Published:Updated:

“உங்க ஏரியா... உள்ள வர்றோம்!” - பெண்கள் துறையில் கலக்கும் ஆண்கள்

இப்ராஹிம்
பிரீமியம் ஸ்டோரி
இப்ராஹிம்

ஆர்.எம்.கே.வி, கஸானா ஜுவல்லரி, ஜி.ஆர்.டினு பல விளம்பரங் கள்ல நடிச்சவங்களுக்கு மேக்கப் போட்டிருக்கேன். கடந்த 12 வருஷமா மணப்பெண் மேக்கப் போட்டுட்டு வர்றேன்.

“உங்க ஏரியா... உள்ள வர்றோம்!” - பெண்கள் துறையில் கலக்கும் ஆண்கள்

ஆர்.எம்.கே.வி, கஸானா ஜுவல்லரி, ஜி.ஆர்.டினு பல விளம்பரங் கள்ல நடிச்சவங்களுக்கு மேக்கப் போட்டிருக்கேன். கடந்த 12 வருஷமா மணப்பெண் மேக்கப் போட்டுட்டு வர்றேன்.

Published:Updated:
இப்ராஹிம்
பிரீமியம் ஸ்டோரி
இப்ராஹிம்

இதுவரை ஆண்களே கோலோச்சிக்கொண்டிருந்த பல துறைகளில் இப்போது பெண்களும் மிகுந்து வருவதைப் பார்க்கிறோம். இன்னொரு பக்கம், இது பெண்களுக்கானது என்று அறியப்பட்ட சாரி டிரேப்பிங், பிரைடல் மேக்கப் துறைகளில் இப்போது ஆண்களும் கலக்க ஆரம்பித்திருப்பதும் வரவேற்க வேண்டிய மாற்றம். அப்படி சிலர் இங்கே தங்கள் அனுபவம் பகிர்கிறார்கள்...

திவ்யன் ஜெயரூபன்
திவ்யன் ஜெயரூபன்

திவ்யன் ஜெயரூபன் சாரி டிரேபிஸ்ட் (Saree Drapist)

``எனக்கு சின்ன வயசுல இருந்தே யாரு புடவை கட்டி இருந்தாலும் பிடிக்கும். ஆனா என் அம்மாகிட்ட ரெண்டு புடவைகள்தான் இருக்கும். ‘நீங்களும் புடவை கட்டுங்கம்மா’னு சொன்னா, ‘என்கிட்ட புடவை இல்ல, எனக்குக் கட்டவும் தெரியாது’னு சொல்லுவாங்க. எனக்கு எட்டு வயசு இருக்கும்போது, என் சித்திகிட்ட புடவை கட்ட சொல்லித்தரச் சொல்லிக் கேட்டேன். அது சின்ன வயசுல விளையாட்டுத்தனமா செய்தது என்றாலும், 2019-ல மலேசியாவில நான் சாரி டிரேப்பிங்கை புரொஃபஷனலா பண்ண ஆரம்பிக்க, அந்த ஆர்வம்தான் காரணம். ஆரம்பத்தில், நிறைய மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ஸ் கூட சேர்ந்து புடவை கட்டிவிடப் போவேன். இப்போ என்னைத் தேடி வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருச்சு. சிலர், ‘ஆம்பளைக்கு இந்த வேலை தேவையா’னு கேட்டிருக்காங்க. சிலர், என்னைப் பார்த்து இன்ஸ்பயர் ஆனதா சொல்வாங்க. இந்த பாசிட்டிவிட்டியை மட்டும்தான் நான் எடுத்துக்குவேன்.’’

இப்ராஹிம்
இப்ராஹிம்

இப்ராஹிம் மேக்கப் ஆர்டிஸ்ட்

‘`என் அப்பா ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட். ஜெமினி நிறுவனத்தோட `சந்திரலேகா' படத்துல தன் வேலையை ஆரம்பிச்சு, ஜெயலலிதா, சாவித்ரினு பல பிரபல நடிகைகளுக்கு மேக்கப் போட்டிருக்காரு. நான் 2001-ல நடிகைகளுக்கு மேக்கப் போட ஆரம்பிச்சேன்.

ஆர்.எம்.கே.வி, கஸானா ஜுவல்லரி, ஜி.ஆர்.டினு பல விளம்பரங் கள்ல நடிச்சவங்களுக்கு மேக்கப் போட்டிருக்கேன். கடந்த 12 வருஷமா மணப்பெண் மேக்கப் போட்டுட்டு வர்றேன். மேக்கப் துறையில் ஏழு விருதுகள் வாங்கியிருக்கேன். இப்போ பல மணப் பெண்களும், என்னோட அவைலபிளிட்டி கேட்டுட்டு முகூர்த்த நாள் ஃபிக்ஸ் பண்ற அளவுக்கு இதுல எனக்கு வரவேற்பு கிடைச்சிருக்குனா, அதுக்கு என் உழைப்பு மட்டும் காரணமில்ல... என்கூட வேலை செய்யுற, உதவி பண்ற என் டீம் நண்பர்களுக்கும் அதில் பங்குண்டு.’’

கோபிநாத்
கோபிநாத்

கோபிநாத், ஹேர் ஸ்டைலிஸ்ட்

‘`என் அப்பா ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட். பழைய படங்கள்ல பல நடிகைகளுக்கு சிகை அலங்காரம் செய்திருக்கார். படிப்பு சரியா வராததால, சின்ன வயசுலேயே அப்பா என்னை விக் செய்யுற கம்பெனியில வேலைக்குச் சேர்த்து விட்டுட்டாரு. அதுக்கு அப்புறம் நான் ஹேர் ஸ்டைலிங் பழக ஆரம்பிச்சேன். பிறகு விளம்பரம், படங்களில் நடிகைகளுக்கு சிகை அலங்காரம் பண்ணினேன். ரம்பா முதல் டிடி வரை பலருக்கும் சிகை அலங்காரம் செஞ்சிருக்கேன். இப்போ மணப்பெண்களுக்கும் சிகை அலங்காரம் செய்ய ஆரம்பிச்சுட்டேன். மணப் பெண்கள், ‘நீங்கதான் எனக்கு ஹேர்டூ பண்ணணும்’னு விரும்பிக் கேட்குற அளவுக்கு இதில் இப்போ எனக்கு நிலையான இடம் கிடைச்சிருக்கு. ஒரு ஆணா இந்த வேலையைச் செய்யணுமானு நான் நினைச்சதே இல்ல. ஆண்கள் செய்யுற வேலைகளை எல்லாம் பெண்கள் இப்போ செமையா எடுத்துச் செய்யும்போது, பெண்கள் செய்யுற வேலைகளை ஆண்கள் செய்யுற துல என்ன மனத்தடை..?’’

அரவிந்த்
அரவிந்த்

அரவிந்த், மெஹந்தி மற்றும் மேக்கப் ஆர்டிஸ்ட்

‘`நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் கரூர். என் அப்பா ரோட்டோரமா பலகாரக் கடை வச்சிருந்தாரு, அம்மா அவருக்கு ஒத்தாசையா இருப்பாங்க. எனக்கு சின்ன வயசுல இருந்தே ஓவியம் வரைய ரொம்பப் பிடிக்கும். ஒருநாள் என் அம்மா கையில மெஹந்தி வரைஞ்சேன், அது ரொம்பவே அழகா இருக்குனு எல்லாரும் சொன்னாங்க. பத்தாம் வகுப்புப் படிச்சப்போ, முதல்முதலா வெளிநபர் ஒருத்தருக்கு மெஹந்தி போட்டேன், 350 ரூபாய் கொடுத்தாங்க. `ஒரு பையனா இருந்துட்டு இதெல்லாம் பண்ணுறியே'னு நிறைய கேலி பண்ணியிருக்காங்க. 2019-ல இன்ஸ்டாகிராமுக்குள்ள வந்தேன். அது என் வாழ்கையோட திருப்புமுனையா அமைஞ்சது. நிறைய மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ஸ் எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க, கஸ்டமர்ஸுக்கு என் வேலை பிடிச்சுப்போய் `கடகட'னு வளர ஆரம்பிச்சேன். வித்யூராமன், நட்சத்திரானு இப்போ நிறைய செலிப்ரிட்டீஸுக்கு மெஹந்தி போட ஆரம்பிச்சிருக்கேன். என்னோட சிறப்பு, போர்ட்ரைட் மற்றும் தீம் மெஹந்தி. இந்தப் பயணத்தில் எனக்கு பலமா இருக்குற என் அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism