட்டே இருக்கணும். அதனால, எந்த விஷயமும் என்னைப் பெருசா தடுக்கல” என்றார்.

அக்சயாவின் தந்தை மணிகண்டன், ``என்னோட சொந்த ஊர் கோவைதான். வேலைக்காக கேரளா போயிட்டோம். அக்சயா 5-வது வரை இங்கதான் படிச்சாங்க. இங்கதான் 100% அட்டெண்டன்ஸ் தொடங்குச்சு. கேரளா போயும் அது தொடர்ந்துச்சு. அவங்க படிச்ச ஸ்கூல்ஸ்ல இப்படி ஒரு முயற்சி இதுக்கு முன் நடந்ததில்லனு சொன்னாங்க. பெண் குழந்தைகள்னாவே ஒரு குறுகிய பார்வை இருக்கு.

பெற்றோருடன் அக்சயா
பெற்றோருடன் அக்சயா

`பெண் குழந்தையா, கூட இன்னொரு குழந்தை வேணும்’னு எல்லாம் சொன்னாங்க. நான் அதை மாத்தணும்னு நினைச்சேன். எனக்கு பொண்ணு பொறந்தது ரொம்ப பெருமை. அதே பெருமை அந்தக் குழந்தைக்கும் கிடைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்குத் தகுந்த மாதிரி அக்சயாவை தைரியத்தோட வளர்த்தோம். இப்ப அவங்க எங்களுக்கு பெருமை சேர்க்கத் தொடங்கிட்டாங்க” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் அக்சயாவின் அம்மா.

மீண்டும் தொடர்ந்த அக்சயா, ``இதுக்குப் பின்னாடி என் அப்பா, அம்மாவோட சப்போர்ட்தான் இருக்கு. அவங்க இல்லாட்டி இது எல்லாம் நடந்துருக்காது. உத்தர பிரதேசத்துல காலேஜ் படிப்பை படிக்கப் போறேன். எனக்கு ரிசர்ச்ல ரொம்ப இன்ட்ரஸ்ட். நம்ம நாட்டுக்காக ஏதாவது புதுசா கண்டுபிடிச்சுக் கொடுக்கணும். அதுதான் என்னோட லட்சியம். எந்த பிரச்னையா இருந்தாலும் பெண்கள் அதை எதிர்கொள்ளணும்.

அக்சயா
அக்சயா

எந்த விஷயத்தையும் எதுக்காகவும் தள்ளிப் போடக்கூடாது. எல்லாத்தையும் கடந்து போயிட்டே இருக்கணும். எந்தச் சூழ்நிலையா இருந்தாலும் பாசிட்டிவ்வா இருக்கணும். அப்படி இருந்தா ஜெயிக்க முடியும்ங்கிறது என் நம்பிக்கை” என்றார் நம்பிக்கையுடன்.

வெற்றியைத் தொட்ட விடாமுயற்சிக்கு வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism