Published:Updated:

108 மூலிகைச் செடிகள்... மணக்கும் மருத்துவத் தோட்டம்... சென்னை ஓவியரின் புதுமை முயற்சி!

ஸ்வர்ணலதா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வர்ணலதா

மூலிகை காதல்

108 மூலிகைச் செடிகள்... மணக்கும் மருத்துவத் தோட்டம்... சென்னை ஓவியரின் புதுமை முயற்சி!

மூலிகை காதல்

Published:Updated:
ஸ்வர்ணலதா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வர்ணலதா

வாசல் தாண்டி வீசும் வெட்டிவேரின் வாசமும் வெற்றிலையின் வாசமும் வீட்டுக்கு வழிகாட்டுகின்றன. சென்னை, மந்தைவெளியில் உள்ள ஓவியர் ஸ்வர்ணலதாவின் வீட்டுக்குள் நுழையும்போது ‘மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்...’ என்ற பாடலை மனது தானாக ஹம் செய்கிறது. எங்கெங்கு காணினும் மூலிகைச் செடிகள்...

‘‘சின்ன வயசுலேருந்தே எல்லாத்துக்கும் இயற்கை வைத்தியம்தான் எடுத்துப்பேன். சாதாரண தலைவலி, காய்ச்சல் வந்தாகூட மூலிகை கஷாயமும் மருந்துகளும் எடுத்தே பழகிட்டேன். தினசரி வீட்டுல போடற டீயே லெமன் கிராஸ், துளசி மாதிரி ஏதாவது மூலிகை கலந்ததாக இருக்கும். 15 வருஷங்களா கர்ப்பப்பை பிரச்னை இருந்தது. அதுக்கும் இயற்கை மருத்துவம்தான் எடுத்துக்கிட்டேன். மூலிகைகளில் இல்லாத தீர்வுகளே இல்லை. சித்தர்கள் கொடுத்திருக்கிற அந்தப் பொக்கிஷத்தை நாம சரியா பயன்படுத்திக்கத் தவறிட்டோம். அதை நமக்கு உணர்த்தற வகையிலதான் அடிக்கடி ஏதாவது ஒரு நோய் கிளம்பி, இயற்கையை ஞாபகம் வெச்சுக்கச் சொல்லி நமக்கு குறிப்பு கொடுத்துட்டுப் போகுது. இந்த கொரோனா காலமும் அதைத்தான் நமக்கெல்லாம் புரியவெச்சிருக்கு. இயற்கையை நோக்கி ஓட ஆரம்பிச்சிருக்கோம்...’’ அறிமுக மெசேஜுடன் ஆரம்பிக்கிறார் ஸ்வர்ணலதா.

ஸ்வர்ணலதா
ஸ்வர்ணலதா

லாக்டௌனில் இவர் அமைத்திருக்கும் மூலிகைத் தோட்டம் அவரது நட்பு வட்டத்தில் பிரபலமாகியிருக்கிறது. இவரது தோட்டத்தில் பூதம் கொல்லி, மரவொட்டி, சர்பகந்தா, புத்திர ஜீவி, கல்தாமரை, நாயுருவி, ஏர்அழிஞ்சில், உதர வேங்கை, மலைவேம்பு, நன்னாரி, வெப்பாலை என நூற்றுக்கும் மேலான மூலிகைச் செடிகள் அணிவகுக்கின்றன.

‘‘லாக்டௌன்ல எல்லாரையும்போல எனக்கும் நிறைய நேரம் கிடைச்சது. நிறைய பேரின் ஆர்வம் தோட்டக்கலை பக்கம் திரும்பின மாதிரி எனக்கும் திரும்புச்சு. லெமன் கிராஸ், பட்டை இலை, அஷ்வகந்தா, தும்பைனு தினசரி உபயோகத்துக்குத் தேவையான 10 மூலிகைச் செடிகளோடு தோட்டத்தை ஆரம்பிச்சேன். மூலிகைகளைப் பற்றிய தகவல்களைத் தேடித் தேடிப் படிச்சுத் தெரிஞ்சுகிட்டேன். ஒவ்வொரு மூலிகையைப் பத்தியும் படிக்கப் படிக்க, அதன் மகத்துவமும் மருத்துவக் குணங்களும் பிரமிப்பை ஏற்படுத்தின. ஒரு பக்கம் மூலிகைச் செடிகளைத் தேடித் தேடி தோட்டம் அமைச்சிட்டிருந்தேன். இன்னொரு பக்கம் ஓவியரா யோசிச்சபோது புது ஐடியா வந்தது. மூலிகைகள்லேருந்து சாறு எடுத்து அதையே ஏன் ஓவியங்கள் வரையப் பயன்படுத்தக் கூடாதுனு யோசிச்சேன்...’’ புதுமையாக யோசித்தவர், அதற்காக நிறைய மெனக்கெடுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘மூலிகைச் சாறுகள் கொண்டு வரையும் போது நாம எதிர்பார்க்கிற மாதிரி மல்ட்டி கலர்ஸ் எல்லாம் கிடைக்காது. இயற்கையான அவற்றின் நிறங்களைவெச்சு வரையணும். அந்த இயற்கை நிறங்களே அவ்வளவு அழகா இருக்கும். உதாரணத்துக்கு அவுரினு ஓர் இலை இருக்கு. அதைச் சாறு எடுத்தா கருநீல நிறம் கிடைக்கும். கருமஞ்சளை உடைச்சா அழகான ஊதா கலர் கிடைக்கும். பெரும்பாலும் எல்லா மூலிகைகளும் பசுமை நிற ஷேடுகள்தான் தரும். மற்ற மூலிகைச் சாறுகளோடு சேர்த்து மிக்ஸ் மேட்ச் செய்து வேற வேற ஷேடுகளைக் கொண்டு வரலாம். மூலிகைச்சாறு கொண்டு வரையும் ஓவியங்களை ஃப்ரேம் போடக் கூடாது. இந்த ஓவியங்களை வீட்டில் மாட்டிவைக்கும்போது அந்த மூலிகைகளின் மருத்துவ குணமும் மணமும் காற்றில் கலந்து அந்த இடத்தில் வீசிகிட்டே இருக்கும்’’ என்பவர், மூலிகைகளை கல்லில் இடித்து சாறு எடுத்து ஓவியங்களுக்குப் பயன்படுத்துகிறார்.

108 மூலிகைச் செடிகள்... மணக்கும் மருத்துவத் தோட்டம்...  சென்னை ஓவியரின் புதுமை முயற்சி!

‘‘மூலிகைத் தோட்டம் அமைக்கிறதுக்கு ரொம்பவே பொறுமை வேணும். செடிகள் லேருந்து மூலிகைகளைப் பறிக்கும் முன் பிரேயர் பண்ணிட்டு, அவற்றிடம் அனுமதி கேட்டு, ‘நான் உன்னைப் பறிச்சுக்கறேன். உன்னை இந்தக் காரணத்துக்காகப் பயன்படுத்தப் போறேன்’னு சொல்லிட்டுதான் பறிக்கணும். இது எல்லா செடிகளுக்கும் பொருந்தும். அது ஒருவகையில் அந்தச் செடிக்கு நன்றி சொல்ற மாதிரிதான்’’ என்று சொல்லி நெகிழ்பவர், கொல்லிமலை, மருதமலை உள்ளிட்ட பல இடங்களிலிருந்தும் அபூர்வ ரக மூலிகைச் செடிகளைச் சேகரித்து வளர்க்கிறார்.

‘‘மலைக் கல்லுருவினு ஒரு மூலிகை இருக்கு. அதன் சாற்றைப் பிழிஞ்சா கல்லே ரெண்டா பிளக்கும்னு சொல்வாங்க. அவ்வளவு சக்தி வாய்ந்தது. இருவாச்சினு ஒரு மூலிகை. அது இருக்கிற இடத்துல இடியே விழாதுனு சொல்வாங்க. கிருஷ்ணகிரீடம், அக்ரஹாரம், சர்க்கரை சஞ்சீவி, அரிவாள்மனைபூட்டு... இப்படி எல்லாமே அரிதான மூலிகைகள். எல்லாரும் சின்ன அளவுல வீட்டுல மூலிகைத் தோட்டம் அமைச்சாலே, அடிப்படை ஆரோக்கியம் வலுப்பெறும். இயற்கையை கவனிக்கக் கத்துக்கொடுத்திருக்கிற இந்தப் பெருந்தொற்றுக் காலத்துல அதை ஒரு முன்னெடுப்பா செய்வோமே’’

- ஸ்வர்ணலதாவின் வார்த்தைகளில் ஆரோக்கியமும் அக்கறையும்.