Published:Updated:

மும்பை குடிசை டு மைக்ரோசாஃப்ட்... வைரலான சஹீனாவின் வைராக்கிய கதை!

சஹீனா
பிரீமியம் ஸ்டோரி
சஹீனா

கம்ப்யூட்டர் தொடர்பான சில ஸ்டார்ட்அப் கம்பெனிகளில் வேலைபார்த்ததோடு, சொந்த மாகவும் டிசைன் கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தினேன்.

மும்பை குடிசை டு மைக்ரோசாஃப்ட்... வைரலான சஹீனாவின் வைராக்கிய கதை!

கம்ப்யூட்டர் தொடர்பான சில ஸ்டார்ட்அப் கம்பெனிகளில் வேலைபார்த்ததோடு, சொந்த மாகவும் டிசைன் கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தினேன்.

Published:Updated:
சஹீனா
பிரீமியம் ஸ்டோரி
சஹீனா

சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த சஹீனா அத்தர்வாலா பகிர்ந்த ட்வீட், இந்திய அளவில் வைரல் ஆனது. மும்பை குடிசைப் பகுதியில் வளர்ந்து, இன்று மைக்ரோ சாஃப்ட்டில் டிசைன் லீடர் ஆகியிருக்கும் தன் கதையைத்தான் அந்த ட்வீட்டில் சொல்லியிருந்தார் சஹீனா.

நெட்ஃபிலிக்ஸ் சீரிஸ் ஒன்றில் ஒரு காட்சி யாக இடம்பெற்ற மும்பை ஸ்லம் புகைப் படத்தை பகிர்ந்த சஹீனா, ‘இந்தப் பகுதியில் தான் நான் வளர்ந்தேன். இந்தக் குடிசைகளில் ஒன்றுதான் எங்களுடையது. இப்போதிருக்கும் பொதுக் கழிவறை வசதிகூட அப்போது இல்லை. கடுமையான வாழ்க்கைப் போராட் டம், பாலினப் பாகுபாடு, பாலியல் வன்முறை களுக்கு இடையில் வளர்ந்தாலும், அந்தப் போராட்டங்களையே எரிபொருள் ஆக்கி நல்ல வாழ்க்கையை நோக்கி ஓடினேன்.

 ஹைதராபாத்தில் நடந்த இளம் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கருத்தரங்கில்...
ஹைதராபாத்தில் நடந்த இளம் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கருத்தரங்கில்...

2021-ல் என் குடும்பம் அப்பார்ட்மென்ட்டுக்கு நகர்ந்தது. ஜன்னல் வழியே வானம், வெளிச்சம், காற்று, பச்சை, பறவைகள்... தெருவில் படுத்துறங்கி, தெருவில் பொருள்கள் விற்றவர் என் அப்பா. அந்தப் புள்ளியில் இருந்து இப்போது இங்கு வந்து சேர்ந்திருக்கும் வாழ்க்கை, கடின உழைப்பு மற்றும் வாழ்வின் போர்களை நாம் தேர்ந்தெடுத்து எதிர் கொள் வதற்கான பரிசு’ என்று குறிப்பிட்டிருக்க, இந்தியாவே சஹீனாவைக் கொண்டாடியது.

தற்போது ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் சஹீனா அத்தர்வாலாவை தொடர்பு கொண்டு பேசினோம். ‘`உத்தரப்பிரதேசத்தில் ஏழைக் குடும்பம் எங்களுடையது. பிழைப்புக்காக மும்பை வந்து பாந்த்ரா ரயில் நிலையத்தை யொட்டிய குடிசைப்பகுதியில் வசித்தோம். சமையல் செய்ய, வீட்டு வேலைகளைப் பார்க்க என்றுதான் வளர்ந்தேன். இஸ்லாமிய சமூகத்தில் பெரும்பாலானவர்களைப்போல, நான் வயதுக்கு வந்ததும் என்னை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் முயன்றனர். ‘வேண்டாம், நான் படிக்கிறேன்’ என்று சொல்லி அவர்களிடம் சம்மதம் வாங்குவது மிகக் கடினமாக இருந்தது.

எங்கள் குடிசைப் பகுதிகளில் இருந்த பெண்கள், நாங்கள் விரும்பவதை செய்ய முடியாதவர்களாகவும், உதவியற்றவர்களாக வும், பாலியல் துன்புறுத்தல் களுக்கு ஆளாகுபவர்களாகவும் இருந் தோம். அதிலிருந்து நான் விடு பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். மேலும் ஆணாதிக்கம், வறுமைக்கு இட மில்லாத வாழ்க்கையை என தாக்கிக்கொள்ள பேராசைப் பட்டேன்.

 பிர்லா நிறுவனம் சார்பாக வழங்கப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது...
பிர்லா நிறுவனம் சார்பாக வழங்கப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது...

‘நம் கிராமத்தில் பெண்கள் பள்ளிக் கெல்லாம் போகமாட்டார்கள்’ என்றார் அப்பா. எந்தவித அடையாளமும் இல்லாமல், இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட அவர்களைப்போல நானும் இருக்க விரும்பவில்லை என்பதை, என் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அப்பாவுக்குப் புரியவைத்தேன்’’ என்பவருக்கு கணினியில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

‘`பள்ளியில்தான் முதன்முதலில் கம்ப்யூட் டரை பார்த்தேன். கணினி படித்தால் நிகழ் கால இருட்டில் இருந்து மீளலாம் என்று நம்பினேன். ஆனால், பள்ளியில் கணினிப் பிரிவு கிடைக்கவில்லை. அப்பாவிடம் மீண்டும் போராடி, கடன் வாங்கி பிரைவேட் கம்ப்யூட்டர் க்ளாஸில் என்னை சேர்த்துவிடச் சொன்னேன். கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என்பதே அப்போது என் ஒரே இலக்காக இருந்தது. அப்பா கொடுக்கும் காசை சேர்த்து வைத்தேன். கல்லூரிக்கு பஸ்ஸில் செல்லாமல் நடந்தே சென்று அந்தப் பணத்தை சேமித்தேன். சில நேரங்களில் மதியம் சாப்பிடுவதற்காகக் கொடுக்கும் பணத்தையும் உண்டியலில் போட்டுவிட்டுப் பட்டினியாக இருப்பேன். சின்னச் சின்ன வேலைகள் பார்த்தும் காசு சேர்த்தேன். ஒருவழியாக கம்ப்யூட்டர் வாங்கியேவிட்டேன். குடிசைப் பகுதியில் கம்ப்யூட்டர் திரை ஒளிர, அதில் என்னவெல் லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அவற்றை யெல்லாம் செய்தேன்.

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு வேலைக்காக 2015-ம் ஆண்டு அந்தக் குடிசையை விட்டு காலி செய்து சொந்தக்காலில் நிற்க வெளியுலகத்துக்கு வந்தபோது, என் கஷ்டங்கள் எல்லாம் முடிந்தது என்று நினைத்தேன். ஆனால், வேலையிடத்தில் குடிசைப் பகுதியிலிருந்து வந்தவளாகவே என்னை பாரபட்சத்துடன் பார்த்தனர். அவற்றையும் கடந்தேன்’’ என்பவர், இப்போது தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் உரையாற்றி வருகிறார். சர்வதேச இதழ்களில் கட்டுரைகள் எழுதுகிறார். 2019-ம் ஆண்டு செய்தி நிறுவனம் ஒன்று சஹீனாவுக்கு விருது கொடுத்து கவுரவித்திருக்கிறது. மைக்ரோ சாஃப்டில் சேர்ந்தது பற்றி தொடர்ந்தார் சஹீனா.

மும்பை குடிசை டு மைக்ரோசாஃப்ட்... வைரலான சஹீனாவின் வைராக்கிய கதை!

‘`கம்ப்யூட்டர் தொடர்பான சில ஸ்டார்ட்அப் கம்பெனிகளில் வேலைபார்த்ததோடு, சொந்த மாகவும் டிசைன் கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தினேன். அதோடு சில கம்பெனிகளோடு சேர்ந்தும் வேலைசெய்தேன். அவை என் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தன. 2020-ல் எனக்கு மைக்ரோ சாஃப்டில் இருந்து அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வில் டிசைனராக பணி வழங்கப்பட்டேன். இன்று நான் டிசைனிங் பிரிவுத் தலைவராக உயர்ந்திருக்கிறேன். இன்றைக்கு பிரபல யு.எக்ஸ் வடிவமைப்பாளர்களில் (User Experience Designer) நானும் ஒருவர்.

எப்போதும் ஒரு பெண் முன்னேறும்போது, அவளுக்குப் பின் வருபவர்களுக்கும் சேர்த்தே பாதை அமைத்துத் தருகிறாள். எனது கிராமம் மற்றும் நான் வளர்ந்த மும்பை குடிசைப் பகுதியில் வசிக்கும் பெண் குழந்தை களின் அம்மாக்கள் எனக்கு போன் செய்து, ‘என் மகளையும் படிக்க வைக்க வேண்டும், அவள் உன்னைப் போல் வர வேண்டும், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கும்போது அவர்களுக்கு வழியாட்டியாக இருக்கும் என் கடமையை அழுத்த மாக உணர்கிறேன். அந்தச் சிறுமிகளுக்கு சுதந்திரம் கொடுக்கப் படவும் நான் ஒரு காரணமாக இருப்பது, அதைவிட நிறைவாக உள்ளது.

எங்கள் குடிசையில் இருந்து இப்போது இன்னொரு பெண், பெங்களூரில் தடயவியல் படித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பல வெற்றியாளர்கள் வருவோம்’’ - மிடுக்கும் மகிழ்வுமாகச் சொல்கிறார் இளம்பெண் சஹீனா.

சஹீனாக்களே… வருக, வளர்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism