Published:Updated:

தந்தைக்கு இதைவிட பெரிய பரிசா? -விமானப்படையில் பட்டம் பெற்ற டீக்கடைக்காரரின் மகள்

ஆஞ்சல்
ஆஞ்சல்

திறமைக்கு வறுமை ஒரு தடையல்ல என நிரூபித்துக் காட்டியிருக்கும் ஆஞ்சலின் தந்தை சுரேஷ் கூறியதாவது, ``தந்தையர் தினத்திற்கு யாராலும் கொடுக்க முடியாத பரிசை என் மகள் எனக்கு கொடுத்துள்ளார்’ என்றார்.

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் கங்வால். `நமதேவ்' (Namdeo) என்ற பெயரில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர முடியாத சுரேஷ் கங்வாலுக்கு அவரது மகள் ஆஞ்சல், கடந்த சனிக்கிழமை அன்று தந்தையர் தினத்தன்று ஒரு சிறப்பு பரிசளித்துள்ளார். அது இந்திய விமானப்படை அகடாடமி (Indian Air Force Acadamy)-ல் ஆஞ்சல் படித்து `flying officer’ ஆக பட்டம் பெற்ற செய்திதான். அதுமட்டுமல்லாது ஜனாதிபதியிடம் இருந்து பதக்கத்தையும் அவர் பெறுவார்.

தந்தைக்கு இதைவிட பெரிய பரிசா? -விமானப்படையில் பட்டம் பெற்ற டீக்கடைக்காரரின் மகள்

திறமைக்கு வறுமை ஒரு தடையல்ல என நிரூபித்துக் காட்டியிருக்கும் ஆஞ்சலின் தந்தை சுரேஷ் கூறியதாவது, ``தந்தையர் தினத்திற்கு யாராலும் கொடுக்க முடியாத பரிசை என் மகள் எனக்குக் கொடுத்துள்ளார். அவளை நினைக்கவே பெருமையாக இருக்கிறது. என் குடும்பம் மிகவும் கடினமான சூழலில்தான் வாழ்ந்து வருகிறது. அதே சமயம் வறுமையை புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தவாறே வாழ்ந்து வருகிறோம். என் மனைவி இதுவரையிலும் மற்ற பெண்களைப் போல, தங்க நகைகள் எதையும் வாங்கித்தர சொல்லிக் கேட்டதே இல்லை. குடும்ப நிலை உணர்ந்து, நான் வாங்கித்தரும் கவரிங் நகையையே மகிழ்வோடு அணிந்துகொள்வாள். என் மனைவிக்கு சிறிதளவு தங்க நகை கூட வாங்கித்தராத நான், வங்கியில் கடன் வாங்கி என் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். அதற்கான பலன் இன்று கிடைத்துவிட்டது என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.

ஆண், பெண் பேதமில்லை!

தொடர்ந்து பேசியவர், ``ஆஞ்சலை எங்கள் மகளாகப் பெற்றதை நினைத்து நானும் என் மனைவியும் எத்தனையோ முறை பெருமையடைந்துள்ளோம். எனக்கு அந்த நிகழ்வு நன்றாக நினைவிருக்கிறது. நானும் பபிதாவும் டீக்கடையில் வேலை செய்யும்போது ஆஞ்சல் வருவாள். ஓர் ஓரமாக அமர்ந்து அவளுக்கு பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடங்களை எல்லாம் முடித்துவிட்டு எங்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து தருவாள். பொதுவாகவே கிராமப்புறங்களில் ஆண்குழந்தைக்கு இணையாக பெண்குழந்தையை நடத்துவது கிடையாது. ஆனால் நாங்கள் ஆண், பெண் பேதமின்றிதான் எங்கள் பிள்ளைகளை வளர்த்தோம். ஆணுக்கு இணையான கல்வியை எங்கள் பெண்ணுக்கும் கொடுத்தோம். அவளும் எங்கள் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டாள் ' என்று பூரிப்புடன் கூறுகிறார்.

தந்தைக்கு இதைவிட பெரிய பரிசா? -விமானப்படையில் பட்டம் பெற்ற டீக்கடைக்காரரின் மகள்

`கடந்த டிசம்பர் மாதம் எங்கள் ஊருக்கு வந்திருந்தபோது, நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்று கூப்பிட்டும் கூட ஆஞ்சலுடைய பட்டமளிப்பு விழா ஹைதராபாத்தில் நடந்ததாலும், ஊரடங்கின் காரணமாகவும் எங்கள் குடும்பத்தினரால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும் எங்களுடைய ஆசி அவளுக்கு எப்போதும் உண்டு. நான் உறுதியாகக் கூறுகிறேன், நம் தேசத்திற்காக அவள் தன்னால் முடிந்த எதையாவது சாதித்துக் காட்டுவாள்'' என்று கூறி முடித்தார், இந்த தன்னம்பிக்கை தந்தை.

அடுத்த கட்டுரைக்கு