Published:Updated:

முயற்சி உடையாள் - 7 - ஊடகத்துறையில் உச்சம் தொடலாம்...

முயற்சி உடையாள்
பிரீமியம் ஸ்டோரி
News
முயற்சி உடையாள்

- பாடமெடுக்கிறார் பிரபல பத்திரிகையாளர் ஜெனிஃபர் அருள்

பத்திரிகைத்துறையில் வேலை பார்க்கும் பெண் களை, இன்றும் ஆச்சர் யத்துடன் பார்க்கும் சமுதாயத்தில்தான் இருக் கிறோம். கடந்த பத் தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஊடகத்துறையில் கால் பதிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. வேலை நேரம், வேலைக்கான களம், சந்திக்கும் மனிதர்கள், பாதுகாப்பு என பத்திரிகைத் துறைக்கு வர நினைக்கும் பெண்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட சவால்களை சர்வ சாதாரணமாகத் தகர்த்தெறிந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் பலரும். ஊடகத் துறையின் தடைகளைத் தாண்டி, தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு மிளிர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கு கிறார், ஊடகத்துறையில் 30 வருட அனுபவ முள்ளவரும் ‘தி மீடியா புராஜெக்ட்’ நிறுவனத் தின் வாரிய உறுப்பினருமான ஜெனிஃபர் அருள்.

ஆதரவு இருந்தால் ஆல் இஸ் வெல்...

ஒவ்வொரு பாராட்டுக்குப் பின்னாலும் ஆயிரமாயிரம் தூங்கா இரவுகளும், போராட் டங்களும் இருக்கும். ஊடகத்துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களால் இயங்க முடியாது என்ற பிம்பத்தை உடைக்கும் துணிச்சலுடன் செயல் படுங்கள். குடும்பம் என்ன நினைக் குமோ என்ற சந்தேகம் இருந்தால் உங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. குடும்பத்தை உங்களுக்கு ஆதரவாக மாற்றுங்கள். இரவு நேரப் பணி எல்லா நாள் களிலும் இருக்காது என்றாலும், என்றாவது ஒருநாள் அதற்கான தேவை வரலாம். ஊடகத் துறை வேலை என்பது மற்ற வேலைகளைப் போன்று குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பார்க்கக்கூடியதல்ல என்பதை வீட்டாருக்குப் புரியவையுங்கள். நான் என் மகன் பிறந்த பிறகுதான் ஊடகத்துறையில் காலடி எடுத்து வைத்தேன். என் கணவருக்கு உடன்பாடு இல்லை என்றாலும். என் குடும்பத்தில் இருந்த மற்றவர்கள் எல்லோரும் பக்கபலமாக இருந்தார்கள். அந்த ஆதரவாலும் ஊக்கத் தாலும்தான் என்னால் சாதிக்க முடிந்தது.

ஜெனிஃபர் அருள்
ஜெனிஃபர் அருள்

நேரம் தவறாதீர்கள்...

வீட்டுவேலை, அலுவலகம், மீண்டும் வீட்டு வேலை என பெண்கள் ஒரு நாளைக்கு மூன்று ஷிஃப்ட் பணியாற்ற வேண்டியிருக்கும். குழந்தைகளின் பள்ளிக்கூடம் தொடங்கி, மருத்துவரிடம் அழைத்துச்செல்வதுவரை குடும்பப் பொறுப்புகளும் அதிகம். ஊடகத்தில் இருப்பவர்களுக்கான அலுவலக நேரத்தை வரையறுக்க முடியாது. சில நாள்களில் அலு வலக நேரம் கடந்தும் பணியாற்ற வேண்டிய தேவை இருக்கலாம். பேட்டிகளுக்குச் செல்லும்போது தனிப்பட்ட காரணங்களைச் சொல்லி தாமதத்துக்கு விளக்கம் கொடுப்பது முறையானதும் அல்ல.

என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில், நேர்காணலுக்கு வந்த நபர்களை நான் காக்க வைத்ததே இல்லை. ஊடகப் பணியாளர் களுக்கு நேரந்தவறாமை மிக முக்கியம். பர்சனல் மற்றும் புரொஃபஷனல் என நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். எந்த வேலையையும் ஸ்மார்ட்டாக செய்யப் பழகினால் ஸ்ட்ரெஸ் இல்லாமல் சாதிக்கலாம்.

பயம் வேண்டாம்... பாதுகாப்பு முக்கியம்!

ஊடகவியலாளர்கள் எல்லா நேரத்திலும், எல்லா இடங் களிலும் உண்மைக்கு கட்டுப் பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களின் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல் களுக்கும் பணிய வேண்டிய தில்லை. ஊடக தர்மத்தோடு நடுநிலைமையுடன் செயல் படுங்கள். உங்களின் பாதுகாப்பும் முக்கியம். சென்சிட்டிவ்வான செய்தி களைக் கையாளும்போது உங்களின் பாதுகாப்பை உறுதி படுத்திக்கொள்ளுங்கள். யாரிடமும் உங்கள் முகவரியைப் பகிராதீர்கள். இரண்டு தொலை பேசி எண்களை வைத்துக் கொள்வது நல்லது. தனியாகச் செய்தி சேகரிக்கச் செல்லும் போது பெப்பர் ஸ்பிரே உட்பட தற்காப்பு விஷயங்களை ஹேண்ட் பேகில் வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் முகம் எது?

ஊடகவியலாளர்களுக்கு சமூக வலைதளப் பயன்பாடு தவிர்க்க முடியாதது. பணியில் இருக்கும்போது நடுநிலைமை யோடு இருப்பது போன்று சமூக வலைதளங்களிலும் இருக்க வேண்டும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அரசியல் கருத்துகளை அங்கே பகிராதீர்கள். ஏனெனில் சமூக வலை தளங்களில் இருக்கும் மக்கள், உங்களின் அக்கவுன்ட்டை தனிப்பட்ட அக்கவுன்ட்டாகப் பார்க்க வாய்ப்பில்லை. சமூக வலைதளத்தில் தவறான மெசேஜ் மற்றும் கமென்ட் செய்கிறவர்களை பிளாக் செய்யுங்கள். நீங்கள் மற்றவர்களின் தகவல்களை ஷேர் அல்லது லைக் செய்கிறீர்கள் என் றாலும், ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துச் செய்யுங்கள்.

ஹோம்வொர்க் முக்கியம்!

யாரைச் சந்திக்கச் சென்றாலும் அவர்களைப் பற்றிய அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டு, ஹோம் வொர்க் செய்துகொண்டு செல்வது நல்லது. ஆனால் இவர் இப்படித்தான் என்ற முன் முடிவுடன் செல்லாதீர்கள். யாரைப் பற்றியும் தவறான கருத்துகளை மற்றவர்களிடம் தேவையில்லாமல் பகிராதீர்கள். வாசகர்களுக்கு எப்போதும் உண்மையான, பயனுள்ள தகவலை மட்டும் கொடுப்பதில் உறுதியாக இருங்கள். பெண் தானே என்று அலட்சியமாக அணுகுபவர்களுக்கு உங்கள் திறமையால் பதில் சொல்லுங்கள்.

முயற்சி உடையாள் - 7 - ஊடகத்துறையில் உச்சம் தொடலாம்...

அப்டேட் ஆகுங்கள்... ஆக்டிவ்வாக இருங்கள்...

ஊடகத்துறையில் உங்களைத் தக்கவைத்துக்கொள்ள நீங்கள் தொடர்ந்து ஆக்டிவ்வாகவும் அப்டேட்டடாகவும் இருப்பது அவசியம். அச்சு ஊடகமோ, காட்சி ஊடகமோ... வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளில் உங்களின் தகுதிக்கேற்ப, உங்களுக்கு விருப்பமான பிரிவைத் தேர்வு செய்து கொள்ளலாம். அடுத் தடுத்த நிலைகளுக்கு உங்களை உயர்த்திக்கொள்ள தகுதி களை வளர்த்துக்கொள்வதோடு, உங்களை அப்டேட்டும் செய்துகொள்ளுங்கள். திறமையை நிரூபித்துக்கொண்டே இருங்கள். உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள்.

- சாதிப்போம்...