Published:Updated:

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமையல் என்பது லைஃப்ஸ்கில்...

- கிருத்திகா ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
- கிருத்திகா ராதாகிருஷ்ணன்

- கிருத்திகா ராதாகிருஷ்ணன்

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமையல் என்பது லைஃப்ஸ்கில்...

- கிருத்திகா ராதாகிருஷ்ணன்

Published:Updated:
- கிருத்திகா ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
- கிருத்திகா ராதாகிருஷ்ணன்

கிருத்திகா ராதாகிருஷ்ணன்... தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி என்பதைத் தாண்டி, சமையற்கலை நிபுணர் என்ற அடையாளம் இவருக்கு உண்டு. ‘ஆர்கே கிரேவிங்ஸ் அண்ட் ரிச் யம் பேக்ஸ்’ என்ற பெயரில் இவர் தொடங்கியிருக்கும் பேக்கிங் பிசினஸ், கிருத்திகாவின் மற்றோர் அவதாரம்.

‘`பேக்கிங் எனக்குப் புதுசு இல்லை. 20 வருஷங்களுக்கு முன்னாடி ‘மங்கையர் சாய்ஸ்’ நிகழ்ச்சியில நான் பண்ணின முதல் அயிட்டமே பிளாக்ஃபாரெஸ்ட் கேக்தான். தொடர்ந்து பேக்கிங் பண்ணிட்டுதான் இருக்கேன். ஆனா, ஒருநாளும் அதை பிசினஸா கொண்டுபோக நினைச்சதே இல்லை. லாக்டௌன்தான் அதுக்கான காரணமா அமைஞ்சது. லாக்டௌன்ல பேக்கரிகளையும் மூடினாதால நிறைய பேருக்கு பிரெட், பிஸ்கட் வாங்கக்கூட வழி யில்லை. எங்க வீட்டுலயும் அதே நிலைமை. அப்பதான் வீட்டுலயே பிரெட், பீட்சா எல்லாம் பேக் பண்ண ஆரம்பிச்சேன்.

கணவருடன்...
கணவருடன்...
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமையல் என்பது லைஃப்ஸ்கில்...
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமையல் என்பது லைஃப்ஸ்கில்...

பல வருஷங்களுக்கு முன்னாடி எனக்கும் என் ஹஸ்பண்டுக்கும் கொலஸ்ட்ரால் பிரச்னை இருந்தது. அதுலேருந்து வெளியேவர ஆரோக் கியமான சமையல் பக்கம் திரும்பி னோம். அந்த பீரியட்ல நான் பண்ணின லோ கலோரி குக்கிங்கும், மைக்ரோவேவ் சமையலும் பயங்கர பிரபலமாச்சு. லாக்டௌன் டைம்ல பேக்கரி தேவையையும் நிறைவேத்தணும், அதே நேரம் அதை ஆரோக்கியமாவும் செய்யணும்னு யோசிச்சு ஆரம்பிச்சதுதான் ஹெல்தி பேக்கிங்.

மைதா தவிர்த்து, சுகர் ஃப்ரீயா, கலோரி குறைவா... இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு தேவை இருந்தது. அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து என் பேக்கிங் பிசினஸை தொடங்கி னேன்...’’ - பிசினஸ்வுமன் ஆன இன்ட்ரோ சொல்பவர், நமக்கு குலாப் ஜாமூன் கேக்கும், வெஜ் பீட்சாவும் செய்து காட்டியபடியே தொடர்ந்தார்... ‘`கல்யாணத்துக்குப் பிறகுதான் நான் எம்.பி.ஏ படிச்சேன். இன்டர்நேஷனல் பிசினஸ் என்ற சப்ஜெக்ட் புதுசா இருந்தது. அதனால அதை செலக்ட் பண்ணி னேன். அதுவரை சயின்ஸ்தான் உலகம்னு நினைச்சிட்டிருந்த எனக்கு, எம்.பி.ஏ படிச்சதும் வேறோர் உலகத்துக்கான கதவு திறந்த மாதிரி இருந்தது. பிசினஸ் என்ற ஒரு விஷயத்தால எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுக்கவும் அவங்க வாழ்க்கையை மாத்தி அமைக்கவும் முடியம்னும் புரிஞ்சது...’’ எனும் கிருத்திகாவின் கைப்பக்குவத்துக்கு சாமானியர்கள் முதல் செலிபிரிட்டீஸ் வரை பலரும் சோஷியல் மீடியாவில் பகிரும் கமென்ட்ஸே சாட்சி.

‘`சமீபத்துல ஒய்.ஜி.மகேந்திரன் சாரோட பிறந்தநாளைக்கு அவங்க மகள் கேக் ஆர்டர் பண்ணாங்க. அவரோட வாழ்க்கையை நடிப்பு, தியேட்டர்னு செலவழிச்சதால அந்த கான்செப்ட்டை வெச்சுக் கேட்டிருந்தாங்க. சாப்பிடக்கூடிய போட்டோ ஃபிரேம்ஸை வெச்சும் அவர் ரெட் கார்பெட்ல நடக்குற மாதிரியும் டிசைன் பண்ணிக் கொடுத்தேன். அவங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சதா சொன்னாங்க.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமையல் என்பது லைஃப்ஸ்கில்...
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமையல் என்பது லைஃப்ஸ்கில்...

டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம், தன் ஹஸ்பண்ட் கார்த்தி சிதம்பரத்துக்காக கேக் ஆர்டர் பண்ணாங்க. பாதாம் மாவு வெச்சு, சர்க்கரையே இல்லாம பண்ணிக்கொடுத்த அந்த கேக்கும் பெரிய பாராட்டை வாங்கித் தந்தது. பலநேரம், செலிபிரிட்டியா, சாமானியரான்னெல்லாம் தெரியாமலே ஆர்டர் எடுத்திருக்கேன். யாருக்குப் பண்றோம்னு தெரியாம, ஆர்டர் பண்றவங்களோட தேவையைப் பொறுத்துப் பண்றது இன்னும் எக்ஸைட்டிங்கா இருக்கும்...’’ கேக்கில் ஐஸிங் செய்யும் அந்த நேர்த்தியே அவரது ஆர்வத்தைப் புரியவைக்கிறது.

சமையலை பிசினஸாக மாற்றிக்கொண்டு விட்ட கிருத்திகா, சமையல் என்கிற விஷயத் தைப் பார்க்கும்விதமே வேறாக இருக்கிறது.

‘`என்னைப் பொறுத்தவரைக்கும் சமையல் என்பது லைஃப்ஸ்கில். அது ஆண், பெண் ரெண்டு பேருக்கும் தெரிஞ்சிருக்கணும். வாழ்க்கையில அந்தஸ்து உயர்ந்துட்டதால, ‘குக்கிங்கா... நானா... நான்சென்ஸ்’ னெல்லாம் நான் சொல்ல மாட்டேன். யாரும் சொல்லவும் கூடாது. எங்க வீட்டுலயும் சமையலுக்கு உதவிக்கு ஆட்கள் இருக்காங்க. ஆனாலும் நான்தான் மீல் பிளானிங் பண்ணு வேன். அதே நேரம் எனக்கும் வேற வேற வேலைகளும், வொர்க் அவுட் மாதிரியான ‘மீ டைமும்’ இருக்கும். எனக்கான நேரத்தை தியாகம் பண்ணிட்டு நான் சமைக்கணும்னு வீட்டுல யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க. அதேபோல உதவிக்கு ஆட்களே இல்லாதபோதும் எனக்கு என் வொர்க் அவுட்தான் முக்கியம்னு சமையலைத் தவிர்க்கவும் மாட்டேன். அந்த நேரத்துல எனக்கு சமையல் தான் முக்கியமா தெரியும். ‘எனக்கு குக்கர்கூட வைக்கத் தெரியாது’ங் கிறதை பெருமையா சொல்ற ஆண்களை சவுத்ல தான் அதிகம் பார்க்கிறோம். எங்க வீட்டைப் பொறுத்தவரை என் கணவர், மகன்னு எல்லாருக்கும் சமைக்கத் தெரியும். என் கணவர் நான் எழுந்திருக்கிற துக்கு முன்னாடியே எனக்காக ஃபில்டர் காபி போட்டு வெச்சு சர்ப்ரைஸ் கொடுப்பார். மகன் அரவிந்த், தவா பிரியாணி ரொம்ப சூப்பரா செய்வான். சமைக்கத் தெரியும்கிறதை பெருமையா பார்க்கிறவங்க எங்க வீட்டு ஆண்கள்.

நார்த்ல இருந்தபோது அங்கே நான் பார்த்த விஷயங்களை இங்கே பகிர்ந்துக்க நினைக்கிறேன். தினக்கூலி வேலை பார்க்கிற ஆண்களா இருப்பாங்க. ஆனா, அவங்க பண்ற ரொட்டி, சப்ஜி அவ்வளவு பிரமாதமா இருக்கும். சமையல், பெண்களோட வேலை தானேனு அவங்க நினைக்கறதில்லை. சமைக்கறதை கவுரவக்குறைவாகவும் பார்க்கிறதில்லை. வேலையை முடிச்சிட்டு எவ்வளவு லேட்டா வீட்டுக்கு வந்தாலும் சட்டுனு சமைச்சு, வீட்டுப்பெண்களுக்கும் கொடுக்கிற தைப் பார்த்திருக்கேன். சமைக்கத் தெரியாதுனு சொல்றதை ‘சாவி இருக்கு... திறக்கத் தெரியலை’னு சொல்ற மாதிரிதான் பார்க்கறேன்...’’ சமையலை பெண்ணடிமைத்தனமாகப் பார்க்க வேண்டியதில்லை என்று உணர்த்துகிறது கிருத்திகாவின் பேச்சு.

சமையற்கலை வகுப்புகள் எடுக்கச் சொல்லிக் கேட்கும் மக்களின் கோரிக்கையை விரைவில் கையில் எடுக்கப்போவதாகச் சொல்பவர், பேக்கிங் பிசினஸில் ஆர்வமுள்ளோருக்கான மெசேஜும் சொல்லி முடிக்கிறார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமையல் என்பது லைஃப்ஸ்கில்...

‘`பேக்கிங் பிசினஸை பொறுத்தவரை, சின்ன லெவல்ல பிளான் பண்றதைவிட பெரிசா பிளான் பண்றதுதான் லாபகரமானதா இருக்கும். உங்க பிராண்டு வெளியில பிரபலமாகிறவரை பொறுமையா முயற்சிகளைத் தொடரணும். பத்தோட ஒண்ணா இல்லாம, உங்களுடைய ஸ்பெஷாலிட்டி என்னன்னு முடிவு பண்ணி அதை நோக்கி நகருங்க. வெற்றியோடு மனநிறைவும் உங்க வசமாகும்.’’

கிருத்திகா ராதாகிருஷ்ணனின் விரிவான பேட்டியை https://bit.ly/33xQxee லிங்கில் முழுமையாகப் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism