Published:Updated:

கொல்கத்தா டு டெல்லி! - கட்டடக் கலைஞரின் வாக்கிங், டாக்கிங் வித்தியாச முயற்சி

கொல்கத்தா டு டெல்லி!
பிரீமியம் ஸ்டோரி
கொல்கத்தா டு டெல்லி!

இந்தியாவுல பல கட்டடங்கள் ஆர்கி டெக்ட் இல்லாமலே கான்ட்ராக்டர்களோ, கட்டடக்கலை பத்தி முறையா படிக்காத சாமானியரோ கட்டினதா இருக்கு.

கொல்கத்தா டு டெல்லி! - கட்டடக் கலைஞரின் வாக்கிங், டாக்கிங் வித்தியாச முயற்சி

இந்தியாவுல பல கட்டடங்கள் ஆர்கி டெக்ட் இல்லாமலே கான்ட்ராக்டர்களோ, கட்டடக்கலை பத்தி முறையா படிக்காத சாமானியரோ கட்டினதா இருக்கு.

Published:Updated:
கொல்கத்தா டு டெல்லி!
பிரீமியம் ஸ்டோரி
கொல்கத்தா டு டெல்லி!

ஆரோக்கியம் முதல் ஆன்மிகம் வரை எத்தனையோ காரணங்களுக்காக பலரும் நடையாய் நடப்பதைப் பார்க்கிறோம். கொல்கத்தாவைச் சேர்ந்த ஆர்கிடெக்ட் கீதா பாலகிருஷ்ணனின் நடைப் பயணத்தின் பின்னணியில் சுவாரஸ்யமான சமூக அக்கறை இருக்கிறது. கிட்டத்தட்ட 1700 கிலோ மீட்டர்... பிப்ரவரியில் கொல்கத்தாவில் தொடங்கிய பயணம் மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் வழியே டெல்லியில் இந்த மாத இறுதியில் நிறைவடைய இருக்கிறது. இந்த நடைப்பயணமானது கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புத் துறைகளில் ஈடுபட்டுள்ளோரின் பங்கு, சமூகத்துக்கான அவர்களின் பங்களிப்பு களை வெளிச்சம்போட்டுக் காட்டுவதோடு, அவர்களின் பிரச்னைகளைப் பேசுவதையும் நோக்கமாகக் கொண்டது.

கீதா
கீதா

கொல்கத்தாவில் பிறந்த தமிழரான கீதா, டெல்லியில் ‘ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சரி’ல் கட்டடக்கலையும், பிட்ஸர் பர்க், கார்னேகி மெல்லென் யுனிவர்சிட்டியில் இன்டர்ன்ஷிப்பும் முடித்தவர். 2002-ம் ஆண்டில் ‘ஈத்தோஸ்’ (Ethos) என்ற அமைப்பைத் தொடங்கினார். மாணவர்கள், புரொஃபஷனல் களுக்கும் கட்டடக்கலை, கட்டு மானம், இன்ஜினீயரிங் மற்றும் டிசைனிங்கை ஒருங் கிணைத்த (Architecture, Construction, Engineering, and Design) குழுவுக்குமான இடைவெளியை நிரப்புவதற்கான முன்னெடுப்பு இது. ஈத்தோஸ் அமைப்பின் ஒரு பகுதியான ‘ஆர்காஸ்’ (Arcause), ‘தி கவுன்சில் ஆஃப் ஆர்கிடெக்ட்ஸ்’ மற்றும் ‘தி இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்கிடெக்ட்ஸ்’ ஆகியவற்றின் இணை முயற்சியே இந்த நடைப்பயணம்.

‘‘வாக் பண்றதுலேருந்து வாரத்துல ஒரு நாள் ரெஸ்ட்... வலிக்கிற கால்களை உயரமா வெச்சுக்கிட்டே உங்ககிட்ட பேசறேன்...’’ என்ற கீதா, மத்தியப்பிரதேசத்தின் ஓர்ச்சா என்ற ஊரிலிருந்து நம்மிடம் பேசினார்.

இந்த நீண்ட நெடும் நடைப்பயணத்தின் பின்னணி, பயணத்தின் போதான அனுப வங்கள், படிப்பினைகள், இலக்குகள் எனப் பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.

கொல்கத்தா டு டெல்லி! - கட்டடக் கலைஞரின் வாக்கிங், டாக்கிங் வித்தியாச முயற்சி
கொல்கத்தா டு டெல்லி! - கட்டடக் கலைஞரின் வாக்கிங், டாக்கிங் வித்தியாச முயற்சி

‘‘அரசியல்வாதியும் நடிகருமான சுனில் தத், அவரோட மகள் ப்ரியா தத் ரெண்டு பேரும் மும்பையிலேருந்து அமிர்தசரஸ் வரைக்கும் நடைப்பயணம் மேற்கொண்டதா நாலு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு செய்தி படிச்சேன். கார்ல போனோம்னா அங்கங்கே நிறுத்தி நமக்குத் தேவையானதைப் பார்க் கணும். நடக்கும்போது அப்படியில்லை. எல்லாமே நம் பார்வைக்கு பக்கத்துல வரும். காட்சிகள், பேச்சுகள்னு எல்லாத்தையும் ரசிக்க முடியும். அந்தச் செய்தியைப் படிச்சதும் எனக்கும் அப்படியொரு வாக் போகணும்ங்கிற ஆசை வந்தது...’’ ஆரம்பம் சொன்னவர், தனக் கும் ஆர்கிடெக்சருக்குமான பந்தம் சொல்லித் தொடர்கிறார்.

‘‘இந்தியாவுல பல கட்டடங்கள் ஆர்கி டெக்ட் இல்லாமலே கான்ட்ராக்டர்களோ, கட்டடக்கலை பத்தி முறையா படிக்காத சாமானியரோ கட்டினதா இருக்கு. இதைப் பத்தியெல்லாம் பேசறது, எழுதறது, லெக்சர் கொடுக்கிறதைவிடவும் என்னுடைய வாக் மூலமா நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்னு நம்பினேன். காலைல 4 மணிக்கு நடக்க ஆரம்பிப்பேன். என் பாது காப்புக்காக எனக்குப் பின்னாடி போக மஹிந்திரா கம்பெனி ஸ்கார்பியோ காரும், டிவிஎஸ் கம்பெனி பைக்கும் கொடுத்திருக் காங்க...’’ என்கிற கீதா, இந்த நடைப்பயணத் துக்கான இலக்குகளை விவரிக்கிறார்.

கொல்கத்தா டு டெல்லி! - கட்டடக் கலைஞரின் வாக்கிங், டாக்கிங் வித்தியாச முயற்சி

‘‘டிசைன் எப்படி நம்ம வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்னு சொல்றதுதான் நோக்கம். இதுவரை நான் சந்திச்ச மனிதர்கள்ல பலருக்கும் ஆர்கிடெக்ட் என்ற வார்த்தையே தெரியலை. சின்னச் சின்ன வீடுகள், ஆஸ்பத்திரி, காலேஜ் மாதிரியான கட்டடங்களை யார் டிசைன் பண்றாங்கன்னு கேட்டா, இன்ஜினீயர், மேஸ்திரிங்கிற அளவுலதான் அவங்களுக்குத் தெரியுது. ஆர்கிடெக்ட்டுகள் இது மாதிரி சின்ன நகரங்கள்ல வேலை பார்க்கிறதில்லை, போதுமான தொழிலாளர்களைப் பயன்படுத்த றதில்லைனு தெரியுது. அப்படி அவங்க பயன்படுத்தியிருந்தா அதுலயும் புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைய பேர் இருந்திருப்பாங்க. அவங்க மூலமா கட்டடக் கலைனு ஒண்ணு இருக்குறது கிராமத்து மக்களுக்கும் போய்ச் சேர்ந்திருக்கும்.

அடுத்ததா ஆர்கிடெக்சரை கரியரா எடுத் துக்கறது பத்தி பள்ளிக்கூடங்கள்ல போய்ப் பேசறது. இதையெல்லாம் முடிச்சதும் கடைசியா, டாய்லெட் கட்டறது, கம்யூனிட்டி சென்டர் அமைக்கிறது, சில கிராமங்களுக்கு கலர் ஸ்கீம் டிசைன் பண்றது மாதிரியான சில திட்டங்கள் வெச்சிருக்கோம்..’’ நடையாய் நடப்பதன் நோக்கம் சொல்பவர், நடைப் பயணம் தரும் அனுபவங்களிலிருந்து தானும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறாராம்.

‘‘அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில நாம செருப்பை வீட்டுக்குள்ளே கொண்டுவந்து பழகிட்டோம். கோவிட் வந்தபிறகு செருப்பை வெளியில விட ஆரம்பிச்சிருக்கோம். கிராமத்து மக்களுக்கெல்லாம் பாத்ரூம் இன்னும் வீட்டுக்கு வெளியிலதான் இருக்கு. இப்படி கிராமத்துல இன்னும் பல நல்ல விஷயங்களைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணிட்டிருக்காங்க. மண் வீட்லேருந்து செங்கல்லும் சிமென்ட்டும் கலந்து கட்டுற வீடுகளுக்கு மாறும்போது கிராமத்து மக்களும் நம்மை மாதிரி மாறிடறாங்க. `பக்காவான வீடு கட்ட ஆசைப்படறதுல தப்பில்லை. ஆனா, உங்க பழைய வீடுகள்ல உள்ள நல்லதை மிஸ் பண்ணிடாதீங்க'ன்னு அவங்களுக்கு அட்வைஸ் பண்றேன்.

கொல்கத்தா டு டெல்லி! - கட்டடக் கலைஞரின் வாக்கிங், டாக்கிங் வித்தியாச முயற்சி

மத்தியப்பிரதேசத்துல ‘ஹாஸ்பிட்டல் ஆன் வீல்ஸ்’ கான்செப்ட்டுல நான் ஒரு லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் பார்த்தேன். அதாவது ஒரு டிரெயி னையே ஆஸ்பத்திரியா மாத்தியிருக்காங்க. 1992-ம் வருஷத்துலேருந்து இயங்கிட்டிருக்குற அதுல பல டாக்டர்ஸ் தன்னார்வலர்களாக வொர்க் பண்றாங்க. ஒவ்வொரு கிராமத்துக்கும் பயணம் செய்து, கண், பல், காது அறுவை சிகிச்சைகள் செய்யறாங்க. அதே மாதிரி தமிழ் நாட்டுல உள்ள ஆர்கிடெக்ட்ஸ் எல்லாரும் ஒன்றிணையலாம். அவங்களுடைய நேரத்தை ஒதுக்கினாலே மக்களுக்குப் பெரிய பங்களிப் பைக் கொடுக்க முடியும்...’’ வித்தியாச பார்வையை முன்வைக்கிறார்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism