Published:Updated:

கலசப்பாக்கம் டு கலிஃபோர்னியா... கனவுகளை நனவாக்கியவரின் கம்பீர கதை

சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா

அப்பா கலசப்பாக்கத்துல பார்மசி வெச்சிருக்கார். அம்மா ஹோம் மேக்கர். எனக்கு இரண்டு தங்கைகள். கலசப்பாக்கத்துல உள்ள வள்ளலார் நர்சரி அண்டு பிரைமரி ஸ்கூல்லதான் நான் அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் படிச்சேன்.

கலசப்பாக்கம் டு கலிஃபோர்னியா... கனவுகளை நனவாக்கியவரின் கம்பீர கதை

அப்பா கலசப்பாக்கத்துல பார்மசி வெச்சிருக்கார். அம்மா ஹோம் மேக்கர். எனக்கு இரண்டு தங்கைகள். கலசப்பாக்கத்துல உள்ள வள்ளலார் நர்சரி அண்டு பிரைமரி ஸ்கூல்லதான் நான் அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் படிச்சேன்.

Published:Updated:
சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா

வெளிநாட்டில் வேலை... இந்த ஆசை இல்லாத இளைஞர்களை விரல் விடாமலேயே எண்ணி விடலாம். மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே நனவாகும் கனவாக இருக்கிறது அது. ‘அப்படியெல்லாம் இல்லை... ஆர்வமும் தேடலும் இருந்தால் யாருக்கும் அந்தக் கனவு பலிக்கும்’ என்கிறார் சரண்யா.

உலகின் முன்னணி வேலைவாய்ப்புத் தளமான ‘லிங்க்டு இன்’னில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலைபார்க்கும் சரண்யா, கலசப்பாக்கத்திலிருந்து கலிஃபோர்னியா வரை சென்று சிகரம்தொட்ட கதை, மற்றவர்களுக்கு நிச்சயம் உத்வேகம் தரும்.

‘`அப்பா கலசப்பாக்கத்துல பார்மசி வெச்சிருக்கார். அம்மா ஹோம் மேக்கர். எனக்கு இரண்டு தங்கைகள். கலசப்பாக்கத்துல உள்ள வள்ளலார் நர்சரி அண்டு பிரைமரி ஸ்கூல்லதான் நான் அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் படிச்சேன். என் வகுப்புகள்ல அதிகபட்சம் 10 மாணவர்களுக்கு மேல இருந்ததில்லை. மாண வர்கள் மட்டுமல்ல, அங்கே ஆசிரியர்களும் குறைவு தான். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரசக்திதான், எங்கப்பாகிட்ட, ‘சரண்யாவை நல்லா படிக்கவைங்க... அவ நிச்சயம் பெரிய இடத்துக்கு வருவா’ன்னு சொல்லிட்டே இருப்பார். அஞ்சாவதுக் குப் பிறகு எங்க ஊர்ல இங்கிலிஷ் மீடியம் ஸ்கூல் எதுவும் இல்லை. கலசப்பாக்கத்துலேருந்து திரு வண்ணாமலைல உள்ள ஸ்கூலுக்குப் போய் படிச்சேன். அதிகாலையில கிளம்பினா, வீடு திரும்ப ராத்திரி ஆயிடும். அத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் எனக்கு படிப்பு முக்கியமா இருந்தது. நல்லா படிச்சு பத்தாவதுல 478 மார்க் வாங்கினேன். என் மார்க்ஸை பார்த்துட்டு பல ஸ்கூல்ஸ்ல ஃபீஸ் இல்லாம சேர்த்துக்கிறதா என்னைக் கூப்பிட்டாங்க. படிப்பு மரியாதையைத் தேடிக் கொண்டுவந்து சேர்க்கும்னு உணர்ந்த தருணம் அது...’’ என்றவரின் ஓட்டம் அங்கிருந்து வேகமெடுத்திருக்கிறது.

கலசப்பாக்கம் டு கலிஃபோர்னியா... கனவுகளை நனவாக்கியவரின் கம்பீர கதை

எந்நேரமும் படிப்பு... குடும்பத்தின் முதல் தலை முறை பட்டதாரி என்ற பெருமைக்காக கடினமாக உழைத்திருக்கிறார். அதன் பலன் ப்ளஸ் டூவில் 1175 மதிப்பெண்.

‘`அப்பா பார்மசி வெச்சிருந்தததால சின்ன வயசுலேருந்தே எனக்கு மருந்துகள் பரிச்சயம். பார்மசியில அப்பாவுக்கு உதவியா இருந்த நாள்கள் ஏராளம். பார்மசி சூழல் எனக்குள்ள டாக்டர் கனவையும் விதைச்சிருந்தது. 1175 மார்க்ஸ் வாங்கியும் எனக்கு மெடிக்கல் காலேஜ்ல சேர முடியலை. வேற வழியில்லாம இன்ஜினீயரிங்ல சேர்ந்தேன். சென்னை, எம்.ஐ.டியில இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில சீட் கிடைச்சது. ‘பொம்பிளைப் புள்ளையை சென்னைக்கு அனுப்பித்தான் படிக்க வைக்கணுமா...’ங்கிற கேள்வியை எழுப்பினாங்க பலரும். ஆனாலும் எங்கப்பா அசராம என்னை அனுப்பிவெச்சார். அப்பாவோட வருமானம் மட்டும்தான் குடும்பத்துக்கான ஒரே ஆதாரம். எனக்கடுத்து ரெண்டு தங்கச்சிங்க படிச்சிட்டிருந்தாங்க. அப்பாவுக்கு சுமையை ஏத்தக்கூடாதுன்னு நினைச்சேன். அதனால என்னை மாதிரி வசதியற்றவங்களுக்கு என்னென்ன ஸ்காலர்ஷிப்பெல்லாம் கிடைக்கும்னு தேட ஆரம்பிச்சேன். எஃப்.எஃப்.இ ஸ்காலர்ஷிப் பத்தி தெரியவந்தது. நாலு வருஷப் படிப்பையும் கட்டணமே இல்லாம அதுலதான் முடிச்சேன். படிப்பை முடிச்சதும் கேம்பஸ் இன்டர் வியூவுல தேர்வாகி, பெங்களூரு சிஸ்கோ கம்பெனியில வேலையும் கிடைச் சது...’’ என்று நிறுத்துபவர், சராசரிப் பெண்ணாக இருந்திருந்தால், அத்துடன் திருப்தியடைந்திருப்பார். ஆனால், சரண்யாவின் கனவுகள் பெரியவை.

‘`சிஸ்கோவுல வேலைபார்த்த அனுபவம்தான் என்னுடைய அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடிப்படையா அமைஞ்சது. இந்தியா மற்ற நாடுகளோடு சேர்ந்து எப்படி வொர்க் பண்ணுதுன்னு தெரிஞ்சுக்க வாய்ப்பு கிடைச்சது.

இதுக்கிடையில எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச் சிட்டாங்க. கல்யாணத்துக்குப் பிறகும் வேலை பார்ப்பேங்கிற கண்டிஷனோடு சம்மதிச்சேன். டேட்டா இன்ஜினீயரான அரவிந்த், எனக்கு முழுமையா சப்போர்ட் பண்ற கணவரா அமைஞ்சார். அமெரிக்காவுல மாஸ்டர்ஸ் டிகிரி படிக்க ஊக்கப்படுத்தி, அதுக்கான தேர்வுகளுக்குத் தயார்படுத்தினார். சான் ஜோஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங்ல மாஸ்டர் டிகிரி முடிச்சேன். மாஸ்டர்ஸ் பண்ணும்போது சைனீஸ், இரானி யன், அமெரிக்கன்னு பல நாடுகளைச் சேர்ந்தவங்களும் புரொஃபஸர்சா பாடம் எடுப்பாங்க. அவங்களுடைய மொழியைப் புரிஞ்சுக்கிட்டுப் படிக்கிறதும் கம்யூனிகேட் பண்றதும் பெரிய சவாலா இருக்கும். பாடங்களை ரெக்கார்டு பண்ணிவெச்சுக்கிட்டு மறுபடி மறுபடி போட்டுக் கேட்டு மெள்ள மெள்ள புரிஞ்சுகிட்டுப் படிப்பேன்...’’ சவால்களை நினைவுகூர்பவர், படிப்பை முடித்ததும் உலகின் முன்னணி வேலைவாய்ப்பு நிறுவன மான லிங்க்டு இன்னில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலைக்குச் சேர்ந்திருக் கிறார். 11 பேர் கொண்ட இவரது டீமில் இரண்டே பெண்கள். இவர் மட்டுமே தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

‘`லிங்க்டு இன் கம்பெனி பத்தி புதுசா சொல்ல வேண்டியதில்லை. தனிப்பட்ட நபர்களின் தகுதி களுக்கேற்ப எல்லோருக்குமான வேலை வாய்ப்புங்கிறதை இலக்கா கொண்ட நிறுவனம். அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நியூஸ்லெட்டரால புரொஃபஷனல்களின் டாப் சோஷியல் மீடியானு 2022-ல ரேங்க் செய்யப்பட்ட நிறுவனம்.

கணவருடன் சரண்யா
கணவருடன் சரண்யா

இந்தியாவின் வேலைச்சூழலுக் கும் இப்போ நான் பார்க்குற வேலைச் சூழலுக்குமான வித்தியாசம் ரொம்ப பெருசு. இங்கே யாரும் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை. கம்பெனி யோட சலுகைகள் பெரிய பொறுப்புகள்ல உள்ளவங்கள் லேருந்து கடைநிலை ஊழியர்வரை எல்லாருக்கும் பொது.

அங்கே வேலையை வேலையா மட்டும் பார்ப்பாங்க. வேலை நேரத்தைத் தாண்டி ஒவ்வொருத்தருக்கும் ஓர் உலகம் இருக்குன்னு தெரிஞ்சு, அதை அனுமதிக்கிறாங்க. பாலினம், நிறம், சாதி, மதம்னு எந்தப் பாகுபாடும் பார்க்க மாட்டாங்க...’’ பணியிடப் பெருமை பேசுபவர், இத்துடனும் தேங்கிவிட விரும்பவில்லை.

‘`இதுவரைக்கும் என் வாழ்க்கையில நடந்த எல்லாமே எதிர்பாராத திருப்பங்கள். அடுத்து என்ன நடக்கப் போகுதுங்கிற ஆவலோடு என் னுடைய வேலையைப் பார்த்துட்டு இருக்கேன். என்னுடைய அடுத்த லட்சியம் தொழிலதிபர் அல்லது ஒரு கம்பெனியோட சிஇஓ ஆகிறது. அது நடக்குமா, நடக்காதான்னு யோசிக்காம, முயற்சிகளை மட்டும் தொடர்வேன். ஜெயிக்கி றோமா, தோற்கறோமாங்கிறது முக்கியமில்லை. சண்டை செய்யறதுதான் முக்கியம்’’ - பன்ச் டயலாக் சொல்லும் சரண்யா, வெளிநாட்டு வேலைக் கனவிலிருப்போருக்கும் சேதி வைத்திருக்கிறார்.

‘`அமெரிக்கா மாதிரி நாடுகள்ல வேலை செய்ய ரெண்டு ரூட் இருக்கு. மேல்படிப்புக்காக வெளிநாடு போய் படிச்சு அங்கேயே வேலை தேடி செட்டிலாகறது ஒரு வகை. அதுக்கு சிலபல லட்சங்கள் தேவைப்படும். அது எல்லாருக்கும் சாத்தியமாகறதில்லை.

கலசப்பாக்கம் டு கலிஃபோர்னியா... கனவுகளை நனவாக்கியவரின் கம்பீர கதை

இன்னிக்கு பெரும்பாலான நிறுவனங்களுக்கு உலகம் முழுக்க கிளைகள் இருக்கு. இந்தியாவுல படிப்பை முடிச்சிட்டு ஒரு நிறுவனத்துல சேரும்போது அந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகள்ல கிளைகள் இருக்கலாம். அந்த நிறுவன ஆட்களோடு பேசி, அந்த நாட்டுல வேலை செய்ய என்ன தகுதிகள் வேணும், எப்படி உங்களை அப்டேட் பண்ணிக் கணும்னு தெரிஞ்சுக்கிட்டு முயற்சி செய்யுறது இன்னொரு ரூட். முயற்சி செய்யுங்க. அது மட்டும்தான் உங்களை முன்னேற்றும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism