Published:Updated:

சைக்கிளிங், டைனிங், டயட்டிங்... மஹி மோகனின் ‘மாத்தி யோசி’ ரெஸ்டாரன்ட்!

மஹி மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
மஹி மோகன்

இன்டீரியர் டிசைனரான நான், இரட்டைக் குழந்தைங்க பிறந்ததும் கரியர்ல ஒரு பிரேக் எடுத்துக்கிட்டேன்

குண்டாக இருப்பவர்களுக்கு இளைக்க வேண்டுமே என்ற கவலை, ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொஞ்சம் எடை கூடலாமே என்ற ஏக்கம், சரியான எடையில் இருப்பவர்களுக்கு அதைத் தக்கவைத்துக் கொள்ளும் போராட்டம் என ஃபிட்னெஸ் என்பது எல்லோருக்குமான பொது பிரச்னையாக இருக்கிறது இன்று. எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண் டும் என அட்வைஸ் செய்ய மருத்துவர்களும் உணவியல் ஆலோசகர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் சொல்லும்படி சமைத்துச் சாப்பிடுவதில்தான் பலருக்கும் சிக்கலே. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல் லும் இடம்தான் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘லோ-கல் பை டம்பெல்’. சென்னையின் முதல் ஃபிட்னெஸ் ரெஸ்டாரன்ட் இது.

2019, நவம்பரில் தொடங்கப்பட்ட இந்த ரெஸ்டாரன்ட், கொரோனாவின் இரண்டு அலைகளையும் தாக்குப்பிடித்து வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. சென்னையைச் சேர்ந்த மஹி மோகன், தன் பிசினஸ் பார்ட்னர் அபிஷேக்குடன் இணைந்து இதை நடத்துகிறார்.

சைக்கிளிங், டைனிங், டயட்டிங்... மஹி மோகனின் ‘மாத்தி யோசி’ ரெஸ்டாரன்ட்!

“இன்டீரியர் டிசைனரான நான், இரட்டைக் குழந்தைங்க பிறந்ததும் கரியர்ல ஒரு பிரேக் எடுத்துக்கிட்டேன். கல்யாணத் துக்குப் பிறகு, எனக்கு கொஞ்சம் கொஞ்சமா வெயிட் அதிகமாக ஆரம்பிச்சது. குழந்தைங்க பிறந்ததும் இன்னும் எக்கச்சக்கமா வெயிட் போட்டேன். அந்த டைம்லதான் ஃபிட் னெஸ் பத்தின விஷயங்களைத் தேட ஆரம்பிச்சேன். டயட் மற்றும் வொர்க் அவுட் மூலமா 25 கிலோ வெயிட் குறைச் சேன். வெயிட்டை குறைச்சதும் எனக்குத் தன்னம்பிக்கையும் அதிகமாச்சு. ஃபிட்னெஸ் விஷயத்துல நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரிக்க ஆரம்பிச்சது. ஆரோக்கியமான உணவுகளின் மீதான அக்கறையும் அதிகரிச்சது. டயட் உணவுகளை மட்டுமே சாப்பிட்டதால வெளியில சாப்பிடுறதை அறவே தவிர்த்திருந்தேன். ஆனாலும், பிசியா இருக்குற நாள்கள்ல வெளியில சாப்பிட நினைச்சா, டயட் உணவுகளுக்கான இடமே இல்லைனு தெரிஞ்சது. அப்பதான் அது எனக்கு மட்டுமான பிரச்னையில்லை, ஃபிட்னெஸ்ல ஆர்வமுள்ள பலருக்குமான பிரச்னைனு புரிஞ்சது.

சென்னையில ரெஸ்டாரன்ட்டுகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனா, அதுல எத்தனை ரெஸ்டாரன்ட்ஸ் ஆரோக்கியமான உணவு களுக்கானவைனு பார்த்தா விரல்விட்டு எண்ணிடலாம். நிறைய பேருக்கு எடை கூடும் பிரச்னை இருக்கு. வெயிட் லாஸ் உணவுகளுக்கான தேவை அதிகமிருக்குறதும் எதிர்காலத்துல இது இன்னும் அதிகரிக்கும்னும் புரிஞ்சது. அத்தனை நாள் ஃபிட்னெஸ் தொடர்பா தெரிஞ்சுகிட்ட விஷயங்களையும் நியூட்ரிஷனிஸ்ட் கோர்ஸ் முடிச்ச அனுபவத்துலயும் ஆரோக்கிய உணவுகளுக்காக ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கலாம்னு ஐடியா வந்தது...’’ - ‘மாத்தி யோசி’த்த மஹி, பிசினஸில் சந்தித்த சவால்களையும் சக்சஸையும் பகிர்கிறார்.

‘‘ஹெல்த் ஃபுட்டுக்காக பிரத்யேக ரெஸ்டாரன்ட்டா, அந்தச் சாப்பாடெல்லாம் டேஸ்ட்டியா இருக்காது, யார் வருவாங்க...’ன்னு நிறைய கமென்ட்ஸ் வந்தது. இந்தத் துறையில எங்களுக்கு ரோல் மாடலா யாருமே இல்லை. எல்லாத்தையும் நாங்களே டிரை பண்ணி, நிறை குறைகளைத் திருத்திக் கிட்டுதான் படிப்படியா முன்னேறினோம். மக்களுக் குப் பரிச்சயமான இந்தியன், சைனீஸ், கான்டினெட்டல்னு எல்லாத்தையும் ஆரோக் கியமா கொடுக்கணும்னு முடிவு பண்ணினோம். ஒரு செஃப்பை வேலைக்கு எடுத்தோம். அவரோடு பல நாள்கள் உட்கார்ந்து இந்த உணவுக்கு இத்தனை ஸ்பூன்தான் எண்ணெய் சேர்க்கணும், இவ்வளவு தான் உப்பு சேர்க்கணும்னு நியூட்ரிஷனிஸ்ட் உதவியோடு கைடு பண்ணினோம். வொர்க் அவுட் ஆகாதுனு கமென்ட் அடிச்சவங்களுக் கெல்லாம் சாம்பிள் கொடுத்து சாப்பிட வெச் சோம். இன்னிக்கு அவங்க எல்லோரும் எங்க ரெகுலர் வாடிக்கையாளர்கள்...’’ பெருமை பேசுபவர், இந்த ரெஸ்டாரன்ட்டை மூன்று மாடல்களில் நடத்துகிறார்.

சைக்கிளிங், டைனிங், டயட்டிங்... மஹி மோகனின் ‘மாத்தி யோசி’ ரெஸ்டாரன்ட்!

‘‘டைன் இன்ல ரெஸ்டா ரன்ட்டுக்கு வந்து சாப்பிட லாம். அப்படிச் சாப்பிடுற வங்க, ஒவ்வோர் உணவுலயும் எத்தனை கலோரிகள் இருக்கு, என்னென்ன சத்துகள் எவ்வளவு இருக்குங்கிறதையும் தெரிஞ்சுக்கலாம். இங்கேயும் பீட்சாவும் பிரியாணியும் டெசர்ட்டும் கிடைக்கும். ஆனா, எதையுமே குற்ற உணர்வுக்குள்ளாகாம சாப்பிடலாம். அத்தனையும் ஆரோக்கியமானவை. டேக் அவே சர்வீஸும் உண்டு. அடுத்தது சப்ஸ்கிரிப்ஷன் மாடல். அதுல அவங்கவங்க தேவைக்கேற்ப அவங்களுடைய ஃபிட்னெஸ் லட்சியத்துக்கேற்ப, அதாவது, எடையைக் குறைக்கணுமா கூட்டணுமாங்கிறதைப் பொறுத்து அதுக்கேத்த டயட்டை எங்ககிட்ட ஆர்டர் பண்ணலாம். தேவைப் படுறவங்களுக்கு ஒரு நாளைக்கு அவங்க எத்தனை கலோரிகள் சாப்பிடணும், அதுல எவ்வளவு கார்போ ஹைட்ரேட், எவ்வளவு புரோட்டீன் இருக்க ணும்னு எங்களுடைய நியூட்ரிஷனிஸ்ட் டிசைன் பண்ணித் தருவாங்க. அதுக்கேத்தபடி ஒருநாளைக்கான உணவுகளை நாங்க ரெடி பண்ணி அனுப்புவோம்’’

- பேசிக்கொண்டே ரெஸ்டாரன்ட்டை சுற்றிக் காட்டுகிறார் மஹி. டைன் இன் இடத்தில் சைக்கிளிங் செய்கிற மாதிரியான சீட்டிங் செட் அப் இருக்கிறது. சாப்பிடும் முன்போ, பிறகோ விருப்பமுள்ளோர் சிறிது நேரம் சைக்கிளிங் செய்துவிட்டுக் கிளம்பலாம். ‘பெடல் யுவர் ஷேக்’ என்ற பெயரில் சைக் கிளுடன் இணைக்கப்பட்ட மிக்ஸி இருக்கிறது. (குக் வித் கோமாளியில் பார்த்தது நினைவிருக் கிறதா?) அதில் ஏறி பெடல் செய்தபடி ஒருவர் தனக்குத் தேவையான புரோட்டீன் ஷேக்கை தானே ரெடி செய்து கொள்ளலாம்.

50 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கிய இந்த ரெஸ்டாரன்ட்டின் மாத விற்பனை 15 லட்சமாம். கோவிட் இல்லாத நாள்களில் இது 25 லட்சங்களை எட்டும் என்கிறார் மஹி. சமையலறையில் 10 பேர், சர்வீஸில் 7 பேர் என மொத்தம் 17 ஊழியர்கள்.

சைக்கிளிங், டைனிங், டயட்டிங்... மஹி மோகனின் ‘மாத்தி யோசி’ ரெஸ்டாரன்ட்!

டயட் ரெஸ்டாரன்ட்டாச்சே... பிரபலங் களின் பார்வையில் படாமலிருக்குமா? சைந்தவி, ஜி.வி.பிரகாஷ், ரெஜினா கஸாண்ட்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ், கணேஷ் வெங்கட்ராம் என நீள்கிறது செலிபிரிட்டி லிஸ்ட். ஆனாலும், சாமானியர்களும் சாப்பிடும்படியே விலையை நிர்ணயித்திருக் கிறார்கள்.

சென்னையில் நிறைய கிளைகளையும் தென்னிந்தியாவில் கார்ப்பரேட் கிச்சன் களையும் தொடங்க வேண்டும் என்பதே அடுத்த இலக்கு என்கிறார் மஹி.50 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கிய இந்த ரெஸ்டாரன்ட்டின் மாத விற்பனை 15 லட்சமாம். கோவிட் இல்லாத நாள்களில் இது 25 லட்சங்களை எட்டும் என்கிறார் மஹி.

ஆரோக்கியமாதான் சாப்பிடறீங்களா? - மஹி தரும் டிப்ஸ்

* உங்களுடைய சாப்பாட்டுத்தட்டை மூணு பங்குகளா பிரிச்சுக்கோங்க. ஒரு பங்குல அரிசி சாதம், கோதுமை உணவு அல்லது சிறுதானிய உணவுனு கார்போஹைட்ரேட் இருக்கட்டும். இன்னொரு பங்கு காய்கறிகளும், மூணாவது பங்கு புரோட்டீனும் இருக்கட்டும்.

*தினமும் 2-3 டீஸ்பூன் எண்ணெய் போது மானது.

* நீங்க சாப்பிடற காய்கறிகள், பழங்கள்னு எதுவா இருந்தாலும் அதுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கப் பழகுங்க. முடிஞ்சா கலோரி களையும் கணக்குப் பண்ணி சாப்பிடப் பழகலாம். கலோரிகளை கணக்குப் பண்றது இன்னிக்கு ரொம்ப ஈஸி. அதுக்கான ஆப்ஸ், கூகுள்னு பல வழிகள்ல அதைத் தெரிஞ்சுக்க முடியும். எண்ணெயை மறுபடி மறுபடி சூடாக் குறது, சுவையைக் கூட்டும் எம்.எஸ்.ஜி (மோனோ சோடியம் குளுட்டமேட்), செயற்கை நிறமிகள் சேர்க்குறது மாதிரியான தவறான விஷயங்களைத் தவிர்த்த சமையலே ஆரோக்கியமானதுதான்.