Published:Updated:

“அப்பாகிட்டயிருந்து உதவிகளை மக்களுக்குக் கொண்டுபோறோம்!” - சேவைக்களத்தில் அமைச்சர் மகள்கள்

அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்

மக்கள் சேவை

துரை, தொழில் வர்த்தக சங்க அரங்கத்திலுள்ள சமையற்கூடத்தில், அதிகாலை 3 மணிக்கு விழிக்கிறது ‘அம்மா கிச்சன்’. தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க செய்திருக்கும் ஏற்பாடு இது. இட்லி, சப்பாத்தி, பூரி, ஊத்தப்பம், வடை, கேசரி எனக் காலை சிற்றுண்டி, நாலு வகை கூட்டு, பொரியல், சாம்பார், குழம்பு, ரசத்துடன் மதிய உணவு, இரவு சிற்றுண்டி எனத் தயாராவதை, அடிக்கடி வந்து பார்வையிடுகிறார்கள் ஆர்.பி.உதயகுமாரின் மகள்கள் பிரியதர்ஷினியும் தனலட்சுமியும்.

கல்லூரி மாணவியான பிரியதர்ஷினி, தன் அப்பாவின் ‘அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்’ மூலம் மதுரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பல சமூகப்பணிகளை ஆற்றிவருகிறார். பள்ளி மாணவியான அவர் தங்கை தனலட்சுமி, களப்பணிகளில் அக்காவுடன் சேர்ந்து கைகொடுத்தும் கற்றுக்கொண்டும் வருகிறார். அமைச்சரின் பல சேவை நிகழ்வு களிலும் இவர்கள் தென்பட்டதை கண்ட நாம், அவர்களிடம் பேட்டி என்றதும் மிகவும் தயங்கினார்கள். ‘‘பிள்ளைங்க ஆர்வத்துல பண்ணுதுங்க... ஆனா, இதை எழுதணுமா...’’ என்றார் ஆர்.பி.உதயகுமார். இறுதியாக, ‘‘அப்பாகிட்டயிருந்து சின்னச் சின்ன உதவிகளை மக்களுக்குக் கொண்டுபோய் சேர்க்குறோம்... பெருசா எதுவும் செய்யலையே...’’ என்று தயக்கம் முழுமையாக விலகாமலேயே பேச ஆரம்பித்தார் பிரியதர்ஷினி.

“அப்பாகிட்டயிருந்து உதவிகளை மக்களுக்குக் கொண்டுபோறோம்!” - சேவைக்களத்தில் அமைச்சர் மகள்கள்

‘‘கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு சரியில்லைன்னு பேசப்பட்டப்போ, ‘நாம அவங்களுக்கு உணவு கொடுக்கலாமாப்பா...’னு கேட்டதில் ஆரம்பிச்ச நல்ல விஷயம் இது. இங்க தயாராகுற உணவுகளை மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கோவிட் கண்காணிப்பு மையங்கள்ல தங்கியிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாம மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர் களுக்கும் கொடுக்குறோம்.

இந்தச் செயல்பாடுகளைப் பார்த்து சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாரே பாராட்டினார். தினமும் 1,000 பேருக்கு, 80 நாள்களுக்கும் மேல் தொடர்ந்து உணவு கொடுத்துட்டு வர்றோம். இதில் சமையல், பார்சல் வேலைகள்ல இருக்கிற கிராமப்புற பெண்களுக்கு, ஊரடங்கு காலத்துல இதன் மூலமா வேலைவாய்ப்பு கிடைச்சிருக்கு. அப்பா மதுரையில இருந்தா, அதிக நேரம் இந்தச் சமையற்கூடத்தில்தான் கழிக்கிறார்’’ என்ற பிரியதர்ஷினி, உணவு சேவையுடன் கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள சித்தா, ஆயுர்வேத, அலோபதி மருந்துகள் அடங்கிய 3 லட்சம் மருந்துப் பெட்டகத்தை கிராமம்தோறும் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கி வரும் பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘நான் இன்ஜீனியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். தங்கை தனலட்சுமி ப்ளஸ் ஒன் படிக்கிறாங்க. பெரிய அளவில் திட்டமிடத் தெரியாதுனாலும், மத்தவங்களுக்கு உதவுறதில் எங்களுக்குத் தோணும் விஷயங்களை எல்லாம் அப்பாகிட்ட சொல்வோம். அவர் உடனே ‘அம்மா சாரிட்டபிள் அறக்கட்டளை’ மூலமா, அவரின் நண்பர்கள் மூலம் அந்த உதவிகளை எல்லாம் செய்துமுடிக்க எங்களுக்கு வழிகாட்டுவார்.

“அப்பாகிட்டயிருந்து உதவிகளை மக்களுக்குக் கொண்டுபோறோம்!” - சேவைக்களத்தில் அமைச்சர் மகள்கள்

கடந்த சில வருஷமா, மதுரை மாவட்டத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காகவும், கிராமத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவும் பயிற்சி மையங்களையும், கிராமப் பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் நடத்திட்டு வர்றோம். இதிலெல்லாம் நாங்க விருந்தினர்களா இல்லாம, அந்தப் பணிகளில் பங்களிப்பவர்களா கலந்துட்டு வர்றோம். மதுரை மட்டுமல்லாம திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, பேரையூர்னு பல ஊர்களிலும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்களை நடத்திட்டு வர்றோம். பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் பயிற்சிகள் அந்த மாணவர்களிடம் நல்ல மாற்றத்தைக் கொடுத்ததைக் கண்கூடா பார்த்தப்போ சந்தோஷமா இருந்தது’’ என்றவரை தொடர்ந்தார் தனலட்சுமி...

“அப்பாகிட்டயிருந்து உதவிகளை மக்களுக்குக் கொண்டுபோறோம்!” - சேவைக்களத்தில் அமைச்சர் மகள்கள்

‘‘ `பள்ளி மாணவர்களுக்கு டிக்‌ஷனரி கொடுக்கலாமாப்பா..?’னு ஒரு யோசனையா பேசின விஷயம், மதுரை மாவட்டத்தில் பல ஊர்களிலும் மாணவர்களுக்குப் பெரிய சைஸ் ஆங்கில அகராதியை இப்போ கொடுத்துமுடிச்சுட்டோம்’’ என்று அந்தப் பணிகளை தங்கை விவரிக்க, ‘‘விடுமுறை நாள்களில் இதுபோன்ற வேலைகளைச் செய்துவந்தோம். இப்போ கொரோனா லாக்டௌனால அதுக்குக் கூடுதல் நேரம் செலவிட முடியுது. இன்னும் நிறைய பண்ணணும்’’ - எளிமை விலகாமல் பேசி முடித்தார் பிரியதர்ஷினி.

வாழ்த்துகள் சகோதரிகளே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரியதர்ஷினியின் முன்னெடுப்புகளால் பலன் பெற்றவர்களில் சிலர்...

பால்பாண்டி, சமையற்காரர்,

‘அம்மா கிச்சன்’

‘‘கொரோனா லாக்டௌனால எந்த வேலையும் கிடைக்காம சமையற்காரர்கள் எல்லாரும் முடங்கிப் போனோம். இங்கே 80 பேருக்கு வேலை கிடைச்சது மூலம் எங்க குடும்பம் கஷ்டமில்லாம இருக்கு. அமைச்சர் மட்டுமல்ல, அவங்க மகள்கள் ரெண்டு பேரும் அடிக்கடி இங்க வந்து, எங்களோட சேர்ந்து வேலைகளையெல்லாம் செய்யும்போது ஆச்சர்யமா இருக்கும். ‘அண்ணே... மதுரையில கடைசி நோயாளி இருக்குறவரை நாம இங்க சமைச்சுட்டு இருப்போம்’னு அந்தப் புள்ளைங்க அக்கறையா சொல்லிட்டே இருக்குங்க!”

பால்பாண்டி, பாலமுருகன், லாவண்யா
பால்பாண்டி, பாலமுருகன், லாவண்யா

பாலமுருகன், ஆசிரியர்,

சின்ன உலகனி கிராமம்

‘‘திருமங்கலம் பகுதியில ஆறு ஒன்றியங்கள்ல, 250 டியூஷன் சென்டர்களை, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ‘அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்’ சார்பா நடத்திட்டு வர்றாங்க. அதில் பணியாற்றும் ஆசிரியர்களில் நானும் ஒருவன். இந்தச் சேவைகளிலெல்லாம் நீங்க அமைச்சர் மகள்களையும் பார்க்கலாம்!”

லாவண்யா, மாணவி

‘‘சமீபத்துல மதுரையில நடந்த தனித்திறன் பயிற்சி முகாம்ல மாணவர்களுக்கு புத்தாடையும், ஆங்கில அகராதியும் கொடுத்தாங்க. போட்டித் தேர்வில் கலந்துகொள்வது முதல் தன்னம்பிக்கையை வளர்ப்பதுவரை பலரும் ஸ்பீச் கொடுத்தாங்க. அகராதியை வாங்கிக்கிட்டு, பிரியதர்ஷினி அக்காவுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வந்தோம்!”