Published:Updated:

முயற்சி உடையாள் - 10 - உழவுத் தொழிலில் உயரம் எட்டலாம்... வழிகாட்டுகிறார் இயற்கை விவசாயி சித்தம்மா

சித்தம்மா
பிரீமியம் ஸ்டோரி
சித்தம்மா

விவசாயத்தை தொழிலாகத் தேர்வு செய்யும்போது, இயற்கை விவசாயமா, ரசாயன கலப்பட விவசாயமா... எதைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் இருக்கும்.

முயற்சி உடையாள் - 10 - உழவுத் தொழிலில் உயரம் எட்டலாம்... வழிகாட்டுகிறார் இயற்கை விவசாயி சித்தம்மா

விவசாயத்தை தொழிலாகத் தேர்வு செய்யும்போது, இயற்கை விவசாயமா, ரசாயன கலப்பட விவசாயமா... எதைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் இருக்கும்.

Published:Updated:
சித்தம்மா
பிரீமியம் ஸ்டோரி
சித்தம்மா

விவசாயி என்ற வார்த்தையை ஆண்பாலாக மட்டுமே பார்த்த காலம் இன்று மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டுப் பெண்கள் பெயரில் நிலங்கள் இருந்ததில்லை. வயலில் இறங்கி உழைத்தாலும் விவசாயி என்ற அடையாளம் பெண்களுக்குக் கொடுக்கப்படாமலேயே இருந்தது. இன்று காட்சிகள் மாறியிருக்கின்றன. எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்கள் விவசாயத்திலும் வீறுகொண்டு எழுந்து, சாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் விவசாயத்தில் சாதிக்க விரும்பும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள், அவற்றைக் கையாளும் வழிமுறைகள் போன்றவற்றை விளக்குகிறார், நம்மாழ்வார் வழிவந்த இயற்கை விவசாயி சித்தம்மா.

இயற்கை விவசாயமே பெஸ்ட்: விவசாயத்தை தொழிலாகத் தேர்வு செய்யும்போது, இயற்கை விவசாயமா, ரசாயன கலப்பட விவசாயமா... எதைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் இருக்கும். ரசாயன உரங்கள் பயன்பாட்டின் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் என்ற தவறான கருத்து நம் மனதில் விதைக்கப் பட்டுள்ளது. அது, ஆரம்பத்தில் மகசூல் தருவது போன்று தெரிந்தாலும், நம் மண்ணை மலடாக்கும், நம்மையும் கடனில் தள்ளிவிடும் என்பதே உண்மை. என் அப்பா, ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்து, கடனாளியாக மாறி, தற்கொலை முயற்சிக்குத் தள்ளப் பட்டார். எங்கள் குடும்பத்துக்கு விவசாயமே வேண்டாம் என முடிவெடுத்த நிலையில், நம்மாழ்வாரின் பேச்சு எனக்கு இயற்கை விவசாயம் மீதான நம்பிக்கையைக் கொடுத்தது. இயற்கை விவசாயத்தில் சில வருடங்கள் போராட்டமான சூழல் இருந்தாலும், இப்போது போதுமான லாபம் கிடைக்கிறது. எனவே மண்ணுக்கும், நமக்கும் நன்மை பயக்கும் இயற்கை விவசாயத்தை துணிந்து தேர்வு செய்யுங்கள். ஆரோக்கியமும், லாபமும் மெதுவாக உயரும்.

முயற்சி உடையாள் - 10 - உழவுத் தொழிலில் உயரம் எட்டலாம்... வழிகாட்டுகிறார் இயற்கை விவசாயி சித்தம்மா

விவசாயமும் வருமானம் தரும் வேலையே: அலுவலகம் சென்று பணி புரிவதைத்தான் வேலை என்று ஏற்றுக்கொள்கிறது சமுதாயம். ஆனால், விவசாயமும் வருமானம் தரும் வேலைதான் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. விவசாயம் செய்யப்போகிறேன் என்று சொன் னால், ‘அதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வெச்சேன்' என்பார்கள். நானும் இந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டேன். `விவசாயம் பண்ணி அப்பாவே கடன்காரர் ஆயிட்டார், உன்னால என்ன சாதிக்க முடியும்’ என்று கேட் டிருக்கிறார்கள். ஆனால், என் முடிவில் உறுதி யாக இருந்தேன். இயற்கையையும், உடல் உழைப்பையும் நம்பினேன். குழந்தைகளுடன் இருந்து அவர்களைப் பார்த்துக்கொள்ள நினைக்கும் அம்மாக்களுக்கு விவசாயம் இன்னும் பொருத்தமான தொழில். எனவே மற்றவர்களின் விமர்சனங்களைப் புறந்தள்ளி களத்தில் இறங்குங்கள். உங்கள் உழைப்பு உங்களின் அடையாளமாக மாறும்.

நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்: விவசாயக் குடும்பமாக இருந்தாலும், இயற்கை விவசாயம் எனக்குப் புதிது. நம்மாழ்வார் ஐயா, அதில் எனக்கு வழிகாட்டினார். எதை எங்கு சாகுபடி செய்ய வேண்டும், மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை, சிறுதானிய சாகுபடி, இயற்கை உரம் தயாரிப்பு என்று நிறைய விஷயங்கள் இருக்கின்றன. என்னுடைய நிலத்தை நான் வளப்படுத்தியபோது, நிலத்தின் ஒரு பகுதியில் நொச்சி மற்றும், மூங்கில்களை வளர்க்கும்படி சொன்னார் நம்மாழ்வார் ஐயா. காரணம், இவையெல்லாம் அதிக தண்ணீர், கவனம் இல்லாமல் தானாக வளரக்கூடியவை. மூங்கிலை நிலத்துக்கு வேலியாகப் பயன் படுத்தலாம். நொச்சியைக் காயவைத்து எரித்து சாம்பலாக்கி, நிலத்துக்கு உரமாக்கலாம். இது போன்று சின்ன சின்ன நுணுக்கங்களை உங்களுக்கு கற்பிக்க நிறைய இயற்கை விவசாய குழுக்கள் இருக்கின்றன. அவற்றில் இணைந்து கொள்ளலாம். நண்பர்களின் பண்ணைகளுக்குச் சென்று, களத்தில் இறங்கி நேரடியாக வேலை செய்தும் கற்றுக்கொள்ளலாம்.

இடத்தேர்வில் கவனம்: விவசாயம் செய்ய சொந்த இடம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேவைப்பட்டால் சொந்த இடம் வாங்கிக்கொள்ளலாம். முடியாதவர்கள், நிலங்களைக் குத்தகைக்கு எடுக்கலாம். எப்படிப் பட்ட இடத்தையும் பக்குவப்படுத்தி, வளம் மிகுந்ததாக மாற்றிவிட முடியும் என்றாலும், அது உங்களுக்குக் கூடுதல் வேலை. உதாரணமாக நான் விவசாயம் செய்வதென முடிவெடுத்து வாங்கிய இடம் கரடுமுரடாக இருந்தது. பல முறை நவதானியங்களை விதைத்து, மடித்து உழவு செய்தேன். அதன்பின் அந்த நிலத்தில் விவசாயம் சாத்தியமானது. இது கூடுதல் வேலை என்பதால் ஏற்கெனவே விவசாயம் செய்யும் நிலமாக இருந்தால் உங்களுக்கு எளிது. இடத்தைத் தேர்வு செய்யும் முன் அந்த இடத்தின் தண்ணீர் வளத்தையும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

அப்டேட் அவசியம்: இடைத்தரகர்களை நம்பாமல் நீங்களே உங்களின் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். நேரடியாகச் சந்தைகளில் விற்பனையைத் தொடங்குங்கள். இப்போதெல்லாம் ஆன்லைன் மூலமே பொருள்களை வெளிநாடுகள் வரை விற்பனை செய்ய முடிகிறது. விவசாயிகள் சிலரைக் கூட்டு சேர்த்து, ஓர் இணையதள பக்கம் தொடங்கி, ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம். உங்களை அப்டேட் செய்து கொண்டால் அதிக லாபம் சாத்தியம். மின் இணைப்பு வாங்குவது தொடங்கி, விவசாயி களுக்கான அரசின் சலுகைகளைப் பெறுவது வரை எந்தச் சிக்கலுக்கும், எந்தச் சூழலிலும் இடைத்தரகர்களை நம்பாமல், உங்கள் அருகில் இருக்கும் விவசாய அலுவலக அலுவலர்களை நேரடியாக அணுகுங்கள். மத்திய அரசும், மாநில அரசுகளும் விவசாயிகளுக்கும், விவசாய தொழில்களுக்கும், விவசாய எந்திரங்களுக்கும், வாகனங்களுக்கும் கடன்கள், மானியம் என நிறைய சலுகைகளை வழங்குகின்றன.அவற் றைத் தெரிந்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

முயற்சி உடையாள் - 10 - உழவுத் தொழிலில் உயரம் எட்டலாம்... வழிகாட்டுகிறார் இயற்கை விவசாயி சித்தம்மா

ஆரோக்கியத்திலும் அக்கறை: விவசாயத்துக்கு நிறைய உடல் உழைப்பு தேவை. வெயிலில் வேலை செய்வதால், வியர்வை மூலம் நிறைய தண்ணீர் இழப்பு ஏற்படும். எனவே ஆரோக்கிய மான உணவுகளை உண்ணுங்கள். புதிதாக மண்ணில் இறங்கி வேலை செய்யும்போது சிலருக்கு அலர்ஜி வரக்கூடும். இதுபோன்ற சூழலில் மருத்துவர்களைச் சந்தித்து அறிவுரை பெற்றுக்கொள்வது நல்லது.

திட்டமிட்டால் நஷ்டமில்லை: பாரம்பர்ய நெல் விதைகளைப் பயிரிடுவது சிறந்தது. பாரம்பர்ய நெல் ரகத்துக்கு நிலைத்து நிற்கும் தன்மை அதிகம் என்பதால், திடீர் மழைப்பொழிவில் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். கலப்பு பயிர்களை விதைப்பு செய்தால், பூச்சித்தாக்குதல், மழைப் பொழிவு போன்றவற்றிலிருந்து, ஒரு பயிர் உங்களைக் கைவிட்டாலும், மற்றொரு பயிர் உங்களுக்குக் கைகொடுக்கும். காய்கறிகள், பழங்கள் கலந்த உணவுக்காடு அமைப்பது கூடுதல் பாதுகாப்பு. மழைநீர் வயலில் தேங்கா மல் இருக்க, சரியான முறையில் வாய்க்கால்களைத் திட்டமிடுங்கள்.

- சாதிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism