பாரம்பர்யப் பெருமையும், தனித்துவமான சிறப்புகளையும் கொண்டவை நம் கலைகள். அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் கலைஞர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அப்படிப்பட்ட கலைஞர்கள் குறித்த பதிவுகள் இல்லாமல் போவதோ துரதிர்ஷ்டம். தமிழ்ச் சமூகத்தில், இப்படி அடையாளமற்றுப் போன கலைஞர்கள் ஏராளம். ஆனால், அந்தக் கலைஞர்களில் சிலர் முறையாக அடையாளப்படுத்தப்படுவதும் எப்போதேனும் நிகழும். அவர்களில் ஒருவர், பரதக் கலைஞர் ருக்மிணி தேவி அருண்டேல். அவரின் கலையுலக வாழ்க்கை, எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆங்கிலத்தில் பதிவுசெய்திருக்கிறார் எஸ்.சாரதா. தமிழில், `கலாக்ஷேத்ரா - ருக்மிணி தேவி சில நினைவுகள்-சில பகிர்வுகள்’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார் கவிஞர் கிருஷாங்கினி.

நூலிலிருந்து சில பகுதிகள்...

ருக்மிணி தேவி பரதநாட்டியத்துக்குச் செய்த மிகப்பெரிய சேவை என்னவெனில், கைகால்களின் அசைவுகளை முழுமை யானதாக்கி, ஆரம்பமும் முடிவும்கொண்ட நிறைவான அசைவுகளை உருவாக்கியது. அதைப் போன்ற முழுமையான அசைவுகள் `பாலே’ நடனத்தில் உள்ளன. அந்த அசைவுகளை முழுமையானதாக பரதநாட்டியத்திலும் கொண்டுவந்தார். அசைவுகளைச் சீர்செய்து, அவற்றுக்கு அழகூட்டினார்.

1935-ம் ஆண்டு, தியாசபிகல் சொசைட்டியின் சர்வதேச தினத்தன்று ருக்மிணி தேவியின் நாட்டியத்தைக் கண்டது ஒரு தெய்விக அனுபவம். அவர், தியசாபிகல் சொசைட்டியின் தலைமைக் குடியிருப்பின் அருகில் அமைந்திருந்த திறந்தவெளி அரங்கில் ஆடினார். நான் (எஸ்.சாரதா) என் தாத்தா சுப்ரமணிய சாஸ்திரியுடனும், என் அம்மாவுடனும் தஞ்சாவூரிலிருந்து வந்திருந்தேன். குடும்பப் பெண்கள் நாட்டியம் பார்க்கக் கோயிலுக்குச் செல்வதோ, வேறு எங்காவது நாட்டியம் பார்க்கச் செல்வதற்கோ அனுமதி கிடையாது. நாட்டியம், `தேவரடியாள்’ எனப்படும் தேவதாசிகளால் மட்டுமே ஆடப்படும். இப்போது, `பரதநாட்டியம்’ என்று அழைக்கப்படும் அது, `சதிர்’ அல்லது `சின்னமேளம்’ என்று சொல்லப்பட்டு வந்தது. தேவதாசிகளை மற்றவர்கள் தாழ்வாகப் பார்ப்பார்கள். ருக்மிணி தேவிதான் முதன்முதலில் இந்த நாட்டியத்தை பரத முனிவரின் பெயரை இட்டு, `பரதநாட்டியம்’ என்று அழைத்தவர்.

ருக்மிணி தேவி நாட்டிய நாடகத் தயாரிப்பில் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கி, பரத நாட்டியத்தை இன்னமும் உயர்ந்த இடத்தில் நிறுவினார். இவரின் நாட்டிய நாடகங்கள் `பாகவத மேளா’, `குச்சிப்பிடி’ போன்றவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டு இருந்தன.

நாட்டிய உடை அழகானதாகவும், நளினத்துடன் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று தன் உடையைத் தானே வடிவமைத்தார் ருக்மிணி தேவி. நட்டுவனாரையும் பாடகர்களையும் அரங்கின்மீதே ஒரு பக்கமாகத் தெரியும்படி அமரவைத்தார். அவர்கள் நாட்டியம் ஆடுபவருக்குப் பின்புறம் நிற்கவில்லை. பெரிய சங்கீத வித்வானும் வாக்யேயக்காரருமான பாபநாசம் சிவன், ருக்மிணி தேவியின் நாட்டிய நிகழ்ச்சிகளுக்குப் பாடுவார்.

ஒருகட்டத்தில் நட்டுவனார்கள் கலாக்ஷேத்ராவை விட்டு விலகினர். அப்போது கலாக்ஷேத்ரா மாணவி சாரதாவின் அரங்கேற்ற நேரம். ருக்மிணி தேவி தானே நட்டுவாங்கம் செய்தார். இது மிகப்பெரிய வரலாற்றுத் திருப்பம். இதன்பிறகுதான் பெண்கள் பாட்டுப் பாடவும், நட்டுவாங்கம் செய்யவும் கற்றுத் தேறி, ருக்மிணி தேவியின் நாட்டிய நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

நூல்: கலாக்ஷேத்ரா - ருக்மிணி தேவி சில நினைவுகள் - சில பகிர்வுகள்

ஆங்கிலத்தில்: எஸ்.சாரதா தமிழில்: கிருஷாங்கினி

வெளியீடு: சதுரம் பதிப்பகம், சென்னை-47. தொலைபேசி: 044-2223 1879

பக்கங்கள்: 384 விலை: ₹ 300