Published:Updated:

“டெலிவரியான மூணாவது மாசம் கிரவுண்டுக்கு ஓடிட்டேன்!”

குடும்பத்தினருடன் கிருஷ்ணரேகா
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்தினருடன் கிருஷ்ணரேகா

- உலகளவில் தங்கம் குவிக்கும் தலைமை காவலர் கிருஷ்ணரேகா

“டெலிவரியான மூணாவது மாசம் கிரவுண்டுக்கு ஓடிட்டேன்!”

- உலகளவில் தங்கம் குவிக்கும் தலைமை காவலர் கிருஷ்ணரேகா

Published:Updated:
குடும்பத்தினருடன் கிருஷ்ணரேகா
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்தினருடன் கிருஷ்ணரேகா

“என் கல்யாணத்துல எனக்கிருந்த ஒரே எதிர்பார்ப்பு, கல்யாணத்துக்குப் பிறகும் நான் விளையாட கணவர் உறுதுணையா இருக் கணும்ங்கிறதுதான். `உன் இஷ்டம்’னு அப்போ சொன்ன என் கணவர் செந்தில், சொன்னபடியே, இப்போ நான் வெளிமாநிலம், வெளிநாடுகள்னு போட்டிகளுக்குப் போகும்போதெல்லாம் பிள்ளைங்களையும் வீட்டையும் பாத்துக்கிட்டு என்னை வழியனுப்பிவைக்கிறார்’’ என்று நிறைவுடன் சிரிக்கிறார், சமீபத்தில் உலகளவில் நடந்த வேர்ல்டு போலீஸ் மீட்டில் மூன்று தங்கப்பதக்கங்களை அள்ளிக்குவித்திருக்கும் தலைமை காவலர் கிருஷ்ணரேகா.

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான கிருஷ்ணரேகாவுக்கு வயது 38. நெதர்லாந்தில் கடந்த ஜூலை மாதம் நடந்த உலகளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களுடன் ஒரு வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளார் கிருஷ்ணரேகா. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு தலைமை காவலர். ஏற் கெனவே, 2019-ல் சீனாவில் நடந்த காவலர்களுக்கான உலக அளவிலான தடகளப் போட்டி களில் இரண்டு தங்கப்பதக்கங்கள், இரண்டு வெள்ளி பதக்கங்கள் என பதக்க வேட்டை நடத்தி காவல்துறைக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் கிருஷ்ணரேகாவை, மணவாளக்குறிச்சி அருகே, சேரமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.

 “டெலிவரியான மூணாவது மாசம் கிரவுண்டுக்கு ஓடிட்டேன்!”

“பள்ளி உடற்கல்வி ஆசிரியை லீலாவதி, டிவிஷனல், டிஸ்ட்ரிக்ட் லெவல் போட்டிகளுக்கு என்னை கூட்டிட்டுப் போனாங்க. 8-ம் வகுப்பிலேயே உயரம் தாண்டுதலில ஸ்டேட் மெடல் அடிச்சேன். நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி யில் சேர்ந்தப்போ ஹைஜம்ப், ஓட்டப்பந்தயம், ஃபுட்பால் விளையாட்டுகளில யுனிவர்சிட்டி மெடல் வாங்கினேன். கல்லூரி மூன்றாமாண்டு படிச்சுக்கிட்டு இருந்தப்போவே, 2006-ல ஓப்பன் கோட்டாவுல போலீஸ் வேலைக்குத் தேர்வானேன்.

திருச்சி பட்டாலியன்ல எட்டு மாசம் டிரெய்னிங் முடிச்சுட்டு ஆவடி வைஷ்ணவி நகர்ல 5-ம் பட்டாலியனுக்கு போனேன். அங்க ஸ்போர்ட்ஸ் டீமுக்கு தேர்வாகி விளை யாடினேன். 2008-ல சென்னை சிட்டி ஆயுதப் படைக்கு மாற்றலாகி, சிட்டி ஏ.ஆர் ஸ்போர்ட்ஸ் டீமில் இருந்தேன். 2011-ல் திருமணம். 2015-ல தமிழ்நாடு ஸ்டேட் டீம்ல சேர்ந்தேன். பிறகு தொடர்ச்சியா போலீஸ் மீட்கள், பதக்கங்கள்னு போகுது வாழ்க்கை’’ என்பவர் கரஸ்ஸில் பி.ஏ முடித்துள்ளார்.

``முதல் மகன் வயித்துல இருந்தப்போ, எட்டு மாசம் வரைக்கும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ல கிரவுண்ட்லதான் இருந்தேன். முதல் டெலிவரி முடிஞ்சு ஆறு மாசத்துல நேஷனல் மீட் வந்ததால, டெலிவரியான மூணாவது மாசமே கிரவுண்டுக்குப் பயிற்சிக்குப் போயிட்டேன். அந்த அர்ப்பணிப்புதான், 2016-ல் இந்தியா மீட்ல ஹரியானாவில் வெண்கலப் பதக்கம், 2017-ல் இந்தியா மீட்ல ஹைதராபாத்தில் சில்வர் மெடல், 2018-ல் உத்தரகாண்ட்ல நடந்த போட்டியில கோல்டு மெடல், 2019-ல சீனா வேர்ல்டு போலீஸ் மீட்ல ரெண்டு கோல்டு, ரெண்டு சில்வர்னு வெற்றி என்னை தொடர்ந்து வரக் காரணம்.

இடையில், கொரோனா காரணமா போட்டிகள் நடக்கல. கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த ஓப்பன் நேஷனல் மீட்ல மூணு கோல்டு மெடல் அடிச்சேன். இப்ப நெதர்லாந்துல மூணு கோல்டு, ஒரு சில்வர் அடிச்சிருக்கேன். நான் ஊர் திரும்பினப்போ, நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கே வந்து வரவேற்று என்னை உற்சாகப்படுத்தினார் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத்’’ என்றவர், தன் குடும்பம் பற்றி பகிர்ந்தார்.

 “டெலிவரியான மூணாவது மாசம் கிரவுண்டுக்கு ஓடிட்டேன்!”

“கணவர் மர வேலைகள் செய்றார். அவருக்கு ஸ்போர்ட்ஸ்னா என்னன்னு சுத்தமா தெரியாது. ஆனா, போட்டிகளுக்கு என்னை கொண்டுபோய் விடுறது, கூட்டிட்டு வர்றது, வெளிநாட்டுக்குப் போகும்போது என் பிள்ளைகளுக்கு அம்மாவா இருக்குறதுனு எனக்கு ஃபுல் சப்போர்ட் அவர்தான். டியூட் டிக்கும், போட்டிகளுக்கும் போற அம்மாவுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்பி வைக்கிற என் பிள்ளைங்களும் என் வரம். மூத்தவன் ஆறாம் வகுப்பும், சின்னவன் ஐந்தாம் வகுப்பும் படிக் கிறாங்க. அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து கிரவுண்டுக்கு ஓடுவேன். 7 மணி வரை பயிற்சியை முடிச்சுட்டு, அப்புறம் சமையல், கணவர், பிள்ளை களை கிளப்புறது, நான் கிளம்புறதுனு போகும். சாயங்காலம் 5 - 7 மணி வரை மறுபடியும் கிரவுண்டு.

தூத்துக்குடி, திருநெல்வேலினு வெளியூர் டியூட்டி போடும்போது, ஷூவையும் எடுத்துட்டுப் போய், கிடைக்கிற நேரத்துல ரன்னிங், ஜம்ப், வெயிட் தூக்குறதுனு பயிற்சி பண்ணு வேன். போட்டிக்குப் போறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே, பயிற்சி களை மூணு கட்டமா பிரிச்சுக்கிட்டு தொடங்கிடுவேன்.

 “டெலிவரியான மூணாவது மாசம் கிரவுண்டுக்கு ஓடிட்டேன்!”

முதல் ரெண்டு மாசத்தை ஆஃப் சீசன்னு சொல்லுவோம். அப்போ மலை, கடற்கரை, வெயிட் லிஃப்டிங்னு கடுமையான உடற்பயிற்சிகளை செய் வேன். உடல்வலி கடுமையா இருக்கும். ரெண்டாவது, பீக் சீசன். கடைசி ஒரு மாசம் ஸ்பீட் வொர்க்அவுட். கார்மல் ஸ்கூல் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் பாபு தான் எனக்குப் பயிற்சி அளிக் கிறார். 2023 ஜுன் மாசம் கனடாவுல நடக்கவிருக்கிற போட்டிக்கு இப்போ தயாராகிட்டு இருக்கேன்” என்றவர்,

“எனக்கு 38 வயசாகுது. `இனி எதுக்கு ரேகா விளையாடப்போற? உனக்கு எந்த பெனிஃபிட்டும் கிடைக்கப்போறதில்ல, புரமோஷனும் தரப்போறதில்ல. வேலைய மட்டும் பார்த்துட்டு இரு’னு பலரும் சொல் வாங்க. ஆனா, அதையெல்லாம் எதிர்பார்த்து ஒரு நாளும் நான் ஓடல. நான் ஓடிட்டே இருக்கேங்கறதே மிகப்பெரிய பெனிஃபிட் அப்படினு தான் ஒவ்வொரு நாளும் பெருமை யோட நினைச்சுக்குவேன்” - ஷூவை மிடுக்காக மாட்டுகிறார் கிருஷ்ணரேகா.``