Published:Updated:

பாடப்புத்தகங்களைத் தாண்டியும் ஓர் அறிவுலகம் இருக்கு! - வீதி நூலகம் நடத்தும் மைவிழிச்செல்வி

வீதி நூலகம்
பிரீமியம் ஸ்டோரி
வீதி நூலகம்

என்னோட வாசிப்பு என்னை நல்லா பட்டை தீட்டி யிருந்தது. என் அண்ணன் மூலமா சுந்தர ராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணன்னு பலரின் படைப்புகளையும் படிச்சேன்

பாடப்புத்தகங்களைத் தாண்டியும் ஓர் அறிவுலகம் இருக்கு! - வீதி நூலகம் நடத்தும் மைவிழிச்செல்வி

என்னோட வாசிப்பு என்னை நல்லா பட்டை தீட்டி யிருந்தது. என் அண்ணன் மூலமா சுந்தர ராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணன்னு பலரின் படைப்புகளையும் படிச்சேன்

Published:Updated:
வீதி நூலகம்
பிரீமியம் ஸ்டோரி
வீதி நூலகம்

வாசிப்பின் மீதான ஆர்வத்தால் பள்ளிக் குழந்தை களுக்காக வீதி நூலகம் ஒன்றை கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் தனது வீட்டின் முன்பு நடத்தி வருகிறார் சாஃப்ட்வேர் ஊழியரான மைவிழிச்செல்வி.

“ஈரோடு மாவட்டம் செலம்பகவுண்டன்பாளையம் கிராமம்தான் என் சொந்த ஊர். அரசுப்பள்ளியில்தான் படிச்சேன். பாடப்புத்தகங்களைத் தாண்டியும் இதழ்கள், கதைப்புத்தகங்கள் படிக்கிறதுலயும் எனக்கு ஈடுபாடு அதிகமா இருந்தது.

பொண்ணுகளை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க வேணாம்ங்கிற எண்ணம்தான் எங்க கிராமத்துல எல்லார்கிட்டயும் இருந்தது. பள்ளிக்கூடம் முடிச்சதுமே பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடுவாங்க. சிலரை கல்லூரி வரைக்கும் படிக்க வைப்பாங்க. ஆனா, வேலைக்கு அனுப்பாம கல்யாணம் பண்ணி வெச்சுடு வாங்க. லாரி டிரைவரான என் அப்பா, என்னைப் படிக்க வைக்குறதுல உறுதியா இருந்தார். எம்.சி.ஏ படிச்சுட்டு சென்னைக்கு வந்து சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்த்தேன்.

மைவிழிச்செல்வி
மைவிழிச்செல்வி

என்னோட வாசிப்பு என்னை நல்லா பட்டை தீட்டி யிருந்தது. என் அண்ணன் மூலமா சுந்தர ராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணன்னு பலரின் படைப்புகளையும் படிச்சேன். அகரம் ஃபவுண்டேஷன்ல பயிற்சியாளரா இருந்திருக்கேன். எங்க ஊர் ஆரம்ப பள்ளியில் சின்ன நூலகம் அமைக்குற பணிகளைச் செய்தேன். குழந்தைகளுக் காகச் செயல்படுற `குக்கூ' அமைப்புல இணைஞ்சு வேலை செய்தேன். அந்த அமைப் புல வேலை செஞ்ச முத்துவும் நானும் காதலிச்சோம். வேற சாதிங்குறதால வீட்டுல திருமணத் துக்கு சம்மதிக்கலை. அவங்களை மீறி சாதி மறுப்புத் திருமணம் செஞ்சுக்கிட்டோம்” என்றவர் வீதி நூலகம் தொடங்கிய கதை சொல்கிறார்.

``திருமணத்துக்குப் பிறகு உறவு களோட புறக்கணிப்பால ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தேன். குக்கூ அமைப்பைச் சேர்ந்த சிவராஜ் அண்ணன்தான், குழந்தை களின் உலகம், நம்ம தனிமை, வெறுமை எல்லாத்தையும் போக்கிடும்னு சொன்னார்.

சிங்காரப்பேட்டையில ஊரடங்கில் பள்ளிக்கூடம் இல்லாத நாள்களில் பசங்க என்ன பண்றதுன்னு தெரியாம சுத்திக்கிட்டிருந் தாங்க. அவங்களை புத்தக உலகத்துக்கு கூட்டிட்டு வரணும்னு தோணுச்சு. மாலை வேளையில எங்க வீட்டுக்கு வெளிய பாய் போட்டு சில புத்தகங்களை வெச்சேன். கதைப்புத்தகங்களோட படக்கதைப் புத்தகங் களையும் வெச்சேன். குழந்தைங்க கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிச்சாங்க. எடுத்த உடனே படிக்கலைன்னாலும் படக்கதைகள் பார்த்தாங்க. நூல்களைப் புரட்டி னாங்க.

பாடப்புத்தகங்களைத் தாண்டியும் 
ஓர் அறிவுலகம் இருக்கு! - வீதி நூலகம் நடத்தும் மைவிழிச்செல்வி

அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த வீதி நூலகம். சிங்காரப் பேட்டையில் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ரெண்டும் இருக்கு. அங்க படிக்கிற குழந்தைங்க பலர் எங்க வீதியைத் தாண்டித்தான் போவாங்க. அவங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செட்டா மாத்தி மாத்தி 100 புத்தகங்களைப் படிக்க வெச்சிடுவேன்.

அந்த ஊர்ல பலரும் என்னோட முயற்சிக்கு ஆதரவு தந்தாங்க. கூலி வேலை செய்யுற அம்மா தினமும் அவங்க குழந்தைகளைக் கூட்டிக் கிட்டு வந்து அவங்க புத்தகங்கள் எடுக்கிற வரைக்கும் காத்திருந்து திரும்ப கூட்டிகிட்டுப் போவாங்க. அதெல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கும்.

ஐடில எங்கூட வேலை செய்யுற வங்க, நண்பர்கள்னு பலரும் அவங்க குழந்தைங்க படிச்ச புத்தகங்களை அனுப்பி வெச்சாங்க. சிலர் புத்தகங்கள் வாங்குறதுக்கான பணத்தைக் கொடுத்து ஊக்கப்படுத்துறாங்க. கிருஷ்ணகிரி மாவட்டம் கல்வியில இன்னும் பின்தங்கிதான் இருக்கு. கல்வியின் முக்கியத் துவத்தை மக்கள் இன்னும் முழுசா உணரலை.

பாடப்புத்தகங்களைத் தாண்டியும் 
ஓர் அறிவுலகம் இருக்கு! - வீதி நூலகம் நடத்தும் மைவிழிச்செல்வி

பள்ளிப் பாடப்புத்தகங்களைத் தாண்டியும் ஓர் அறிவுலகம் இருக்குங்குறதை கொண்டு சேர்க்கணும். பெண்கள் கல்வி கற்பதோட, புத்தக வாசிப்புலயும் இறங்கினா அவங்களோட தலைமுறையே வளம்பெறும்னு உறுதியா நம்புறேன்” என்கிறார் மைவிழிச்செல்வி.