Published:Updated:

மீண்டும் `ஜாலி டே'... மதுரையைக் கலக்கிய வாசகிகள் கொண்டாட்டம்!

மதுரை ஜாலி டே
பிரீமியம் ஸ்டோரி
மதுரை ஜாலி டே

என் மகன் வேலை பார்க்கிறான். மகளுக்குக் குழந்தை பிறக்கப்போகுது. நான் பாட்டி ஆகப் போறேன்” எனக் கூறி அனைவரையும் இன்னும் வியக்க வைத்தார்.

மீண்டும் `ஜாலி டே'... மதுரையைக் கலக்கிய வாசகிகள் கொண்டாட்டம்!

என் மகன் வேலை பார்க்கிறான். மகளுக்குக் குழந்தை பிறக்கப்போகுது. நான் பாட்டி ஆகப் போறேன்” எனக் கூறி அனைவரையும் இன்னும் வியக்க வைத்தார்.

Published:Updated:
மதுரை ஜாலி டே
பிரீமியம் ஸ்டோரி
மதுரை ஜாலி டே

‘உங்களுக்கே உங்களுக்குனு ரெண்டு நாள்... கொண்டாட்டத் திருநாள்’ என்று அவள் விகடன் நம் வாசகிகளுக்குப் பரிசளிக்கும் ‘ஜாலி டே’, இதோ... மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. பிப்ரவரி 26, 27-ம் தேதிகளில் மதுரை, சமூக அறிவியல் கல்லூரி அரங்கில் நடந்த ‘ஜாலி டே’ விழாவை சத்யா ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனம் இணைந்து வழங்க, அரங்கம் நிரம்ப கலந்துகொண்டு கொண்டாடி குதூகலித்தனர் வாசகிகள்.

மதுரை, சமூக அறிவியல் கல்லூரி செயலாளர் தர்மசிங், முன்னோடி இயற்கை விவசாயி புவனேஸ்வரி, ‘ஹலோ’ பண்பலை தொகுப்பாளர் ‘டைரி’ செல்வகீதா, மதுரை 79-வது வார்டு மாமன்ற உறுப்பினர் லக்ஷிகாஸ்ரீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள, அவர்களுடன் இணைந்து குத்துவிளக்கேற்ற அவள் விகடன் வாசகி காமேஸ்வரி கண்ணனையும் நாம் மேடைக்கு அழைக்க, இனிதே தொடங்கியது விழா.

முந்தைய ஆண்டுகளில் ‘ஜாலி டே’ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய, நம்மை விட்டுப் பிரிந்த வி.ஜே சித்ராவுக்கு நினைவஞ்சலி காணொலி திரையிடப்பட, ‘மிஸ் யூ சித்ரா’ என்று ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குரல் கசிந்தது. சிவமணி நாட்டியாலயாவைச் சேர்ந்த தீபிகா, ரத்தினலக்ஷ்மியின் வரவேற்பு நடனம் விழாவுக்கு உற்சாகத்தைக் கொண்டுவர, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள் தொகுப் பாளர்கள் தீபிகாஷி, யோயோ.

மீண்டும் `ஜாலி டே'... மதுரையைக் கலக்கிய வாசகிகள் கொண்டாட்டம்!
மீண்டும் `ஜாலி டே'... மதுரையைக் கலக்கிய வாசகிகள் கொண்டாட்டம்!

முந்தைய நாள் பிப்ரவரி 26-ம் தேதி ரங்கோலி, மெஹந்தி, அடுப்பில்லா சமையல், ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ், நடிப்பு, நடனம், பாட்டு, பட்டிமன்றம், ஸ்கிரிப்ட் ரைட்டிங், RJ / VJ எனப் பல பிரிவுகளிலும் முன்தேர்வுப் போட்டிகள் நடைபெற்றன. மதுரை லேடி டோக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் கவிதாராணி, பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் அவனி மாடசாமி, மதுரை ஃபாத்திமா கல்லூரி பேராசிரியர் மேக்தலின் விர்ஜினியா, ஆர்டிஸ்ட் லக்ஷ்மி ரவி, கைவினைக் கலைஞர் ஜெயா வெற்றி, மேக்கப் ஆர்டிஸ்ட் மலர் பாக்கியம், நடன ஆசிரியர் மேகலா தேவி, அரசு உதவி பெறும் பள்ளியின் இசை ஆசிரியர் சாவித்ரி என நம் நடுவர்கள் வெற்றியாளர் களைத் தேர்ந்தெடுத்தனர். மறுநாள் நடந்த இறுதிப் போட்டியில் அரங்கம் கலகலத்தது.

‘பெண்கள் அதிகம் போற்றப்படுவது வீட்டிலா, வெளியிலா?’ என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றப் போட்டியில் எதிரெதிர் அணியாகப் பிரிந்து தங்கள் கருத்துகளை சுவாரஸ்யத்துடன் வெளிப்படுத்திய வாசகி களை உற்சாகப்படுத்தினார் நடுவர் அவனி மாடசாமி. அதைத் தொடர்ந்து பாட்டு, நடனம், நடிப்பு எனப் போட்டி களில் வாசகிகள் ‘வேற லெவல்’ காட்ட, கரகோஷத்திலும் கொண்டாட்டத்திலும் அதிர்ந்தது அரங்கம்.

 தொடக்க விழா...
தொடக்க விழா...
 மகள்களுடன் மதுரை முத்து...
மகள்களுடன் மதுரை முத்து...
 ரங்கோலி போட்டி...
ரங்கோலி போட்டி...

நடனப் போட்டியில் செம குத்தாட்டம் போட்ட மகேஸ் வரியிடம், ‘என்ன எனர்ஜி இது...’ என்று தொகுப்பாளர்கள் வியந்துபோய் கேட்க, அவரோ, “என் மகன் வேலை பார்க்கிறான். மகளுக்குக் குழந்தை பிறக்கப்போகுது. நான் பாட்டி ஆகப் போறேன்” எனக் கூறி அனைவரையும் இன்னும் வியக்க வைத்தார். நடிப்புப் போட்டியில் பெண் களுக்கு எதிரான வன்முறைகளை நடித்துக்காட்டிய ராஜேஸ்வரிக்கு கைத்தட்டல் அடங்க வெகு நேரமானது. நவரசங்களையும் நடிப்பின் மூலம் வெளிப்படுத்திய இளவேனில், இறுதியாக அழுகையை வெளிப்படுத்திய போது, ‘அப்பப்பா’... ஆனால், போட்டி முடிந்த பின்னரும் இளவேனிலுக்குக் கண்ணீர் பெருக்கெடுக்க, நம் தொகுப்பாளர்கள் பதறி விசாரிக்க, “எனக்கு அவள் விகடன் `ஜாலி டே'... தாய் வீடு மாதிரி. உளுந்தூர்பேட்டையில இருந்து வர்றேன். எந்த ஊருல `ஜாலி டே' நடந்தாலும் நான் போயிடுவேன். அம்மா இப்ப இல்லை. கணவரும் சமீபத்துல தவறிட்டார். அந்த வெறுமையில இருந்த நான், அதிலிருந்து வெளிவரத்தான் `ஜாலி டே'க்கு வந்தேன்’’ என்றபோதுதான் தெரிந்தது... அது ஆனந்தக் கண்ணீர். ‘`அவள் விகடன் இருக்கு உங்களுக்கு. நாங்க எல்லாரும் இருக்கோம்’’ என்று கூறி அரவணைத்துக் கொண்டார் தொகுப்பாளர் தீபிகாஷி. அடுத்து, அருக் காணி வேடமிட்டு அசத்தினார் 74 வயது பாகம்பிரியாள்.

 நடுவர்கள் பட்டாளம்...
நடுவர்கள் பட்டாளம்...
 ஆட்டம் பாட்டம்... கொண்டாட்டம்...
ஆட்டம் பாட்டம்... கொண்டாட்டம்...

நிகழ்ச்சியின் குதூகலத்தை இன்னும் உச்சிக்கு எடுத்துச் சென்றது, மதுரை முத்துவின் என்ட்ரி. ‘சிவ பெருமான் பல திருவிளையாடல்கள் புரிந்த ஊரு, காந்தி முதல்முறையா வேட்டிக்கு மாறிய ஊரு, நடிகர்களுக்கு முதல்ல ரசிகர் மன்றம் தொடங்கின ஊரு...’ என மதுரை யின் பெருமைகளை அடுக்கிச் சொல்லி அவர் தன் பேச்சை ஆரம்பிக்க, விசில் பறந்தது கூட்டத்தில். ‘ஒரு நிமிஷ சிரிப்பு ஒரு கிராம் தங்கத்தை விடப் பெருசு. எல்லாரும் சிரிக்கணும். அதுலயும், பல விதத்துலயும் ஸ்டெரெஸ்ல இருக்குற பெண்கள் நிறைய சிரிக்கணும்’ என்று அனைவரையும் சிரிக்கவைத்தார். மதுரை முத்து வுடன் அவரின் மகள்கள் யாழினிஸ்ரீயும் முத்துராஸ்ரீயும் வந்திருந்தனர். யாழினிஸ்ரீ, தன் அப்பா போலவே தன் பங்குக்கு ஒரு ஜோக் சொல்லி அரங்கை குலுங்கவைத்தார்.

‘ஜாலி டே’ நிகழ்ச்சியின் ஸ்பான்ஸர்கள் நடத்திய `ஆன் தி ஸ்பாட்' போட்டிகளில், பரிசுகளை அள்ளிச் சென்றனர் வாசகிகள். ‘மியூசிக்கல் சேர்’ நடத்தி வெற்றி யாளர்களுக்கு சேர்களை வழங்கியது ‘சுப்ரீம் சேர்ஸ்’. ‘RAS செக்கு எண்ணெயை விற்றுக் காட்டுங்கள் பார்ப்போம்’ என்று அந்நிறுவனத்தினர் அழைக்க, இன்ஸ்டன்ட் விற்பனைப் பிரதிநிதிகளாக அசத்திய பெண்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ‘லெவிஸ்டா’ இன்ஸ்டன்ட் காபி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில், ‘நீங்கள் எந்த நட்சத்திரத்துடன் அமர்ந்து காபி குடிக்க ஆசைப்படுவீர்கள்?’ என்று கேட்கப்பட, முதல்வர் ஸ்டாலின் முதல் நயன்தாரா பெயர் வரை சுவாரஸ்யமான காரணங்களுடன் கூறி பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர் தோழிகள்.

‘போத்தீஸ்’ சார்பில் நடைபெற்ற ‘ரேம்ப் வாக்’ போட்டி யில் ஸ்டைலாக நடந்துகாட்டிய வாசகிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜி.ஆர்.டி சார்பில் நடத்தப்பட்ட, தங்க வளை யலை கையால் தூக்கிப்பார்த்து எடையைக் கணிக்கும் போட்டியிலும் சிக்ஸர் அடித்து பரிசு பெற்றனர் வாசகிகள்.

‘சத்யா அப்ளையன்சஸ்’ பற்றிய காணொலி ஒன்று ஒளிபரப்பப்பட்டு, அதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட, சரியான பதில் கூறியவர்களுக்கு ‘சத்யா’ சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை நேரம் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் இணைந்த ஹலோ எஃப்.எம் ரேடியோவின் ‘ஆர்ஜே’ சிக்கந்தர், அரங்கை இசைவசமாக்கினார். பாடலை ரிவர்ஸில் ப்ளே செய்து வாசகிகளைக் கண்டு பிடிக்கச் செய்யும் விளையாட்டை அவர் நடத்த, வாசகி களின் உற்சாகம் இரண்டு மடங்கானது.

மீண்டும் `ஜாலி டே'... மதுரையைக் கலக்கிய வாசகிகள் கொண்டாட்டம்!

இறுதியாக, வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கும் தருணம். அனைத்துப் போட்டிகளிலும் கலக்கிய வாசகி களுக்குப் பரிசுகள் வழங்கப்பட, அந்த திக்... திக்... 'த்ரில்' நிமிடம் வந்தது. `அவள் விகடன்’ வழங்கும் ரூ.20,000 மதிப்பிலான பம்பர் பரிசுக்கு உரிய கூப்பன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘யார் பேரைக் கூப்பிடப் போறாங்களோ’ என்று ஆடிட்டோரியமே நகம் கடித்தபடி இருக்க, கவுன்ட்டௌன் விட்டு இறுதியில் ‘கனகவள்ளி...’ என்று அழைத்தனர் நம் தொகுப்பாளர்கள். நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் மேடைக்கு ஓடிவந்தார், மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்த கனகவள்ளி.

“நான் ரொம்ப கூச்ச சுபாவம். எதுலயும் கலந்துக்க யோசிப்பேன். ஆனா, `ஜாலி டே'னா மட்டும் முதல் ஆளா கிளம்பிடுவேன். இங்க எல்லாரும் என்ஜாய் பண்றதைப் பார்க்கும்போது நமக்கும் அந்த உற்சாகம் தொத்திக்கும். இதுவரை `ஜாலி டே'ல எந்தப் பரிசும் வாங்குனது இல்லை. இப்போ பம்பர் பரிசே கிடைச்சிருக்கு’’ என்றார் புன்னகையும் பூரிப்புமாக.

கை நிறைய பரிசுகளுடனும், மனம் நிறைய உற்சாகத் துடனும் கிளம்பிய வாசகிகள் மறக்காமல் கேட்டார்கள்... ‘அடுத்த `ஜாலி டே' எந்த ஊர்ல?’ நம்ம சிங்காரச் சென்னையில்தான்!

ஆரம்பிக்கலாங்களா?!

மீண்டும் `ஜாலி டே'... மதுரையைக் கலக்கிய வாசகிகள் கொண்டாட்டம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism