Published:Updated:

“விதியின் எந்த விளையாட்டையும் எதிர்கொள்ளத் தயாரா இருக்கேன்!”

இந்து
பிரீமியம் ஸ்டோரி
இந்து

இரும்பு மனுஷி இந்துவின் தன்னம்பிக்கை

“விதியின் எந்த விளையாட்டையும் எதிர்கொள்ளத் தயாரா இருக்கேன்!”

இரும்பு மனுஷி இந்துவின் தன்னம்பிக்கை

Published:Updated:
இந்து
பிரீமியம் ஸ்டோரி
இந்து

‘துணிவே துணை’ என்பதற்கு உதாரண மனுஷியாகத் திகழ்பவர், கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் இந்து. ‘லூபஸ்’ எனப்படும் மிக அரிதான முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டு முறை மரணத்தை வென்றவர் இவர். குணப்படுத்த முடியாத இந்த நோய்க்கு எதிரான வாழ்க்கைப் போராட்டத்துடன் மருத்துவ ராக முன்னேறிய இந்துவுக்கு, தற்போது 31 இணை நோய்கள் உள்ளன. ஆனாலும், துயரங்கள் சூழ்ந்த வாழ்க்கையை இன்முகத் துடன் எதிர்கொண்டு, சுய அடையாளத்து டன் முன்னேறத் துடிக்கும் இவரின் தன்னம்பிக்கை, அவரது பேச்சிலும் பிரதி பலிக்கிறது.

“என் பூர்வீகம் ஆலப்புழா. அம்மா போஸ்ட் மாஸ்டராவும், அப்பா கடற்படை யில ஷிப்மென்ட் அதிகாரியாவும் வேலை பார்த்தாங்க. பெற்றோரின் அன்பும் பாசமும் எனக்குச் சரியா கிடைக்காததால, உளவியல்ரீதியா கடுமையா பாதிக்கப்பட் டேன். 15 வயசு வரைக்கும் ஆரோக்கியமா தான் இருந்தேன். திடீர்னு அரிப்பு, தடிப்பு உட்பட பலவிதமான சரும பாதிப்புகள் ஏற்பட்டுச்சு. நினைவாற்றலும் குறைஞ்சது. போராடிப் படிச்சும், நுழைவுத் தேர்வுல எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கலை.

பல் மருத்துவத்துக்கான பி.டி.எஸ் கோர்ஸ்ல சேர்ந்தேன். அதுக்கப்புறமாதான் எனக்கு ‘லூபஸ்’ நோயின் தீவிரம் அதிக மாச்சு. பெரும்பாலான உடல் உறுப்புகள்ல யும் வித்தியாசமான தொந்தரவுகள் உண்டாச்சு. ஒரு பிரச்னையைச் சரிப்படுத் துறதுக்குள்ள புதுப்புது இணை நோய்கள் உருவாகிட்டே இருந்துச்சு. அந்தக் கொடுமை யான நாள்களையும் சந்தோஷமாவே கடந்தேன். ஆனா...” பீடிகையுடன் இடை வெளிவிடும் இந்துவுக்கு, அவரை இயக்கிய ‘அந்த சந்தோஷ’மும் பாதியிலேயே அறுந்துபோனது பெரும் துரதிர்ஷ்டம். மனதைக் கலங்கடிக்கும் அந்த அத்தி யாயத்தை சலனமின்றி பகிர்ந்தார் இந்து.

“விதியின் எந்த விளையாட்டையும் எதிர்கொள்ளத் தயாரா இருக்கேன்!”

“லூபஸ் நோயால என் உடல்ல நோய் எதிர்ப்பு சக்தி மாறுபட்டதால, எனக்குப் பல முறை கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப் பட்டுச்சு. அஞ்சாவது தவணையா கொடுக்கப்பட்டப்போ, அடுத்தடுத்து ஆறு முறை எனக்கு வலிப்பு ஏற்பட்டுச்சு. சுயநினைவில்லாம அபாயகட்டத்துக்குப் போய் உயிர் பிழைச்சேன். வலிப்பு ஏற்படுற தைக் கட்டுப்படுத்த எனக்குக் கொடுக்கப் பட்ட மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி, என் சருமம் முழுக்கவே எரிஞ்ச மாதிரி ஆகிடுச்சு. கை மற்றும் கால் நகங்களும், தலைமுடியும் முழுமையா கொட்டிடுச்சு. பிங்க் கலர்ல என் உடல் ரொம்பவே விகார மானதுடன், எல்லா உறுப்புகள்லேருந் தும் ரத்தம் கசிஞ்சது. மெல்லிய காட்டன் துணியைத்தான் மாசக்கணக்குல என் உடல்ல போத்தி வெச்சிருந்தாங்க...” இரண் டாவது முறையாக மரணத்தின் விளிம்பைத் தொட்டுப்பார்த்த இந்து, அதன்பிறகு, மூன்றாண்டுகள் படுக்கையில் இருந்திருக் கிறார்.

“எனக்கு ‘லூபஸ்’ நோய்தான் ஏற்பட்டிருக் குங்கிறதை ஏழு வருஷங்களுக்குப் பிறகு தான் டாக்டர்கள் உறுதிபடுத்தினாங்க. ‘லூபஸ்’ உள்ளவங்களுக்கு, மனசை பாதிக்கிற சூழல் ஏற்படுறப்போதான் இந்த நோயின் தீவிரத்தை உணர முடியுமாம். சின்ன வயசுல உளவியல் ரீதியா நான் பாதிக்கப்பட்டதாலகூட, இந்த நோயின் தீவிரம் வெளிப்பட்டிருக்கலாம்னு டாக் டர்கள் சொன்னாங்க. ஒருகட்டத்துல இந்த நோயைப் புரிஞ்சுகிட்டு, என் வாழ்க்கை முறையையும் மாத்திக்கிட்டேன். அஞ்சு வருஷங்கள்ல முடிக்க வேண்டிய பி.டி.எஸ் படிப்பை, ‘லூபஸ்’ பாதிப்பால பத்து வரு ஷங்களுக்குப் பிறகே முடிச்சேன்” என்பவர், தற்போது கொச்சியில் வசித்துவருகிறார்.

தனியார் மருத்துவமனையில் சில காலம் பல் மருத்துவராகப் பணியாற்றிய இந்துவுக்கு அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கிருந்து விலகியவர், ‘பப்ளிக் ஹெல்த்’ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் இந்திய அளவில் 14-வது இடம்பிடித்து முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். பின்னர், திருச்சூரிலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றுடன் ஆராய்ச்சிப் பணிகளை மேற் கொண்டிருந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நிறுவனத்தின் பணியாளராக ஓராண்டு பணி யாற்றியிருக் கிறார். அதன்பிறகு, மற்றொரு தனியார் மருத்துவக் கல்லூரியிலும் சில காலம் வேலை செய்திருக்கிறார் இந்து.

மரணத் தறுவாய்வரை சென்றபோதும் கலங்காத இந்துவை, காதல் தோல்வி பெரிதும் உலுக்கியிருக்கிறது. அந்த நினைவுகளில் மெது வாகக் கரைந்தவர், “எனக்கு ‘லூபஸ்’ ஏற்பட்ட புதுசுல, என் அம்மா சில காலம்தான் பக்கத்தி லேருந்து என்னைப் பார்த்துகிட்டாங்க. அந்த நேரத்துலதான் அவரோடு பழக ஆரம்பிச்சேன். என் ஃபிரெண்டோட சகோதரர் அவர். என்னை முழுமையா புரிஞ்சுகிட்டு, யாராலயும் எனக்குத் தர முடியாத அன்பையும் அக்கறை யையும் கொடுத்தார். அவரோட பாசத்துல வலிகளை மறந்தேன். ஆனா, எனக்குப் புதுப்புது பாதிப்புகள் கூடிகிட்டே போகவே, ஒருகட்டத்துல அவர் ரொம்பவே வெறுப்பாகி, பதினொரு வருஷக் காதலை பிரேக்அப் பண்ணிட்டார். அந்தப் பிரிவால ரொம்பவே உடைஞ்சுபோயிட்டேன். மாசக்கணக்குல பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தேன். அடுத் தடுத்து கூடிகிட்டே போகிற வலிகளைத் தாங்கிக்க உடம்புல தெம்பு வேணுமேன்னு என்னைச் சமாதானப்படுத்திகிட்டேன்...” எதையும் தாங்கும் இதயமாகப் புன்னகைக்கும் இந்துவுக்கு வயது 37.

கடுமையான வயிற்றுப்போக்கை உண் டாக்கும் ‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ பாதிப்பு, தசைநார் வலி, கண்புரை, அதீத தூக்கம் அல்லது தூக்கமின்மை, அதீத தலை வலி, அடிக்கடி உடலில் ஷாக் அடித்த உணர்வு ஏற்படுவது, அவ்வப்போது பெரும்பாலான உடல் உறுப்புகளில் உணர்வு மரத்துப்போவது உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இணை நோய்கள் இந்துவின் மன வலிமையைப் பெரிதும் சோதித்திருக்கின்றன.

“வாழ்நாள் முழுக்க மருந்து, மாத்திரைகள், பத்திய சாப்பாடு எடுத்துக்கணும். தினமும் யோகா, தியானம், உடற்பயிற்சிகள் செய்ய ணும். அதிகமான வெயிலும் குளிரும் எனக்கு ஒத்துக்காது. ரொம்ப கவனமாதான் வெளி யிடங்களுக்குப் போவேன். என் உடல்நிலை பாதிப்புகள், பெற்றோருக்கு என்மேல கூடுதல் வெறுப்பை ஏற்படுத்திடுச்சு. அதனால, அவங்க என்கிட்ட பேசுறதில்லை. நான் தனியாதான் வாழுறேன். மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டிருப்பதால, ரொம்பவே யோசிச்சு செய்ய வேண்டிய ஆராய்ச்சி வேலைகளை என்னால செய்ய முடியாது. அதனாலதான், போன வருஷம் தொழில் முனைவோரா புதுப் பயணத்தை ஆரம்பிச் சேன்...” தடைகளையெல்லாம் படிக்கட்டு களாகத் தாண்டிய இந்து, கைத்தறியால் நெய்யப்பட்ட பெண்களுக்கான ஆடைகளை யும், படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கான ஆடைகளையும் ஆன்லைனில் விற்பனை செய்துவருகிறார்.

“டிராவல், போட்டோகிராபியில எனக்கு ரொம்ப ஆர்வம். உலகத்தைச் சுத்திப் பார்த்து, வாழ்க்கையை முழுமையாவும் சந்தோஷமாவும் வாழ ஆசைப்படுறேன். எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாதுனு உறுதியா நம்புறேன். அதனால, எஞ்சிய வாழ்க்கையையும் நம்பிக்கை யுடன் கடக்க நான் தயார்தான். ஆனா, விதி யோட விளையாட்டு நம்ம கையில இல் லையே...” நிதர்சனத்துடன் முடிக்கும் இந்து வின் குரலில் வற்றாத புன்னகை வழிந்தோடு கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism