Published:Updated:

“14 வீல் லாரி வரை பஞ்சர் ஒட்டுவேன்!” - அசாதாரண பெண் கண்மணி

கண்மணி
பிரீமியம் ஸ்டோரி
கண்மணி

முன்னமாதிரி இல்ல தொழில். டியூப்லெஸ் டயர் வந்தபிறகு பஞ்சர் தொழில் பஞ்சராயிட்டு. ஆனாலும், வெல்டிங் வேலை, பவுடர் போடு றதுனு தாக்குப்புடுச்சு ஓட்டுறேன்

“14 வீல் லாரி வரை பஞ்சர் ஒட்டுவேன்!” - அசாதாரண பெண் கண்மணி

முன்னமாதிரி இல்ல தொழில். டியூப்லெஸ் டயர் வந்தபிறகு பஞ்சர் தொழில் பஞ்சராயிட்டு. ஆனாலும், வெல்டிங் வேலை, பவுடர் போடு றதுனு தாக்குப்புடுச்சு ஓட்டுறேன்

Published:Updated:
கண்மணி
பிரீமியம் ஸ்டோரி
கண்மணி

“வருமானம் பத்தலைன்னுதான் கணவருக்கு ஒத்தாசை பண்ண பஞ்சர் கடை தொழிலுக்கு வந்தேன். ‘பொம்பளை புள்ளைக்கு இதெல் லாம் சரிப்படுமா?’னு பலரும் திட்டினாங்க. நடுவுல என் கண வருக்கு கால்ல அடிபட, பத்து வருஷமா தனிமனுஷியா இதை நடத்திட்டு இருக்கேன். ஜாக்கி வச்சு டயரை கழட்டுறது, பஞ்சர் ஒட்டுறது, டயரை மறுபடியும் மாட்டுறது, வெல்டிங் அடிக்கிறதுனு எல்லாம் நான்தான். ஆம்பளைங்களுக்கே உடம்புக்கு ரொம்ப கஷ்டமான வேலையா இருந்தாலும், பொம்பள செய்ய முடியாதுனு எதுவும் இல்லை யில..?’’ - முன்கதை சுருக்கம் சொல்லி ஆரம்பிக்கிறார் கண்மணி.

நாமக்கல்லில் இருந்து சேலம் பயணிக்கும் பலருக்கும் கண்மணி அக்காவை தெரியாம லிருக்க வாய்ப்பில்லை. சேலம் பைபாஸில் உள்ள புதன்சந்தை பகுதியில் கனரக வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும், வெல்டிங் அடிக்கும் வொர்க்‌ஷாப்பை நடத்தி வருகிறார். நாம் சென்றபோது, சடுதியில் லாரிக்கு ஒரு டயர் பஞ்சர் பார்த்துவிட்டு வந்தார்.

“என் வீட்டுக்காரர் வெங்கடாசலம் எனக்குக் கத்துக்கொடுத்த தொழில் இது. அவருக்குச் சொந்த ஊரு, சேலம் மாவட்டம் கொழுஞ்சிப்பட்டி. அங்க பஞ்சர் கடையும், வெல்டிங் கடையும் வெச்சிருந்தார். 29 வரு ஷத்துக்கு முன் னாடி எங்களுக்குக் கல்யாண மானப்போ பொழைக்க இங்க வந்து பஞ்சர் கடை போட்டோம். ரெண்டு பொண்ணு, ஒரு ஆண்னு எங்களுக்கு மூணு பிள்ளைங்க. அதுங்க வளர ஆரம்பிச்சப்போ எங்க வருமானம் போதலை. கடையில ஒத்தா சைக்கு ஆள் இல்லாம வீட்டுக்காரரும் அல்லாடினார். அதனால, 24 வருஷத்துக்கு முன்னாடி நானும் கடைக்குப் போக ஆரம்பிச்சேன். ஸ்பானர்கள் உள்ளிட்ட சாமான்களை எடுத்துக் கொடுக்குறது, ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க கடைகளுக்குப் போறதுனு சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்தேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு, ‘நீயும் இந்த வேலையை பழகிக்க’னு சொல்லிக் கொடுத்தார் வீட்டுக்காரர்.

கண்மணி
கண்மணி

டூவீலர்களுக்கு பஞ்சர் போடுவது, வெல்டிங் அடிப்பதுனு முதல்ல கத்துக்கிட்டேன். பிறகு, லாரி, ஜே.சி.பி, டிராக்டர் போன்ற கனரக வாகனங்கள்ல உள்ள பெரிய சைஸ் டயர்களை கழட்டி பஞ்சர் போட கத்துக்கிட்டேன். என் வீட்டுக்காரரே தினமும் வீட்டுக்கு வந்ததும், வேலை தந்த உடம்பு வலியால முனகுவார். எனக்கு அதுக்கு மேல உடம்பெல்லாம் வலிக்கும். ஆனாலும் தனியா கஷ்டப்படும் அவருக்கு உதவுவதோடு, வருமானத்தையும் கொஞ்சம் கூட்ட முடியுமேங்கிறதால உடம் பெல்லாம் வலிக்க வலிக்கத்தான் தொழிலை முழுசா, நுணுக்கமா கத்துக்கிட்டேன். ரெண்டு பேரும் கடினமா உழைச்சதால, நல்லா வருமானம் வந்துச்சு. பத்து வருஷத்துக்கு முன்னாடி சொந்தமா 14 லட்சம் ரூபாய்க்கு இடம் வாங்கி, 10 லட்சம் வரை செலவழிச்சு சொந்த வீடு கட்டினோம்’’ என்று அந்த நினைவுகளை சந்தோஷத்துடன் சொன்னவர், அடுத்து சொன்னது ஓர் எதிர்பாராத விபத்து பற்றி.

``வாழ்க்கை ஓரளவு மகிழ்ச்சியா போய்கிட்டு இருந்துச்சு. லாரிக்கு கீழ ஜாக்கி வைத்து டயரை கழட்ட முயற்சி செஞ்சப்ப, சிலிப்பாகி என் கணவரோட இடது கால்ல ஜாக்கி குத்தி சதை பிய்ஞ்சு, மூட்டுல சரியான அடி. அதுல இருந்து அவரால இந்தத் தொழில் செய்ய முடியல. இனி எப்படி காலம் தள்ளப் போறோம்னு நான் மலைச்சு நின்னப்போ, `நான் இல்லைன்னா என்ன, உன்னால முடியும் கண்மணி’னு என் கணவர், எனக்கு நம்பிக்கை கொடுத்தார். தனியாளா தொழி லைப் பார்க்க ஆரம்பிச்சப்போ கஷ்டமா இருந்துச்சு.

“14 வீல் லாரி வரை பஞ்சர் ஒட்டுவேன்!” - அசாதாரண பெண் கண்மணி
“14 வீல் லாரி வரை பஞ்சர் ஒட்டுவேன்!” - அசாதாரண பெண் கண்மணி

டூவீலர் தொடங்கி, 10, 12, 14 டயர்கள் வரை உள்ள லாரிகள் வரை டயர்களை கழட்டி பஞ்சர் ஒட்டி, மாட்டுவேன். மத்த மாநிலங் களுக்கு போகும் 14 டயர் கொண்ட லாரிக்கு பவுடர் போட வரு வாங்க. எல்லா வீல்களையும் கழட்டி, டயரை கழட்டி, அதுக்குள்ள பவுடரை தடவி, ஆங்கில்ல மாட்டி, 14 டயர்களையும் இப்படியே பண்ணி, லாரியில் மாட்டணும். ஒரு டயரை கழட்டி மாட்டவே பெண்டு நிமித்திடும். 14 டயர்களையும் கழட்டி மாட்டுறதுக்குள்ள உயிர் போய் உயிர் வரும். ராத்திரி முழுக்க தூங்க முடியாது. முதுகுத் தண்டு, கால் கைனு கடுமையா வலியெடுக்கும். ஒரு பக்கமா சாய்ஞ்சு படுக்க முடியாது. கையெல்லாம் காய்ச்சுப் போயிரும். 14 டயர் கொண்ட லாரியில் 60 டன் வரை எடை ஏத்திட்டு வருவாங்க. அதுக்கு கீழதான் போய் ஜாக்கியை ஏத்தி வச்சுட்டு வந்து டயரைக் கழட்டணும். அப்ப, ஜாக்கி சறுக்கினாலும், தவழ்ந்து உயிரை கையில் பிடிச்சுக்கிட்டு போய்தான் ஜாக்கியை டைட் பண்ணி, லாரியை தூக்கணும். கொஞ்சம் சாஞ்சாலும் என் உடம்பு கூழாயிடும். குடும்பத்தை கரை சேர்க்கணுமேனு கஷ்டத்தை மென்னுக்கிட்டு தொழிலை தொடர்ந்தேன்’’ என்றபோது அந்தக் காட்சிகள் கண்முன் வந்து சிலிர்க்க வைத்தது.

``மத்த பட்டறைகள் எல்லாம் ஞாயித்துக் கிழமை லீவு விடுவாங்க. அன்னிக்கு கூடுதல் வருமானம் கிடைக்குமேனு நான் கடையை திறந்து வெச்சுருப்பேன். எலெக்ட்ரிக் வெல்டிங், கேஸ் வெல்டிங் வேலையும் செய்வேன். கேஸ் வெல்டிங் செய்யும்போது சிலிண்டர் வெடிச்சு, ஃபயர் ஆகவும் வாய்ப்பிருக்கு. அதேபோல் டூவீலர், லாரிகளோட டீசல், பெட்ரோல் டேங்குகளை வெல்டிங் அடிக்க எடுத்துட்டு வருவாங்க. அதுக்குள்ள இருக்கும் பெட் ரோலையோ, டீசலையோ முழுமையா வாஷ் பண்ணலைனா, வெல்டிங் செய்யும்போது ஃபயர் ஆக வாய்ப்பிருக்கு. ஒண்ணு, ரெண்டு தடவை அப்படி நடந்திருக்கு. சூதானமா இருந்ததால, லேசான காயத்தோட தப்பிக்க முடிஞ்சது. அதேபோல், கன்டெய்னர் மாதிரி யான வாகனங்கள்ல ஏறி வெல்டிங் அடிக்கும் போது ட்ரிப் ஆகிடுச்சுனா எர்த் அடிக்கும். அப்பவும் நேக்கா தப்பிக்கணும்’’ என்பவர் வீட்டில் கால்நடைகளையும் பராமரிக்கிறார்.

“14 வீல் லாரி வரை பஞ்சர் ஒட்டுவேன்!” - அசாதாரண பெண் கண்மணி
“14 வீல் லாரி வரை பஞ்சர் ஒட்டுவேன்!” - அசாதாரண பெண் கண்மணி

``என் மூத்த மகள் பிரேமாவை மூணு டிகிரி படிக்க வச்சு, நல்ல இடத்துல திருமணம் முடிச்சிருக்கோம். ரெண்டாவது மகள் ஹேம லதா பொறியியல் படிச்சிருக்கா. பையன் ஸ்ரீதரன் டிப்ளமோ ஆட்டோமொபைல் கோர்ஸ் முடிச்சுட்டு ரெண்டு வருஷமா எனக்கு ஒத்தாசையா இருக்கான்.

‘பொட்டச்சியால இதெல்லாம் முடி யுமா?’னு முன்ன கேலி பேசுனவங்க எல்லாம், ‘ஏ ஆத்தா, உன்னபோல எங்களால முடியாது தாயி. நீ ஒரு தனிப்பிறப்பு’னு பாராட்டுறாங்க. பல பெண்கள், ‘உங்களைப் பார்த்தா எங்க கஷ்டமெல்லாம் பஞ்சா பறந்துபோயிருது’னு சொல்லும்போதே ஏதோ சாதிச்சதுபோல உடல் புல்லரிச்சுப் போவும்’’ என்றவர்,

``முன்னமாதிரி இல்ல தொழில். டியூப்லெஸ் டயர் வந்தபிறகு பஞ்சர் தொழில் பஞ்சராயிட்டு. ஆனாலும், வெல்டிங் வேலை, பவுடர் போடு றதுனு தாக்குப்புடுச்சு ஓட்டுறேன். தெம்பு இருக்கிற வரைக்கும் ஓடுவோம்’’ என்று சொல் லும் கண்மணி, டயரை மட்டுமல்ல, வாழ்வின் துயரங்களையும் சேர்த்தே கழட்டி, பஞ்சர் ஒட்டி மாட்டி ஓட்டுகிறார் ஜோராக!