Published:Updated:

2K கிட்ஸ்: ‘ஓடி ஓடி உழைக்குறோம்!’ - மாண்புமிகு பெண் உழைப்பாளர்கள்

பெண் உழைப்பாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பெண் உழைப்பாளர்கள்

- ரேவதி சோமசேகரன், ப.யோகேஸ்வரி

2K கிட்ஸ்: ‘ஓடி ஓடி உழைக்குறோம்!’ - மாண்புமிகு பெண் உழைப்பாளர்கள்

- ரேவதி சோமசேகரன், ப.யோகேஸ்வரி

Published:Updated:
பெண் உழைப்பாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பெண் உழைப்பாளர்கள்

இப்போவெல்லாம், உடல் உழைப்பு என்பதே இல்லாம பெரும்பாலும் எல்லாரும் இயந்திரங்கள சார்ந்து வாழப் பழகிட்டோம். ஆனா இன்னொரு பக்கம், இப்பவும் பலர் இயந்திரம் மாதிரி ஓய்வேயில்லாம உடல் உழைப்பைக் கொட்டித்தான் வாழறாங்க. அப்படி, பதின் வயசுலேயே ஆரம்பிச்ச ஓட்டத்தை இப்பவும் நான் ஸ்டாப்பா தொடர்ந்துட்டு இருக்குற மதுரையைச் சேர்ந்த சில உழைப்பாளி அக்காக்கள்கிட்ட பேசினோம்.

2K கிட்ஸ்: ‘ஓடி ஓடி உழைக்குறோம்!’ - மாண்புமிகு பெண் உழைப்பாளர்கள்

பாண்டியம்மா

வெயில்ல உக்காந்து நெல்லிக்காய எல்லாம் வித்து முடிச்சாதான் அடுத்த நாளுக்கு வயித்துக்குக் காசு. வீட்டுக்காரருக்கு பாம்பு கடிச்சு உசுரு தப்பிச்சு வந்துருக் காரு. அதனால இப்போ எனக்கு ரெட்டை ஓட்டம். வீட்டுக் காரருக்கு, புள்ளைகளுக்கு ஆக்கிவெச்சுட்டு ஓடிப்போய் பஸ் ஸ்டாண்டுல வியாபாரம் பார்க்கணும். பிள்ளைகளை கடன ஒடன வாங்கியாச்சும் படிக்க வெச்சுடணும். எம் புள்ளைங்க ஒருநாள் வேலைக்குப் போய், ‘அம்மா இனி நீ வியாபாரத்துக்கு எல்லாம் போக வேண்டாம்’னு என் கிட்ட சொல்லுவாங்க இல்ல... அன்னிக்குத்தான் எனக்கு ரெஸ்ட்டு!

2K கிட்ஸ்: ‘ஓடி ஓடி உழைக்குறோம்!’ - மாண்புமிகு பெண் உழைப்பாளர்கள்

சசிகலா

ஆறாவது படிச்சப்போ உடம்புக்கு முடியாமப் போக, பள்ளிக்கூடத்தை விட்டு நின்னுட்டேன். வீட்டுல ரொம்ப கஷ்டம் என்பதால அப்படியே வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். இப்போ வரை என் கை காலுக்கு ஓய்வுன்னா என்னன்னே தெரியாது. கிடைச்ச வேலையை எல்லாம் செஞ்சு அம்மாகிட்ட காசு கொண்டுபோய் கொடுப்பேன். அப்புறமாதான் தையல் கத்துக்கிட்டேன். அது என்னைக் கைதூக்கி விட்டுச்சு. என்னடா இது இந்தக் கத்தரிக்கோலும் மெஷினுமாவே வாழ்க்கை கரையுதேனு அப்பப்போ தோணும். ஆனாலும், நாளைக்கு நம்ம புள்ளைகளுக்கும் நம்ம கஷ்டம் வரக் கூடாது, அவங்களை படிக்கவெச்சு ஆளாக்கிடணும்னு தானே உழைக்குறோம்னு நினைக்கும்போது அலுப் பெல்லாம் பறந்துபோயிடும். என்னோட தையல் மெஷின் இன்னிக்கு என்னை முதலாளியா ஆக்கியிருக்கு... வேறென்ன வேணும்?!

2K கிட்ஸ்: ‘ஓடி ஓடி உழைக்குறோம்!’ - மாண்புமிகு பெண் உழைப்பாளர்கள்

நாகஜோதி

தனி ஒரு பொண்ணா, சொந்தமா ஜெராக்ஸ் கடை நடத்துறேன். இந்த வெற்றிக்காக நான் கொடுத்திருக்குற, கொடுக்குற உழைப்பு நிறைய. ஒன்பதாவது படிச்சப்போ, ‘பள்ளிக்கூடத்துக்குப் போகமாட்டேன், வேலைக்குப் போறேன்’னு வீட்டுல சொல்லிட்டு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சேன். எம்ப்ராய்டரி, நகைக்கடை, மெடிக்கல் வேல, பத்திரிகை டிசைனிங்னு எல்லா வேலையும் பார்த்தேன். அங்கயெல்லாம் அதிகமா பசங்கதான் இருப்பாங்க. ஏன், ஒத்தைப் பொண்ணாகூட சில இடங்கள்ல வேலை பார்த்திருக்கேன். பொண்ணுங்களுக்கு வர்ற பிரச்னைகள் வரத்தான் செஞ்சது. ஓடிவராம, நின்னு சமாளிச்சேன். என் விவாகரத்து உட்பட, என்னோட எல்லா முடிவுலயும் எங்கம்மாதான் எனக்குத் துணையா இருந்தாங்க. 14 வயசுல ஆரம்பிச்ச உழைப்பு, இன்னிக்கு வரை ஓடுறேன். யாருக்கும் பாரமாவோ, யாரையும் சார்ந்தோ இல்லாம இருக்கோம்ங்கிற நினைப்பும் நிம்மதியும்தான் உற்சாகமா என்னை ஓட வெச்சுட்டே இருக்கு!

2K கிட்ஸ்: ‘ஓடி ஓடி உழைக்குறோம்!’ - மாண்புமிகு பெண் உழைப்பாளர்கள்

செல்வி

வீட்டுக்காரர் பெட்ரோல் பங்க்ல வேலபார்க்குறார். எங்க ரெண்டு பிள்ளைங்களும் காலேஜ்ல படிக்கிறாங்க. நான் பானிபூரி கடை போட்டிருக்கேன். தெனமும் காலையில வீட்டு வேலைகளை முடிச்சா, சாயங்காலம் 4.30 மணியில இருந்து ராத்திரி 10 மணி வரைக்கும் கடை வேலை இருக்கும். ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைக்கும். புள்ளைங்க படிப்புக்கு அது உதவும். நாம உழைச்சு சம் பாதிச்ச காசை எண்ணும்போது கிடைக்குற சந்தோஷம் இருக்கே... அதுக்கு இணையில்ல. ஆபீஸ் வேலையோ, கூலி வேலையோ, கை வேலையோ... எல்லா பொண்ணுங் களும் சுயமா சம்பாதிச்சுப் பழகணும்!

2K கிட்ஸ்: ‘ஓடி ஓடி உழைக்குறோம்!’ - மாண்புமிகு பெண் உழைப்பாளர்கள்

மகாலட்சுமி

சித்தாள் வேலதான் நமக்குச் சோறு போடுது. கொளுத்துற வெயில்ல, தலையில துண்டக் கட்டிக்கிட்டு, எட்டு செங்கலை சட்டியில வெச்சு தலைச் சுமையா தூக்கிக்கிட்டு, பிடிமானம் கூட இல்லாத படியில மாடி மாடியா ஏறிக் கொண்டு போகணும். எனக்கு அஞ்சு வயசு ஆனப்போ, ஒரு சண்டையில அப்பா, அம்மாவைக் கொன்னுட்டாரு. நான் சாட்சி சொன் னேன்னு, அப்பா வீட்டுல என்னை ஒதுக்கிட்டாக. சித்தி வீட்ல இருந்தேன். 16 வயசுலேயே காட்டு வேல, களையெடுக்குற வேலனு போனேன். கலப்புத் திருமணம்னு ரெண்டு வீட்டுலயும் ஏத்துக்கல. ரெண்டு பேரும் கட்டட வேலைக்கு வர ஆரம்பிச்சோம். வருஷமும் வாழ்க்கையும் ஓடிப்போச்சு. வெயிட் அதிகமா தூக்குனதால கர்ப்பப்பை இறங்கிடுச்சுனு அதை எடுக்கச் சொல்லிட்டாக டாக்டரு. மாடி ஏறாத, வெயிட் தூக்காதனு டாக்டரு சொல்றதையெல்லாம் கேக்குற மாதிரியா நம்ம பொழப்பு இருக்கு?