Published:Updated:

`மரக்கன்றுகள் நடக்கூடாது... கருகிவிடும்!’ - மாதவிடாய் நாள்களில் மாணவிகளைத் தடுத்த ஆசிரியர்!

மரக்கன்று நடுதல் - சித்திரிப்பு படம்

மரக்கன்றுகள் நட்ட 12வது வகுப்பு மாணவிகளிடம் ஆண் ஆசிரியர் ஒருவர், மாதவிடாய் நாள்களில் இருக்கும் மாணவிகள் யாரும் மரக்கன்றுகள் நட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அவ்வாறு நட்டால் அவை கருகிவிடும் என்றும், வளராது என்றும் மாணவிகளிடம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

`மரக்கன்றுகள் நடக்கூடாது... கருகிவிடும்!’ - மாதவிடாய் நாள்களில் மாணவிகளைத் தடுத்த ஆசிரியர்!

மரக்கன்றுகள் நட்ட 12வது வகுப்பு மாணவிகளிடம் ஆண் ஆசிரியர் ஒருவர், மாதவிடாய் நாள்களில் இருக்கும் மாணவிகள் யாரும் மரக்கன்றுகள் நட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அவ்வாறு நட்டால் அவை கருகிவிடும் என்றும், வளராது என்றும் மாணவிகளிடம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Published:Updated:
மரக்கன்று நடுதல் - சித்திரிப்பு படம்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பகேஷ்வர் தாலுகாவில் இருக்கும் தேவ்காவ் என்ற கிராமத்தில் மாணவிகளுக்காக ஆசிரம பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 500-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். அதிகமானோர் ஆதிவாசி மாணவிகள் ஆவர்.

தற்போது மகாராஷ்டிராவில் மழைக்காலம். மழைக்காலத்தில் அதிக அளவில் மரக்கன்றுகள் நடப்படுவது வழக்கம். இதில் மாணவர்களும் ஈடுபடுத்தப்படுவதுண்டு. தேவ்காவ் பள்ளி மாணவிகளும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவ்வாறு மரக்கன்றுகள் நட்ட 12வது வகுப்பு மாணவிகளிடம் ஆண் ஆசிரியர் ஒருவர், மாதவிடாய் நாள்களில் இருக்கும் மாணவிகள் யாரும் மரக்கன்றுகள் நட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள், ஆசிரியரை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் நின்றனர். மாதவிடாய் உள்ள மாணவிகள் மரக்கன்றுகள் நட்டால் அவை கருகிவிடும் என்றும், வளராது என்றும் ஆசிரியர் மாணவிகளிடம் விளக்கம் கொடுத்தார்.

இன்னும் இது போன்ற பழைய மூட நம்பிக்கையில் ஆசிரியர் இருப்பது குறித்து மாணவிகளில் சிலர் நாசிக்கில் உள்ள சிரஞ்சீவி சங்கட்டா என்ற தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி பகவான் மாதேயிடம் புகார் செய்தனர். உடனே மேலிடத்தில் அவர் புகார் செய்தார். மாவட்ட கூடுதல் ஆட்சித்தலைவர் மீனா நேரடியாக பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதோடு புகார் தொடர்பாக அனைத்து மாணவிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆதிவாசிகள் நலத்துறை இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து பகவான் கூறுகையில், `மரக்கன்று நடக்கூடாது என்று சொன்ன ஆசிரியர் வகுப்பு ஆசிரியர் என்பதாலும், பிராக்டிக்கல் மதிப்பெண் அவர்தான் போட வேண்டும் என்பதாலும் மாணவிகள் அவரை எதிர்த்துப் பேசவில்லை. மேலும், பள்ளிக்கு அட்மிஷனுக்கு வரும் மாணவிகளிடம் கர்ப்ப பரிசோதனைக்காக சிறுநீரக சோதனை அறிக்கையை அவர் கேட்டதாகக் கூறப்பட்டது.

Planting
Planting
சித்திரிப்புப் படம்

அது போன்ற ஒரு விதியே இல்லை. மாவட்ட கூடுதல் கமிஷனர் சந்தீப்பிடம் பேசினேன். சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக மாணவிகளுடன் சென்று, நாசிக்கில் இருக்கும் ஆதிவாசி விகாஸ் பவனில் மனு கொடுத்திருக்கிறோம். புகார் செய்யும் மாணவிகளை சம்பந்தப்பட்ட ஆசிரியர் பழி வாங்குவதாகவும் கூறப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.