Published:Updated:

“உழைக்க பயந்தவங்களுக்குத்தான் வாழ்க்கை கசக்கும்!”

பால்காரம்மா
பிரீமியம் ஸ்டோரி
பால்காரம்மா

பாடம் சொல்லும் பால்காரம்மா

“உழைக்க பயந்தவங்களுக்குத்தான் வாழ்க்கை கசக்கும்!”

பாடம் சொல்லும் பால்காரம்மா

Published:Updated:
பால்காரம்மா
பிரீமியம் ஸ்டோரி
பால்காரம்மா

“ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே சிரமப் பட்ட நாங்க, இன்னிக்கு நல்லா வந்துட்டோம். நேரம் காலம் பார்க்காம உழைக்குற உழைப்பு, எல்லாத்தையும் கொடுக்கும் சார்...” - வார்த் தைக்கு வார்த்தை தன்னம்பிக்கை மிளிரப் பேசுகிறார் போதும்பொண்ணு.

கரூர் மாவட்டம், காந்திகிராமத்தைச் சுற்றி யுள்ள பல பகுதிகளுக்கும் போதும்பொண்ணு தான் ‘பால்காரம்மா’. அதிகாலை 5 மணிக்கே பஜாஜ் எம்.ஐ.டியில் இவர் பறக்க ஆரம்பித்து விடும் காட்சி, பார்ப்பவர்களுக்கும் தன்னம் பிக்கை கொடுக்கும். அருகில் உள்ள கிராமங் களில் விவசாயிகள் வளர்க்கும் மாடுகளில் காலை, மாலை என கிட்டத்தட்ட 150 லிட்டர் பால் கறந்து, தன் வண்டியில் சென்று வீடு வீடாக ஊற்றிவரும் போதும்பொண்ணுவை சந்தித்தோம்.

“உழைக்க பயந்தவங்களுக்குத்தான்
வாழ்க்கை கசக்கும்!”

“எனக்கு சொந்த ஊர், பஞ்சப்பட்டி பக்கத் துல உள்ள ஓணாம்பாறப்பட்டி. குடும்ப வறுமையால படிக்கல. 20 வருஷத்துக்கு முன்னாடி எனக்குத் திருமணமாச்சு. குடிசை வீட்டுலதான் வாழ்க்கை. கணவர் அருணாச லம், கரூர், காந்திகிராமத்துல தங்கி, சம்பளத் துக்கு பால் வியாபாரம் பார்க்கப் போக, நானும் அவர்கூட கிளம்பினேன். விவசாயிகள் வளர்க்கும் மாடுகள்ல பால் கறந்துட்டு வந்து, கம்பெனியில கொடுக்குறது என் வீட்டுக்காரர் வேலை.

இதுக்கிடையில எங்களுக்கு ஒரு பையன் பொறந்தான். விக்காத பால், தயிரை என் கண வரோட முதலாளி என்கிட்ட வந்து கொடுக்க, அதை நான் அக்கம்பக்கத்துல உள்ளவங்க கிட்ட வித்துக்கொடுக்க, முதலாளி 100 ரூபாய் கொடுப்பார். அடுத்து பெண் குழந்தை பிறந் துச்சு. கூடுதல் வருமானம் தேவைப்பட்டுச்சு. நானும் பால் வியாபாரம் பார்க்க முடிவெடுத் தேன்.

“உழைக்க பயந்தவங்களுக்குத்தான்
வாழ்க்கை கசக்கும்!”

ஆறு மாசக் குழந்தையான மகளை தொட்டியில தூங்கவெச்சுட்டு, சைக்கிள்ல என் மகனை உட்கார வெச்சுட்டு, காலையில 5 - 8 மணி வரை சுத்துப்பட்டு கிராமத்துல பால் எடுத்துட்டு வந்து ஊத்துவேன். இதே மாதிரி சாயங்காலம் அஞ்சரை மணியில இருந்து ஏழரை மணி வரைக்கும் வேலை இருக்கும். பனி, மழைனு எல்லா நாளும் இப்படித்தான். வீட்டுல பாப்பா தனியா இருக்குறதை நினைக்கும் போது, ‘நீதான் சாமி எம்புள்ளைய பாத்துக்கணும்’னு மனசு வேண்டிக்கிட்டே இருக்கும்’’ என்பவர், வருடங்கள் ஆக ஆக, தன் உழைப்பையும் பெருக்கியிருக்கிறார்.

‘`ரெண்டு வருஷத்துக்கு அப்புறம், நானும் கணவரும் முதலாளியைவிட்டுப் பிரிஞ்சு வந்து தனியா தொழில் பார்க்க ஆரம்பிச்சோம். ஏமூர், மூலக்காட்டானூர், புதுப்பாளையம், கத்தாழைப் பட்டி, வடக்குப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்ல உள்ள விவசாயிகள்கிட்ட நான் பால் எடுக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல, பால் கறக்கும்போது மாடுங்க எட்டி உதைச்சு, கை, முகத்துல எல்லாம் உதை வாங்கியிருக்கேன். ஆனா, வாழ்க்கையில முன்னுக்கு வரணும்ங்கிற எண்ணம், அந்த வலிகளை எல்லாம் தூசா நினைக்க வெச்சது. என் கணவர் வெச்சிருந்த பழைய பஜாஜ் எம்.ஐ.டி வண்டியை ஓட்டக் கத்துக்கிட்டேன். 15 வருஷத்துக்கு முன்னாடி 4,500 ரூபாய்க்கு எனக்குனு ஒரு பழைய பஜாஜ் எம்.ஐ.டி வண்டியை வாங்கினேன். இதுவரை மூணு பஜாஜ் எம்.ஐ.டி வண்டி மாத்திட்டேன். இப்போ, காலையில 60 லிட்டர், மாலையில 90 லிட்டர்னு பால் கறந்து எடுத்துட்டு வந்து விற்பனை பண்றேன். விவசாயிகள் கிட்ட லிட்டர் 26 ரூபாய்னு வாங்கிட்டு வந்து, கஸ்டமர்கள்கிட்ட 40 ரூபாய்னு விற்குறேன்’’ என்பவர், மாதம் ரூ.3,000 பெட்ரோலுக்கே செலவாகிறது என்கிறார்.

“உழைக்க பயந்தவங்களுக்குத்தான்
வாழ்க்கை கசக்கும்!”

‘`இந்த வண்டியில போறதால, ஊர்க்காரங்க எனக்கு ‘எம்.ஐ.டி பால் காரம்மா’னு பேரே வெச்சுட்டாங்க. ‘பொம்பளைங்க ஏரோபிளேன், ரயி லெல்லாம் ஓட்டுறாங்க. இது ஒரு விசயமா?’னு சொல்லுவேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி, காந்திகிராமத் துல 10 லட்சத்துக்கு இந்த வீடு விற்பனைக்கு வந்தப்போ, ஒரு ஃபைனான்ஸ்ல பணம் வாங்கி இதை வாங்கினோம். கடனை கட்டுற வைராக் கியத்தை வெச்சுக்கிட்டு, தலைவலி, காய்ச்சல்னாகூட லீவு போடாம தொழி லைப் பார்த்தோம். கடுமையா உழைச் சோம். இப்போதான் கடனை அடைச் சோம். பிளைகளுக்காக நிக்காம ஓடு றோம். நான் பால் ஊத்துற காந்தி கிராமமே சொல்லும், ‘இந்தம்மா அலையுற அலைச்சல் போல யாராலயும் உழைக்க முடியாது’னு.

பால் ஊத்துற வீடுகள்ல சில பெண்கள் தங்களோட கஷ்டத்தை சொல்லிக் கலங்கும்போது, தைரியம்தான் பெண்கள் லட்சணம்னு சொல்லுவேன். ‘தற்கொலை பண்ணிக்கலாமானு கூட யோசிச்சேன். உன்னைப் பார்த்தப்போ, அந்த கெட்ட எண்ணம் போயிருச்சு’னு ஒரு அம்மா சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் ஆயுசுக்கும் மறக்காது. 40 வயசாவுது. உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருக்குற வரை என் வண்டி நிக்காது!”

சிட்டாகப் பறக்கிறார் ‘எம்.ஐ.டி பால்காரம்மா’!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism