Published:Updated:

``உங்க நேரம் உங்க கையில தான் இருக்கு!”

மதுரை ஜெயா
பிரீமியம் ஸ்டோரி
மதுரை ஜெயா

மல்டி டாஸ்க்கிங்கில் அசத்தும் மதுரை ஜெயா

``உங்க நேரம் உங்க கையில தான் இருக்கு!”

மல்டி டாஸ்க்கிங்கில் அசத்தும் மதுரை ஜெயா

Published:Updated:
மதுரை ஜெயா
பிரீமியம் ஸ்டோரி
மதுரை ஜெயா

வாய்ப்புகள் எல்லோரது முன்னும் வைக்கப்பட்டே உள்ளன. அதை கண்டுணர்ந்து பயன்படுத்திக்கொள்ள, ஆர்வமும் முயற்சியும் தேவை. மதுரையைச் சேர்ந்த ஜெயா, ஒரு டெய்லராக தன் கரியரை ஆரம்பித்து, பியூட்டிஷியன், எல்.ஐ.சி, அஞ்சலக முகவர், அக்குபஞ்சர் நிபுணர் என தன் எல்லைகளை விரித்துக்கொண்டே சென்றிருக்கிறார். `எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம்தாங்க...’ என்று அடிக்கோடிட்டு சொல்லும்போது சிரிப்பும் சேர்ந்துகொள்கிற்து ஜெயாவுக்கு.

‘`ஸ்கூல் படிச்சப்போ டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். மார்க் குறைஞ்சுட்டதால பி.எஸ்சி விலங்கியல் படிச்சேன். முடிச்சதும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. கல் யாணத்துக்கு அப்புறம், ‘எனக்கு கட்டில், சேர் பின்னத் தெரியும். அதை செய்யவா?’னு என் கணவர்கிட்ட கேட்டேன். `இப்போதைக்கு ஏதாச்சும் ஒரு கோர்ஸ்ல உன்னை நான் படிக்க வைக்கிறேன். அதுக்கு அப்புறம் நீயே மற்றதை முடிவு செய்துக்க’னு சொன்னாரு. இந்தளவுக்கு நமக்கு தன்னம்பிக்கையும் உத்வேகமும் கொடுக்கிற கணவர் இருக்கும்போது, வேற என்ன வேணும்’’ எனும்போது நன்றியும் பெருமையும் ஜெயாவிடம்.

‘`2000-ல டெய்லரிங் க்ளாஸ் போனேன். 2001-ல கையில ஒரு குழந்தை, வயித்துல ஒரு குழந்தையோட படிச்சேன். என் அப்பா, இப்போ இதெல்லாம் தேவையானு கேட்டாரு. ஆமா தேவைதான்னு சொல்லிட்டு, ரெண்டு வருஷத்துல டெய்லரிங் ஹையர் பாஸ் பண்ணி கவர்ன்மென்ட் சர்டிஃபிகேட் வாங் கினேன். டெய்லரிங் இன்ஸ்டிட்யூட் வச்சேன். அதோட சேர்ந்து வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ, பியூட்டிஷியன் கோர்ஸ், எம்ப்ராய்டரி கோர்ஸ்களை முடிச்சு கவர்ன் மென்ட் சர்டிஃபிகேட் வாங்கிட்டேன். டெய்லரிங், பியூட்டி பார்லர், எம்ப்ராய்டரி வேலைகள்னு எல்லாமே நல்லா போச்சு.

``உங்க நேரம் உங்க கையில தான்	இருக்கு!”

நாலு வருஷத்துக்கு அப்புறம், இது போதும்னு இருந்துடாம வேற என்ன பண்ண லாம்னு யோசிச்சேன். என் கணவர் சொல்லி, எல்.ஐ.சி முகவர் தேர்வு எழுதினேன் சைக்கிள் எடுத்துட்டு கிளையன்ட்ஸ் பார்க்கக் கிளம்பி னேன். 17 வருஷமாகுது... அது எனக்கு நல்லா ரன் ஆகுது. சிறந்த பங்களிப்புக்காக எல்.ஐ.சியில நிறைய அவார்ட்ஸ் எல்லாம் கொடுத்தாங்க. இப்போ என்கிட்ட 350 கிளையன்ட்ஸ் இருக் காங்க’’ என்று ஏணிகளைச் சொன்னவர், மருத்துவர் ஜெயா ஆனது பற்றி தொடர்ந்தார்.

