Published:Updated:

அகில இந்திய வானொலி முதல் கிளப் ஹவுஸ் வரை... ‘ஆல்வேஸ் ஆக்டிவ்’ ஃபாத்திமா பாபு

ஃபாத்திமா பாபு
பிரீமியம் ஸ்டோரி
ஃபாத்திமா பாபு

நான் அகில இந்திய வானொலியில 1980-ல இருந்து இன்னிக்கு வரைக்கும் ‘ஏ’ கிரேடு டிராமா ஆர்ட்டிஸ்ட்டா இருக்கேன்.

அகில இந்திய வானொலி முதல் கிளப் ஹவுஸ் வரை... ‘ஆல்வேஸ் ஆக்டிவ்’ ஃபாத்திமா பாபு

நான் அகில இந்திய வானொலியில 1980-ல இருந்து இன்னிக்கு வரைக்கும் ‘ஏ’ கிரேடு டிராமா ஆர்ட்டிஸ்ட்டா இருக்கேன்.

Published:Updated:
ஃபாத்திமா பாபு
பிரீமியம் ஸ்டோரி
ஃபாத்திமா பாபு

செய்தி வாசிப்பாளர்களில் இன்றளவும் ஃபாத்திமா பாபுவுக்குத் தனியிடம் உண்டு. சின்ன, பெரிய திரை நடிகையாகவும் கவனம் ஈர்த்தவர், சமீப காலத்தில் பிக்பாஸ், டான்ஸ் ஷோ என கலக்கினார். தற்போது கிளப் ஹவுஸில் ‘சிறுகதை நேரம்’ என்ற அறையில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதை களை வாசித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் கொரோனா, சிறுநீரகக்கல் பாதிப்பு என இரண்டு பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்திருப்பவரிடம் பேசினோம்.

‘`நான் அகில இந்திய வானொலியில 1980-ல இருந்து இன்னிக்கு வரைக்கும் ‘ஏ’ கிரேடு டிராமா ஆர்ட்டிஸ்ட்டா இருக்கேன். ரொம்ப நாளா செல்போனுக்குள்ளேயே நம்மோட வாழ்க்கை சுருங்கிட்ட மாதிரி எனக்கொரு ஃபீல். அந்தக் குறையைப் போக்கதான், கிளப் ஹவுஸ்ல சிறுகதைகள் வாசிக்க ஆரம்பிச்சேன்.

அகில இந்திய வானொலி முதல் கிளப் ஹவுஸ் வரை... ‘ஆல்வேஸ் ஆக்டிவ்’ ஃபாத்திமா பாபு

கிளப் ஹவுஸை பொறுத்தவரைக்கும் ஒரு பக்கம் பாட்டு, அரட்டைன்னு லைட்டா போயிட்டிருந்தாலும் இன்னொருபக்கம் இலக்கியம் சார்ந்த உரையாடல்களும் நிறைய நடந்துகிட்டிருக்கு. நான் தமிழ்ல வந்த சிறந்த சிறுகதைகளை வாசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

இது மூலமா ஒரே நேரத்துல ஆயிரக் கணக்கானவங்களோட இணைஞ்சு இருக்கலாம். நல்ல கதைகளா இருந்தா வாசிக்கிறவங்களும் சோர்ந்து போக மாட்டாங்க; கேட்கிறவங்களும் சோர்ந்து போக மாட்டாங்க’’ என்றவர், தான் வாசித்த சிறுகதைகள், கிடைத்த பாராட்டுகள் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

‘`1915-ல எழுதப்பட்ட, தமிழின் முதல் சிறுகதைன்னு சொல்லப்படற வ.வே.சு. அய்யரின் ‘குளத்தங்கரை அரசமர’த்தில் ஆரம்பிச்சு சமகால எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகரின் ‘ஒரு காபி குடிக்கலாமா’, அராத்துவின் ‘பரந்த மனப்பான்மை’ வரைக்கும் வாசிச்சிருக் கேன். பொதுவா, ஒரு சிறுகதை பிரசுரமாகி, வாசகர்கள் படிச்சு, அதுக்குப் பிறகுதான் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கிட்ட தங்க

ளோட கருத்துகளைச் சொல்ல முடியும். கிளப் ஹவுஸ்ல நான் சிறுகதை வாசிச்சு முடிச்சவுடனே, கதை கேட்டவங்க தங்களோட கருத்துகளைச் சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க.

அகில இந்திய வானொலி முதல் கிளப் ஹவுஸ் வரை... ‘ஆல்வேஸ் ஆக்டிவ்’ ஃபாத்திமா பாபு

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், ‘என்னோட ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான சரியான உணர்ச்சிகளை உள்வாங்கி சரியான ஏற்ற இறக்கத்தோட ஃபாத்திமா பாபு வாசிச்சப்போ என் கதையே எனக்கு அலங்காரமாகத் தெரிஞ்சது’ன்னு முகநூல்ல பாராட்டியிருந்தார்.

என்னோட சிறுகதை நேரத்தை ‘கிளப் ஹவுஸின் மிகச்சிறந்த ஒழுக்கமான அறை’ன்னு நிறைய பேர் சமூக வலைதளங்கள்ல பாராட்டுறாங்க’’ என்றவர், கொரோனா மற்றும் சிறுநீரகக்கல் பிரச்னையிலிருந்து தான் மீண்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

‘`கொரோனா வந்து பாடா படுத்திட்டு போன அடுத்த மாசமே சிறுநீரகக்கல் பிரச்னை வந்துடுச்சு. சீரியல்ல நடிக்கிறப்போ வாஷ் ரூம் போறதைத் தள்ளிப்போட்டதால வந்த வினை. ‘பிக்பாஸ் ஜோடிகள்’ டான்ஸ் ரியாலிட்டி ஷோவுல ‘ஹோஜாயே’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டு வந்தேன். அன்னிக்கு ராத்திரி இடுப்புக்கும் முதுகுக்கும் நடுவுல தாங்க முடியாத வலி. உடனே ஹாஸ்பிடலுக்கு போனோம். சிறுநீரகக்கல் நீக்க ஆபரேஷன் முடிஞ்சு, ஓய்வும் எடுத்து, இதோ மறுபடியும் டான்ஸ் ஆட நான் ரெடி’’ என்று சிரிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism