Published:Updated:

ஆறாம் வகுப்பில் ஆரம்பமான ஐ.பி.எஸ் ஆசை! - மகாராஷ்டிராவைக் கலக்கும் திருநெல்வேலி தமிழச்சி

ராகசுதா
பிரீமியம் ஸ்டோரி
ராகசுதா

2015-ம் ஆண்டு பயிற்சி முடிந்து மகாராஷ் டிராவில் பணியில் சேர்ந்தேன். மிகவும் பதற்றம் மிகுந்த மன்மாட் பகுதியில் கூடுதல் எஸ்.பியாக நியமிக்கப்பட்டேன்.

ஆறாம் வகுப்பில் ஆரம்பமான ஐ.பி.எஸ் ஆசை! - மகாராஷ்டிராவைக் கலக்கும் திருநெல்வேலி தமிழச்சி

2015-ம் ஆண்டு பயிற்சி முடிந்து மகாராஷ் டிராவில் பணியில் சேர்ந்தேன். மிகவும் பதற்றம் மிகுந்த மன்மாட் பகுதியில் கூடுதல் எஸ்.பியாக நியமிக்கப்பட்டேன்.

Published:Updated:
ராகசுதா
பிரீமியம் ஸ்டோரி
ராகசுதா

பெண்கள் இப்போது ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். என்றாலும், ராணுவம், ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறை வாகவே இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ராகசுதா, மகாராஷ்டிரா மாநில ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டராக இருந்து அப்படையை வழிநடத்தி வருகிறார். ``மகாராஷ்டிரா ரிசர்வ் போலீஸ் படையில் உள்ள ஒரே பெண் ஐ.பி.எஸ் அதிகாரி நான் தான்’’ என்று சிரிக்கிறார் இந்த திருநெல்வேலி தமிழச்சி. அவரை அவள் விகடனுக்காக சந்தித்தோம்.

``ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை, ஆறாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்டது. என் பள்ளி விழாவுக்கு, அப்போது துணை கலெக்டராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ் வந்திருந்தார். என் அப்பா மூலம் அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத் தது. அந்த மாணவப் பருவத்தில் யுபிஎஸ்சி தேர்வு பற்றியும், அந்தப் பணிகள் பற்றியும் அவர் சொன்ன தகவல்களும், ஊட்டிய தன்னம்பிக்கையும் அந்த இலக்கை நோக்கி என்னை தீர்க்கத்துடன் பயணிக்க வைத்தது. என் அப்பாவும் தட்டிக்கொடுத்தார்.

ஆறாம் வகுப்பில் ஆரம்பமான ஐ.பி.எஸ் ஆசை! - மகாராஷ்டிராவைக் கலக்கும் திருநெல்வேலி தமிழச்சி

ப்ளஸ் டூ தேர்வில் 90 சதவிகிதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்தும், மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்காமல், யுபிஎஸ்சி தேர்வுக்கு உதவும் என்று ஆலோசனை வழங்கப்பட்ட பி.எஸ்சி அக்ரி படிப்பைத் தேர்ந்தெடுத்து கோவையில் படித்தேன். டிகிரி முடித்த பிறகு டெல்லியில் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்புக்குச் சென்றேன். என்னுடைய மூன்றாவது முயற்சியில், 2014-ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்றேன்’’ என்றவர், தன் பணி பற்றி தொடர்ந்தார்.

``2015-ம் ஆண்டு பயிற்சி முடிந்து மகாராஷ் டிராவில் பணியில் சேர்ந்தேன். மிகவும் பதற்றம் மிகுந்த மன்மாட் பகுதியில் கூடுதல் எஸ்.பியாக நியமிக்கப்பட்டேன். அந்நேரத்தில் நெடுஞ்சாலைக் கொள்ளைகளும், எண்ணெய் திருட்டுகளும் அதிகமாக இருந்தன. நான் இரவு, பகல் பாராது அதிரடி ரெய்டு நடத்தி இக்குற்றங்களைக் கட்டுப்படுத்தினேன். மேலும், மத ரீதியிலான பதற்றம் மிகுந்த மாலேகாவ் பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடாத வகையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினேன்.

ஆறாம் வகுப்பில் ஆரம்பமான ஐ.பி.எஸ் ஆசை! - மகாராஷ்டிராவைக் கலக்கும் திருநெல்வேலி தமிழச்சி

2020-ல் பர்பனி என்ற நகரத்துக்கு கொரோனா பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். அப்போது நான் கர்ப்பிணி. ஆனாலும், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் கிடைக்க களத்தில் இறங்கிப் பணியாற்றினேன். என் கணவர், தனியார் விமான பைலட். என் பிரசவத்தன்று கூட என்னுடன் இருக்க முடியாத சூழல். அன்றுதான், அன்றைய தமிழக முதல்வரை சென்னையில் இருந்து சேலத்துக்கு அழைத்துச் செல்லவேண்டிய பணி அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே, போனில்தான் குழந்தை பிறந்த செய்தியை அவருக்குத் தெரிவிக்க முடிந்தது. இப்படி, நாங்கள் இருவரும் ஒருவரின் பணி இயல்பை மற்றவர் புரிந்துகொண்டிருப்பதால் ஹோம் ஸ்வீட் ஹோம் ஆக உள்ளது’’ என்பவர், தற்போது கையாண்டு வரும் சவாலான ரிசர்வ் போலீஸ் கமாண்டர் பொறுப்பு பற்றி பகிர்ந்தார்.

ஆறாம் வகுப்பில் ஆரம்பமான ஐ.பி.எஸ் ஆசை! - மகாராஷ்டிராவைக் கலக்கும் திருநெல்வேலி தமிழச்சி

``மகாராஷ்டிரா, ஜல்னா நகரில் ரிசர்வ் போலீஸ் படை கமாண்டராக 2020-ம் ஆண்டு நான் சேர்ந்தேன். ரிஸ்க் காரணமாக பொதுவாக ரிசர்வ் போலீஸ் பிரிவில் பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ரிசர்வ் போலீஸார் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும், எங்கு, எந்த அசம்பாவிதம் நடந்தாலும் உடனே முதல் ஆளாக அங்கு நிற்க வேண்டும். இப்போது என் தலைமையில் ஆயிரம் ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் இருக்கிறார்கள். மகாராஷ்டிரா ரிசர்வ் போலீஸ் படையின் ஒரே பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருக்கும் நான், முழுக்க ஆண்களைக் கொண்ட இப்படையை தலைமை ஏற்று நடத்துவது சுவாரஸ்யமாக உள்ளது. இன்னொரு பக்கம், வீட்டில் என் ஒரு வயதுக் குழந்தையின் குறும்பைத்தான் சமாளிக்க முடியவில்லை. என் கணவர் வேறு ஒரு நகரில் வேலை பார்க்கிறார். கைக்குழந்தையை வைத்துக்கொண்டு காவல்துறை பணியில் விரைந்து கொண்டிருக் கிறேன். சில நேரங்களில் அதி காலை 4, 5 மணிக்கே புறப்பட்டு செல்ல வேண்டும். தன் ஐ.பி.எஸ் அம்மாவை என் குழந்தை பழகிக்கொண்டுவிட்டது’’ என்று சிரிப்பவர், யுபிஎஸ்சி தேர்வை லட்சியமாகக் கொண் டுள்ள இளைஞர்களுக்கு சில வார்த்தைகள் பகிர்ந்தார்.

``இந்தத் தேர்வுக்கான தயாரிப்புக் காலம், ஒரு தவம். இத்தேர்வில் வானத்துக்குக் கீழ் இருக்கும் அனைத்தைப் பற்றியும் கேள்வி கேட்பார்கள். தயாராக இருக்க வேண்டும். தேர்வில் தோல்வியடைந்தாலும் தொடர் முயற்சியே முக்கியம். குறிப்பாக, திருமணம், குழந்தை, குடும்பம் என மற்ற பொறுப்புகளுக்காக பெண்கள் தங்கள் லட்சியங்களை தவறவிட்டுவிடக் கூடாது!’’