Published:Updated:

துரத்திய துயரங்கள்... துவளாத தன்னம்பிக்கை! - சோதனைகளை வென்ற கோமதி

கோமதி
பிரீமியம் ஸ்டோரி
கோமதி

அவரால குடியை நிறுத்த முடியலை. மஞ்சள் காமாலையும் சேர்ந்ததால திடீர்னு ஒருநாள் இறந்துட்டார்.

துரத்திய துயரங்கள்... துவளாத தன்னம்பிக்கை! - சோதனைகளை வென்ற கோமதி

அவரால குடியை நிறுத்த முடியலை. மஞ்சள் காமாலையும் சேர்ந்ததால திடீர்னு ஒருநாள் இறந்துட்டார்.

Published:Updated:
கோமதி
பிரீமியம் ஸ்டோரி
கோமதி

எல்லா சூழல் களும் நமக்கு எதிராக இருந் தாலும் மனம் தளராமல் வாழ்க்கையை எதிர்கொள்வதில்தான் வெற்றி ஒளிந்திருக்கிறது.

இதைச் சொல்வது எளிது, செயல் படுத்துவதுதான் கடினம். சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த கோமதி செயல்படுத்திக் காட்டியிருக்கிறார். பொருளாதார ரீதியாக பெரும் சரிவு, கணவரின் மரணம் என அடுத்தடுத்து தன் வாழ்வை துயரங்கள் சூழ்ந்தபோதும் முடங்கி விடாமல் போராடும் கோமதியின் வாழ்வில் நிரம்பியிருக்கிறது நம் எல்லோருக்குமான நம்பிக்கை.

பிளாஸ்டிக் பூக்கள், தோரணங்கள், கட்சிக் கொடிகள், கோயில் திருவிழாக்களுக்கான கொடிகள் என பல்வேறு பொருள்களைத் தயார்செய்து டெகரேஷன் கம்பெனிகளுக்கு விநியோகிப்பதுதான் கோமதியின் தொழில். சில வருடங்களுக்கு முன்பு தன் வாழ்வாதாரத் துக்கே வழி தெரியாமல் தத்தளித்த கோமதி இன்று, தன் வீட்டைச் சுற்றியுள்ள பல பெண் களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

“என் அப்பா கார்ப்பரேஷன்ல வேலை பார்த்தார். எனக்கு ஒரு அண்ணன் இருக்கார். என் கணவர் கிருஷ்ணமூர்த்தி சன் கன்ட்ரோல் ஃபிலிம்ஸ் பிசினஸ் செஞ்சுகிட்டிருந்தார். ஒவ்வொரு கார் ஷோரூமா போய் பேசி ஆர்டர் எடுத்துட்டுவந்து கார் கண்ணாடி களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொடுக்கிறதுதான் அவரோட வேலை.

துரத்திய துயரங்கள்... துவளாத தன்னம்பிக்கை! -  சோதனைகளை வென்ற கோமதி

பெண் ஒண்ணு, ஆண் ஒண்ணுமா எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க. லைஃப் ரொம்பவே நல்லா போயிட்டிருந்துச்சு. அடுத்து நம்ம வாழ்க்கையை எப்படியெல்லாம் கொண்டுபோகலாம்னு நானும் என் கணவரும் நிறைய பிளான் பண்ணினோம். ஆனா, விதியோ வேற ஒண்ணை எழுதிருச்சு. `கார் கண்ணாடிகள்ல கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது’ன்னு நீதிமன்றம் திடீர் உத்தரவு போட்டது. அவ்வளவுதான்... பிசினஸ் முடங்கி வாழ்க்கை தலைகீழாயிடுச்சு. அடுத்து என்னங்கிற கேள்வி. கணவருக்கு டிரைவிங் தெரியும். லோன்ல ரெண்டு கார் வாங்கி டிராவல்ஸ் வைக்கலாம்னு முடிவெடுத்தார்.

சாஃப்ட்வேர் கம்பெனிக்கு ரெண்டு காரை யும் வாடகைக்கு ஓட்டினார். மாசா மாசம் லோனுக்கான தவணை போக எங்க குடும்பத்தை நடத்துற அளவுக்கு அதுல வருமானம் கிடைச்சதால ஓரளவுக்கு சமாளிச் சோம். டிராவல்ஸ் பிசினஸ் நல்லபடியா போய்கிட்டிருந்துச்சு, கொஞ்சம் கொஞ்சமா பழைய இழப்புலேருந்து மீண்டு வந்துகிட்டிருந்தோம். அதுக்குள்ள அடுத்த அடி...

எங்களுடைய ரெண்டு கார்களும் அடுத் தடுத்து விபத்துல சிக்கினதுல பலத்த நஷ்டம். குடும்ப சூழல் ரொம்ப மோசமாகிருச்சு. கடைசியா என் வீட்டுக்காரர் ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்ட ஆரம்பிச்சார். தினமும் ஆட்டோ வாடகை, குடும்ப செலவுன்னு தினசரி தேவைகளுக்கே அந்த வருமானம் பத்தல. மன அழுத்தத்துக்கு ஆளான என் கணவர் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கு அடிமையானார். ‘எங்க அப்பா குடிச்சதாலதான் எனக்கு இந்த நிலைமை. நான் குடிக்கவே மாட்டேன்'னு அத்தனை வருஷம் உறுதியோட வாழ்ந்த அவரை அந்த நிலைமையில பார்க்கிறப்போ ரொம்ப கொடுமையா இருக்கும்” - கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை கோமதிக்கு.

ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தவர், ``அவரால குடியை நிறுத்த முடியலை. மஞ்சள் காமாலையும் சேர்ந்ததால திடீர்னு ஒருநாள் இறந்துட்டார். ஒன்பதாவது படிக்கிற பொண்ணு, ஆறாவது படிக்கிற பையனோட நான் நிராதரவா நின்னேன். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. அந்தச் சூழல்ல எனக்கு உதவுனது என் வீட்டுக்குப் பக்கத்துல குடியிருந்த அமுதாதான். அவதான் எனக்கு பிளாஸ்டிக் பூ கட்டும் தொழிலை அறிமுகப் படுத்தினாள். அவ ஒரு டெகரேஷன் கம்பெனியில் மொத்தமா ஆர்டர் வாங்கி செஞ்சுகொடுத்துகிட்டிருந்தா. நான் அவளுக்கு கூலிக்கு வேலை பார்க்க ஆரம்பிச்சேன். வாரம் 4,000 ரூபா கிடைக்கும்.

துரத்திய துயரங்கள்... துவளாத தன்னம்பிக்கை! -  சோதனைகளை வென்ற கோமதி

இப்படியே கொஞ்சநாள் போச்சு. `நீ ஆர்டர் எடுக்கிற டெகரேஷன் கம்பெனில எனக்கும் நேரடியா ஆர்டர் எடுத்துக்கொடுத்தா நானும் சொந்தமா செய்வேன்’னு ஒருநாள் ரொம்ப தயங்கிய படிதான் அமுதாகிட்ட கேட்டேன். அமுதா மறுப் பேதும் சொல்லாம, நீ தாராளமா பண்ணுன்னு சொல்லி, அந்த கம்பெனியை அறிமுகப்படுத்தி வெச்சா. அதுமட்டுமில்ல... அந்த கம்பெனியில புதுசா ஆர்டர் எடுத்துப் பண்ண கட்ட வேண்டிய 10,000 ரூபா அட்வான்ஸையும் அவளே கட்டி என்னை நெகிழ வெச்சிட்டா” என்று சொல்லும் கோமதி இன்று 19 பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்.

‘`மகளிர் சுய உதவிக் குழு தொடங்கி அதுல என் வீட்டைச் சுத்தியுள்ள பெண்களை இணைச்சேன். குழுவைச் சேர்ந்தவங்க இப்போ எனக்கு வேலை செஞ்சு கொடுக்கிறாங்க. ஒருநாளைக்கு 500 ரூபா வரை சம்பாதிக்கிறாங்க. பிள்ளைகளும் வளர்ந்துட்டாங்க. பொண்ணு காலேஜ் படிக்கிறா. பையன் ப்ளஸ் ஒன் படிக்கிறான். விசேஷங்களுக்கான ஸ்டேஜ் டெகரேஷன் செய்யலாம்னு முடிவெடுத்து இன்ஸ்டாகிராம் மூலமா கால்பதிச்சுருக்கோம். சீக்கிரமே அதுலயும் ஜெயிச்சிடுவோம்” என்று முடிக்கும் கோமதியின் குரலில் நம்பிக்கை மேலோங்கியிருக்கிறது.

*****

அவங்க உழைப்புதான் காரணம்!

கோமதி குறித்து அமுதா விடம் பேசினோம், “இத்தனை வருஷத்துக்குப் பிறகும் நினைவில் வெச்சு சொல்ற அளவுக்கு கோமதிக்கு நான் பெரிய உதவி செஞ்சுட் டேனான்னு எனக்குத் தெரி யலை. கணவனை இழந்து தனி ஆளாகப் பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்பட்டு கிட்டிருந்த கோமதிக்கு நான் ஒரு வழி காட்டினேன் அவ்வளவுதான். டெபாசிட்டுக் காக நான் கட்டின 10,000 ரூபாயைக் கூட கொஞ்சம் கொஞ்சமா திருப்பிக் கொடுத்துட்டாங்க.

துரத்திய துயரங்கள்... துவளாத தன்னம்பிக்கை! -  சோதனைகளை வென்ற கோமதி

இன்னிக்கு சொல்லிக்கிற அளவுக்கு வளர்ந் திருக்காங்கன்னா அதுக்கு காரணம் அவங்க உழைப்பு மட்டும்தான். நான் அவங்ககிட்ட பேசி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகுது. ஒரு சின்ன வருத்தத்தால பேசுறதில்லை. ஆனாலும், அவங்க என்ன பண்றாங்க, எப்படி இருக்காங்கன்னு விசாரிப்பேன். வருத் தத்தையெல்லாம் மனசுல வெச்சுக்காம என்னைப் பத்தி சொல்லியிருக்காங்கன்றதைக் கேட்கிறப்போ எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு” என்றார் நெகிழ்வாக.