Published:Updated:

பருமன்தான் என் ப்ளஸ்! - விமர்சனங்களை வென்ற திவ்யா

திவ்யா
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா

என் பொண்ணு பிறந்தபோது நான் 147 கிலோ இருந்தேன். அவளைத் தூக்கிட்டு கொஞ்ச தூரம் நடக்கவே சிரமமா இருந்துச்சு. இப்போ 20 கிலோ குறைச் சுருக்கேன்.

பருமன்தான் என் ப்ளஸ்! - விமர்சனங்களை வென்ற திவ்யா

என் பொண்ணு பிறந்தபோது நான் 147 கிலோ இருந்தேன். அவளைத் தூக்கிட்டு கொஞ்ச தூரம் நடக்கவே சிரமமா இருந்துச்சு. இப்போ 20 கிலோ குறைச் சுருக்கேன்.

Published:Updated:
திவ்யா
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா
``உலகம் ரொம்ப பெரிசு. மத்தவங்க விமர்சனங் களுக்கு பயந்து ஒரே இடத்தில் நின்னுட்டோம்னா, நாம தோத்துருவோம். தைரியமா நம்முடைய திறமையை வெளிக்காட்ட ஆரம்பிச்சா, கிண்டல் பண்ணவங்களே, நம்மைப் பாராட்டிப் பேசும் நாள் வரும்” எனர்ஜியோடு பேசுகிறார் திவ்யா.

ப்ளஸ் சைஸ் மாடல், யூடியூபர், டிக் டாக் பிரபலம் என இவருக்குப் பன்முகங்கள்.

‘ஸ்நாஸி தமிழச்சி’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் இயங்கி வருபவர். 120 கிலோ உடல் எடை கொண்ட இவரின் நடனம் மற்றும் காமெடி வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகம். தன்னுடைய மைனஸை ப்ளஸ்ஸாக மாற்றி, சவால்களை எதிர்கொண்ட திவ்யாவுடன் ஓர் உரையாடல்.

``சொந்த ஊர் திருச்சி. கல்யாண மானதும் சென்னையில் செட்டில் ஆகிட்டோம். இன்ஜினீயரிங் முடிச்சிட்டு ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துட்டு இருந்தேன். சின்ன வயசுலேருந்தே நான் கொஞ்சம் பப்ளியான பொண்ணுதான். நைட் ஷிஃப்ட் வேலை, உணவு முறை மாற்றம், கல்யாணம், குழந்தைனு பல விஷயங்களால உடல் எடை இன்னும் அதிகமாயிருச்சு. நிறைய கேலி கிண்டல் களைக் கடந்து வந்திருக்கேன். ஆரம்பத்துல நிறைய அழுதிருக்கேன். ஒரு கட்டத்துல, கிண்டல் பண்றவங் களைப் பார்த்து பயந்து ஓடாம, எதிர்த்துக் கேள்வி கேட்க ஆரம்பிச்சேன். தயக்கத்தைத் தூக்கிப் போட்டுட்டு, என் மனசுக்குப் பிடிச்ச டிரஸ்ஸையெல்லாம் நம்பிக்கையோடு போட்டுக்க ஆரம்பிச்சேன்.

பருமன்தான் என் ப்ளஸ்! - விமர்சனங்களை வென்ற திவ்யா

எனக்கு கல்யாணம் நிச்சயமானதுலேருந்து, ‘வெயிட்ட குறை, இல்லைனா, குழந்தை பிறக்காது’னு நிறைய பேர் அட்வைஸ் பண்ணாங்க. பயந்துபோய், மகப்பேறு மருத்துவர்கிட்ட கவுன்சலிங் எடுத்த பிறகு தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன். உண்மையைச் சொல்லணும்னா நம் உடம்புல ஹார்மோன்கள் சரியா இருந்தா பருமன் குழந்தைப்பேற்றுக்கு நிச்சயம் தடையா இருக்காது. அதுக்கு நானே உதாரணம். இப்போ எங்க குழந்தைக்கு ஒன்றரை வயசாகுது''

- குழந்தையைக் கொஞ்சியபடி சொல்லும் திவ்யா, சமூக வலைதள ஆர்வம் பற்றிப் பேசுகிறார்.

``குழந்தையைப் பார்த்துக்கிறதுக்காக வேலையை விட்டேன். பெரிய அளவுல முதலீடு இல்லாம பணம் சம்பாதிக்க சோஷியல் மீடியா பெஸ்ட்டுனு தோணுச்சு. களத்துல இறங்கிட்டேன். முதல்ல டிக் டாக் வீடியோக்கள் பண்ணி எனக்குனு ஒரு ஆடியன்ஸ் வட்டத்தை உருவாக்கினேன். அதில் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரவே யூடியூப், இன்ஸ்டானு இப்போ நான் ரொம்ப பிஸி. என் கணவரும் சப்போர்ட் பண்றார்.

டான்ஸ் பிடிக்கும். மூணாவது படிக்கும்போதே அரங்கேற்றம் பண்ணி யிருக்கேன். அதனால் சோஷியல் மீடியா மூலமா டான்ஸ் பண்ண ஆரம்பிச் சேன். என்னை மாதிரி பருமனா இருக்கும் பெண்கள், ‘ரொம்ப இன்ஸ்பைரிங்கா இருக்கு’ன்னு மெசேஜ் பண்றாங்க. இப்போ மாடலிங்கும் பண்ண ஆரம்பிச்சுருக்கேன். என் பொண்ணு பிறந்தபோது நான் 147 கிலோ இருந்தேன். அவளைத் தூக்கிட்டு கொஞ்ச தூரம் நடக்கவே சிரமமா இருந்துச்சு. இப்போ 20 கிலோ குறைச்சுருக்கேன்.

என் உடல் பருமன்தான் இப்போ என்னுடைய ப்ள்ஸ். இன்ஸ்டாவில் மட்டும் 58,000 ஃபாலோயர்களுக்கு மேல் இருக்காங்க. சின்ன சின்ன பிராண்டுகளுக்கு டிஜிட்டல் மார்கெட்டிங் பண்ணிக் கொடுக்கிறேன். யூடியூப் சேனல் மூலமாகவும் வருமானம் வருது. தன்னம் பிக்கையோடு இருக்கேன்.

பருமன் ஒரு குறையில்ல, அதுலேருந்து வெளியே வந்து அடையாளம் தேடுவோம்”

- அசத்தல் மெசேஜுடன் விடைகொடுத்தார் திவ்யா.