``மருத்துவர் ஜெயக்குமார்கிட்ட எங்க குடும்பம் அக்குபஞ்சர் மருத்துவம் பாப்போம். அவர் ஒருமுறை, `நீங்க அக்குபஞ்சர் மருத்துவம் படிக்கலாமே’னு சொன்னார். 2009-ல டிப் ளோமா இன் அக்குபஞ்சர் படிச்சேன். அப்போ நாலாவது பையன் வயித்துல இருந் தான். 2010-ல அக்குபஞ்சர்ல எம்.டி படிச்சேன், அப்போ எனக்கு வயசு 36. படிப்பை முடிச்சதும், என்னோட `ஜெயம் மருத்துவமனை’யை ஆரம்பிச்சேன். நிறைய வேலைகள் பார்த்த தால, உடம்பையும் மனசையும் ரிலாக்ஸ் பண்ண யோகா பண்ண ஆரம்பிச்சு, அப்படியே அதுலயும் டிப்ளோமா படிச்சேன். அப்புறம் எம்.எஸ்சி யோகா முடிச்சேன்.

இதுக்கு இடையில், அஞ்சலக துறை முகவர் தேர்விலும் தேர்ச்சி பெற்று, அந்த வேலை களையும் பார்க்குறேன். கவர்ன்மென்ட்ல இருந்து ஆர்டர் எடுத்து ஸ்கூல் யூனிஃபார்ம் தைக்கிறேன். 12 பேர் சேர்ந்து மகளிர் குழு ஆரம்பிச்சு, அந்த லோன் தொகையையும் ஆக்கபூர்வமா பயன்படுத்துறேன்’’ என் பவருக்கு மூன்று பெண்கள், ஓர் ஆண் என நான்கு பிள்ளைகள். இப்போது 48 வயதாகும் ஜெயா, தன் தினசரி பற்றி தொடர்ந்தார்.

``நிறைய வேலைகள்தான். ஆனாலும் நேரம் இல்லைனு சொல்லமாட்டேன். தினமும் காலை 5 மணிக்கு எழுந்துப்பேன். கோலம் போட்டுட்டு, 6.30 மணி வரை யோகா. 7 மணி வரை தியானம். 7.15-ல இருந்து 9 மணிக்குள்ள சமையல், வீட்டு வேலைகளை முடிச்சிடுவேன். பிள்ளைகளை ஸ்கூல், காலேஜ் அனுப்பிட்டு 10 மணி வரை துணி கட்டிங் வொர்க் பண்ணு வேன். 1 மணி வரை கிளையன்ட்ஸ்கிட்ட ஃபாலோ பண்ணுவேன். 2 மணிக்கு, டெய்லரிங் வகுப்பு எடுத்துட்டே தைப்பேன். 4 மணிக் குள்ள எல்.ஐ.சி ஆபீஸ் போயிட்டு வந்துடு வேன். 5 - 6 மணி வரை பிள்ளைகளை கவனிப் பேன். 7.30 மணி வரை போஸ்ட் ஆபீஸ்ல ஆர்.டி போட்ட கிளையன்ட்ஸ்கிட்ட பணம் வசூலிக்கிற வேலையில இருப்பேன். 7.30 - 9 வரை க்ளினிக்ல பேஷன்ட்ஸை அட்டண்டு பண்ணுவேன். திங்கள், வியாழக்கிழமைகள்ல மட்டும் யோகா வகுப்புகளும் எடுத்துட்டு இருக்கேன். இப்போ என் மகள்கள் வளர்ந் துட்டதால, பியூட்டி பார்லர் வேலைகளை அவங்க பார்த்துக்கிறாங்க’’ என்று அவர் சொல்லிமுடித்தபோது நாம் பெருமூச்சு விட்டோம்.

மதுரை ஜெயா
மதுரை ஜெயா

‘`டி.வி பாக்க மாட்டேன். சில பேராசிரியர் களோட ஸ்பீச் கேப்பேன், அதை ஃபாலோ பண்ணுவேன். நான் இத்தனை வேலைகள் பண்ணுறதுல, என் கணவர், மாமியார், பிள்ளைகள்னு எல்லாரோட சப்போர்ட்டும் ரொம்ப முக்கியமானது. `எப்டி இத்தனை யையும் பண்றீங்க?’னு என்கிட்ட ஆச்சர்யமா கேக்குறவங்களுக்கு எல்லாம் என்னோட பதில்... ஒரு நாள்ல நிறைய நேரம் இருக்கு. அதை எதுக்கு, எப்படி பயன்படுத்து றோம்ங்கிற கன்ட்ரோல் நம்மகிட்டதான் இருக்கு”

- பிரமிப்பு விலகாமலேயே விடைபெற்றோம்!